செவ்வாய் பெயர்ச்சி பலன் 2024: ருச்சிக யோகம்.. உச்சம் பெறும் 6 ராசிக்காரர்கள்.. திடீர் ஜாக்பாட்
சென்னை: செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சி நடக்கிறது. ஏற்கனவே திருக்கணித பஞ்சாங்கப்படி சனிபகவான் அங்கே பெயர்ச்சியாகி ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாய் உச்சம் பெறப்போகிறார்.
செவ்வாய் பெயர்ச்சி பலன்: பத்தாம் வீட்டில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். கால புருஷ தத்துவப்படி மகர ராசி பத்தாம் வீடு, அந்த வீட்டின் அதிபதி சனி, மகர ராசி செவ்வாய்க்கு உச்சவீடு, குருவிற்கு நீச்ச வீடு. செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம், கடகம், துலாம், மகர ராசிக்காரர்களுக்கு ருச்சிக யோகம் கிடைக்கிறது. செவ்வாயின் பார்வை மேஷம், கடகம், சிம்மம் ராசிக்கு கிடைக்கிறது.

ருச்சிக யோகம்: இன்னும் சில நாட்களில் செவ்வாய் மகரம் ராசியில் உச்சம் பெற்று அமரப்போகிறார். இதனால் பஞ்சமகா புருஷ யோகமான ருச்சிக யோகம் உருவாகிறது. பிறந்த ஜாதகத்தில் செவ்வாய் பகவான் ஒருவரின் லக்னத்திலோ அல்லது 4,7,10 ஆம் வீட்டில் அமர்ந்து இருக்க அந்த வீடானது செவ்வாய்க்கு உச்சம் அல்லது ஆட்சி வீடாக இருந்தால் ருச்சிக யோகம் உண்டாகிறது. பெயர், புகழ் செல்வம் செல்வாக்கு அதிகமாகும். அரசாளும் யோகம் கூட தேடி வரும். உடல்பலமும் மன திடமும் கிடைக்கும். தயாள குணம் நிறைந்திருக்கும்.
12 ராசிகளுக்கும் பலன்: மேஷம் ராசி, மேஷம் லக்னத்திற்கு இது பத்தாம் வீடு, கடக ராசி லக்னத்திற்கு ஏழாம் வீடு, மகர லக்னம் ராசிக்கு ஒன்றாம் வீடு, துலாம் ராசி லக்னத்திற்கு இது நான்காம் வீடு. இதுநாள்வரைக்கும் வாழ்க்கை அதுபாட்டுக்கு போகுதேன்னு ஃபீல் பண்ணிட்டு இருந்த மேஷம், கடகம், துலாம், மகரம் ராசிக்காரங்களும் செவ்வாய் பார்வை கிடைக்கும் சிம்ம ராசிக்காரரும் இனி ரொம்ப நல்லா ஃபீல் பண்ணுவீங்க. செவ்வாய் இனி 12 ராசியிலும் என்னென்ன பலன்களை கொடுக்கப் போகிறார்னு பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசிக்கு பத்தாவது வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போகிறார். அவருடைய பார்வையும் உங்களுக்கு கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீங்க. உடல் நலத்தில இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நல்ல தொழில் அமையும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் கிடைக்கும். சொத்துப்பிரச்சினை தீரும். விற்காமல் இருந்த நிலங்களை நல்ல லாபத்திற்கு விற்கலாம். செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்குங்கள் நன்மைகள் நடக்கும்.
ரிஷபம்: உங்க ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் பகவான் அமர்வதால் தொலைதூர பயணங்கள் ஏற்படும் ஆனாலும் இப்ப இருக்கிற சூழ்நிலையில வெளிநாடு பயணம் வேண்டாம் கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். அப்பாவின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதிய சொத்து வாங்குவீர்கள். வெள்ளிக்கிழமையில் துர்க்கைக்கு தீபம் ஏற்றி வணங்கினால் நன்மைகள் நடக்கும்.
மிதுனம்: செவ்வாய் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்வது சிறப்பானது இல்லை. கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். கூர்மையான பொருட்களையும் நெருப்பு, மின்சாரச் சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படும். கவனம் இல்லாமல் இருந்து விட்டு பின்னர் அய்யோ ஷாக்கடித்து விட்டதே என்று பதற வேண்டாம். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்கள் குடும்பத்தினரிடம் பேசும் போது கவனமாக பேசவும். பணம் விசயத்தில் கவனமாக இருங்க செவ்வாய் கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கவும்.
கடகம்: இதுநாள் வரை ஆறாவது வீட்டில் சுக்கிரன், புதன் உடன் அமர்ந்து இருந்த செவ்வாய் பகவான் இனி 7வது வீட்டில் சூரியனுடன் அமரப்போகிறார். உச்சம் பெற்ற செவ்வாய் உங்களுக்கு ருச்சிக யோகத்தை தரப்போகிறார். ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். சந்தோஷங்கள் நிறைந்த காலமாக மாறப்போகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். குழந்தைகளுடன் உற்சாகமாக பொழுதை போக்குவீர்கள். கணவன் மனைவி இடையே வீண் விவாதங்களை தவிர்த்தால் போதும் அமைதி பூங்காவாக வீடு திகழும். செவ்வாய் சூரியனுடன் அமர்வதால் உணவில் கட்டுப்பாடு அவசியம்.
