கன்னி ராசிக்காரர்களே மவுன விரதம் இருங்க- 12 ராசிக்கும் இன்றைய பலன்கள்

கன்னி ராசிக்காரர்களே மவுன விரதம் இருங்க- 12 ராசிக்கும் இன்றைய பலன்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உங்கள் ராசிப்படி நீங்கள் இந்த பழக்கத்தை விட வேண்டும்...வீடியோ

    சென்னை: இன்றைக்கு செவ்வாய்கிழமை பிப்ரவரி 20வது நாள் மாசி மாதம் 8ஆம் தேதி 12 ராசிகளுக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.

    மேஷ ராசியில் சந்திரன் நுழையப் போகிறார். கடகத்தில் சந்திரன், துலாமில் குரு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது, கும்பம் ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் என இன்றைய கிரக நிலை அமர்ந்துள்ளது.

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் அமைதி காப்பது நல்லது.

    மேஷம்

    மேஷம்

    உங்கள் ராசிக்குள் இன்று பிற்பகல் முதல் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். தொழில் வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

    பரணி நட்சத்திரக்காரர்கள் இன்றைக்கு அதிகம் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 3.

    ரிஷபம்

    ரிஷபம்

    ராசிக்கு 12வது இடத்தில் சந்திரன் வருவதால் விரைய செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் இன்றைக்கு வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். போராடி வெற்றி பெறும் நாள். ராசியான நிறம் வெண்மை, ராசியான எண் 6

    மிதுனம்

    மிதுனம்

    ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். மிக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணம் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். இன்றைக்கு நல்ல செய்திகள் தேடி வரும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இனிமையான நாள்.

    ராசியான நிறம் அடர் பச்சை, ராசியான எண் 5.

    கடகம்

    கடகம்

    இன்றைக்கு உங்களின் தொழில் ஸ்தானமான 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்றைக்கு நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள், ஆனாலும் அது சரியானதாகவே இருக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். இன்றைக்கு சாதிக்கும் நாள்.

    ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 7.

    சிம்மம்

    சிம்மம்

    ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் அமர உள்ளதால் நல்லதே நடக்கும். மதியம் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் பிற்பகல் முதல் நீங்கும். அசதி, சோர்வு, கோபம் அனைத்தும் விலகி குடும்பத்தில் அமைதி திரும்பும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் வருகையினால் மகிழ்ச்சி ஏற்படும். குரு பகவான் உங்கள் முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர்ந்துள்ளதால் வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். 7வது வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன் அமர்ந்துள்ளதால் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

    ராசியான நிறம் அடர் மஞ்சள், ராசியான எண் 6.

    கன்னி

    கன்னி

    உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர உள்ளார். பிற்பகல் முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அலுவலகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். மறைவு ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் மறைந்துள்ளதால் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

    அலுவலகத்தில் அமைதியாக இருக்கவும். ராசியான நிறம் இளம் பச்சை, ராசியான எண் 8.

    துலாம்

    துலாம்

    ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் இன்றைக்கு சவாலான விஷயங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். ஜென்ம குருவினால் சில சங்கடங்கள் இருந்தாலும் திறமைகள் வெளிப்படும் நாள்.

    ராசியான நிறம் நீலம், ராசியான எண் 9.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    ராசிக்கு 6வது வீட்டில் இன்று சந்திரன் மறைகிறார். ராசிக்குள் செவ்வாய் அமர்ந்துள்ளார். இரண்டாவது வீட்டில் அமர்ந்துள்ள சனியால் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். 4வது வீட்டில் அமர்ந்துள்ள சூரியன், சுக்கிரன், புதனால் அரசினால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். மூன்றாவது இடத்தில் அமர்ந்துள்ள கேதுவினால் ஆன்மீக பயணம் ஏற்படும். இன்றைக்கு தொட்டது துலங்கும் நாள்.

    ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 2.

    தனுசு

    தனுசு

    ராசிக்கு 5வது வீட்டில் அமர உள்ள சந்திரனால் பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. ஜென்ம சனி இருப்பதால் சற்றே நிதானம் தேவை. மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். இரண்டாம் வீட்டில் கேது அமர்ந்துள்ளார். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கனவு நனவாகும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 4.

    மகரம்

    மகரம்


    ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர உள்ளதால் வண்டி வாகனங்கள் பழுது நீக்கம் செய்வீர்கள். இன்றைய தினம்
    திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய நண்பர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நண்பர்கள் இன்றைக்கு உதவி செய்வார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அலுவலகத்தில் வேலையில் திருப்தி உண்டாகும். ராசியான நிறம் மெரூண், ராசியான எண் 1.

    கும்பம்:

    கும்பம்:

    ராசிக்கு 3 வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். எதையும் துணிச்சலாக செய்வீர்கள். வேலை விசயமாக சில முக்கிய முடிவுகள் இன்றைக்கு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு இன்றைக்கு பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

    ராசியான நிறம் கறுப்பு, ராசியான எண் 6.

    மீனம்:

    மீனம்:

    பிற்பகல் வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீணான டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் சந்திரன் உங்களுக்கு 2வது வீட்டில் அமர உள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இரண்டாம் வீட்டிற்குள் சந்திரன் நுழைவதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்த பிரச்சினை இன்று முதல் நீங்கும் இழந்த உரிமையை பெறுவீர்கள். ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 3.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+