மீனத்தில் சந்திரன்... சிம்மத்திற்கு சந்திராஷ்டமம் - 12 ராசிக்கு பலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஏழரை.. அட்டம சனியா? சனி பகவான் அருள் கிடைக்கும் மந்திரம்- வீடியோ

    சென்னை: இன்றைய தினம் மீனம் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. சிம்மம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

    கும்ப ராசியில் சூரியன் உடன் புதன், சுக்கிரன் அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய்,கடகத்தில் ராகு மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

    சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் நீடிப்பதால் வீண் விதண்டாவாதம் பேசாமல் வீட்டிலும் அலுவலகத்திலும் அமைதி காக்கவும்.

    மேஷம்

    மேஷம்

    ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால்
    எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரதில் லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்:9 ராசியான நிறங்கள்:மெரூண்,வெள்ளை

    ரிஷபம்

    ரிஷபம்


    ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் நீடிப்பதால்
    வேற்றுமதத்தவர் உதவுவார். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ராசிநாதன் சுக்கிரன் நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்:7 ராசியான நிறங்கள்:மயில்நீலம்,பிங்க்

    மிதுனம்

    மிதுனம்

    ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். உங்கள் ராசிநாதன் புதன் சூரியனுடன், சுக்கிரனுடன் இணைந்து ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் முன்னேற்றத்தைத் தரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். ராசியான எண்:4 ராசியான நிறங்கள்:ஆலிவ்பச்சை,ரோஸ்

    கடகம்

    கடகம்


    ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ராசியான எண்:2 ராசியான நிறங்கள்:இளஞ்சிவப்பு,க்ரீம்வெள்ளை

    சிம்மம்

    சிம்மம்

    இன்று 8வது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் டென்ஷனாவீர்கள். ராசியான எண்:5 ராசியான நிறங்கள்:அடர்சிவப்பு,கிரே

    கன்னி

    கன்னி

    சந்திரன் இன்றைக்கு 7வது வீட்டில் அமர்ந்துள்ளார். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும்.எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். ராசியான எண்:3 ராசியான நிறங்கள்:ரோஸ்,வைலெட்

    துலாம்

    துலாம்

    சந்திரன் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். ராசியான எண்:1 ராசியான நிறங்கள்:ஆரஞ்சு,ஊதா

    விருச்சிகம்

    விருச்சிகம்

    சந்திரன் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் அமர்ந்துள்ளார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் அதிகரிக்கும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் பங்குச்சந்தையில் முதலீடுகள் சிறப்பைத் தரும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். ராசியான எண்:6 ராசியான நிறங்கள்:இளஞ்சிவப்பு,பிங்க்

    தனுசு

    தனுசு

    சந்திரன் உங்கள் ராசிக்கு 4வது இடத்தில் இருக்கிறார். கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நடக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ராசியான எண்:9 ராசியான நிறங்கள்:ப்ரவுன்,வெளிர் நீலம்

    மகரம்

    மகரம்

    சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் அமர்ந்துள்ளார். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் மூலம் பண வரவு அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருப்பதால் மனைவியால் நன்மை உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வண்டி வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். ராசியான எண்:8 ராசியான நிறங்கள்:கிரே,இளஞ்சிவப்பு

    கும்பம்

    கும்பம்

    ராசிக்கு 2வது இடத்தில் சந்திரன் நீடிப்பதால்
    சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வர வேண்டிய பணம் கைக்கு வரும். சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் அதிகாரப் பதவி கிடைக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆசிரியப் பணி சிறப்படையும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். ராசியான எண்:5 ராசியான நிறங்கள்:ப்ரவுன்,கிளிப்பச்சை

    மீனம்

    மீனம்

    ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். அலுவலகத்தில் இன்று அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். ராசியான எண்:2 ராசியான நிறங்கள்:சில்வர் கிரே,ஊதா.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+