சிம்மம்: உங்களுடைய ராசிக்கு 6வது வீட்டிற்கு இடம் பெயரும் செவ்வாய் பகவான் உங்களுடைய ராசியை பார்க்கிறார். 12ஆம் வீடு, ஒன்பதாம் வீடுகளின் மீது செவ்வாய் பார்வை விழுகிறது. வீடு, மனை வாங்குவீர்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வேலைக்காக பயணம் செய்வீர்கள். குடும்பத்திலோ, வேலை செய்யும் இடத்திலோ பிரச்சினைகள் ஏற்படும் பேச்சில் கவனமாக இருங்க. அரசு போட்டி தேர்வுகள் எழுதலாம்
கன்னி: உங்களுடைய ராசிக்கு 4வது வீட்டில் புதன் சுக்கிரன் உடன் இருந்த செவ்வாய் இனி சூரியனோடு சேர்ந்து உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். உஷ்ணமான உணவுகளை சாப்பிடாதீர்கள். மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். சகோதரியின் திருமணத்தை போராடி முடிப்பீர்கள். சொத்து விற்பது, வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன பயணங்கள் செல்வீர்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளின் உடல்நலனில் அக்கறை தேவை.
துலாம்: செவ்வாய் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து ருச்சிக யோகத்தை தரப்போகிறார். உங்களுக்கு ரொம்ப நன்மையை செய்வார். பண வரவு அதிகரிக்கும். வேலை, தொழிலில் லாபமும் புரமோசனும் ஏற்படும். ஆனால், வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். அம்மாவிற்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். நடராஜரை உத்திரம் நட்சத்திரம் நாளில் சென்று வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.
விருச்சிகம்: உங்கள் ராசி அதிபதி செவ்வாய் 3வது வீட்டில் குடியேறியுள்ளதால் உடன் பிறந்தவர்களின் ஒத்துழைத்தும், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் வந்து வீட்டுக்கதவை தட்டும். முயற்சி ஸ்தானமான 3ஆம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டுமனை வாங்குவீர்கள்.
தனுசு: செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 2ஆம் வீட்டில் சூரியனுடன் அமரப்போவதால் சிலர் புதிய வீடு மாறலாம். இடமாற்றம் ஊர் மாற்றம் கூட ஏற்படும். உறவினர்களுடன் அன்போடும், பாசத்துடனும் பழகுங்கள். பேச்சில் கவனமாக இருங்க யாரிடமும் கோபமாக பேசவேண்டாம். சகோதரர், சகோதரிகளிடம் விட்டுக்கொடுத்து போங்கள். வீண் விவாதங்களை தவிருங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனம் தேவை.
மகரம்: செவ்வாய் உங்க ராசிக்கு 4, 11ஆம் வீட்டு அதிபதி உங்களுடைய ராசியில் உச்சம் பெற்று அமர்வதால் பொலிவு அதிகமாகும். சூரியன் உங்களுடைய வீட்டில் குடியேறியுள்ள நிலையில் கூடவே செவ்வாயும் இணையப்போகிறார். உங்க ராசி லக்னத்தில் செவ்வாய் உச்சம் பெற்று அமரப்போவதால் உங்களுக்கு ராசிக்கு ருச்சிக யோகம் கிடைக்கிறது. பணவருமானம் வரும். வேலைப்பளுவும் அதிகமாகும். கல்யாண வாழ்க்கையோ காதல் வாழ்க்கையோ கவனமாக இருக்க வேண்டும். டென்சன் தேவையில்லை. உங்களுக்கு ஏதோ பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். அப்படி எல்லாம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. பாதிப்புகள் குறைய புற்றுள்ள கோவிலுக்கு சென்று வணங்கி வாருங்கள்.
கும்பம்: எதிர்பாராத செலவுகள் வரலாம் காரணம் விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சனியோடு சஞ்சரிக்கிறார். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். திடீர் வெளிநாடு வாய்ப்புகள் வரலாம் நிறைய பேர் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவீர்கள். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் இதுவே உங்க மண வாழ்க்கையை பாதிக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வேலையில் உற்சாகமாக இருப்பீர்கள். தொழிலில் வருமானம் அதிகமாக இருக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க.
மீனம்: ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவி செய்வார்கள். தொலைதூர பயணங்கள் செல்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்களுடைய நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு பிள்ளைகளும் குடும்பத்தினரும் முக்கியத்துவம் தருவார்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்க காதல் வாழ்க்கையில் உற்சாகம் பிறக்கும். புதிய உறவுகள் சந்தோஷத்தை கொடுக்கும். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications