ரிஷபத்தில் நுழையும் சந்திரன்... துலாமிற்கு சந்திராஷ்டமம்!

ரிஷபம் ராசியில் இன்றைய தினம் சந்திரன் நுழையப் போகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்க உள்ளது. 12 ராசிக்காரர்களுக்கும் இன்று பலன்கள் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    உங்கள் ராசிப்படி நீங்கள் இந்த பழக்கத்தை விட வேண்டும்...வீடியோ

    சென்னை: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பிப்ரவரி 22ஆம் தேதியன்று பலன்களை பார்க்கலாம்.

    இன்று மாலை வரை மேஷம் ராசியில் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ள சந்திர பகவான், ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார். கடகத்தில் ராகு, துலாமில் குரு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது, கும்பம் ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் என இன்றைய கிரக நிலை அமர்ந்துள்ளது.

    கன்னி ராசிக்காரர்களுக்கு மாலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்கப் போகிறது. அமைதியாக இருக்கலாம்.

    மேஷம்

    மேஷம்

    சந்திரன் உங்கள் ராசிக்குள் மாலைவரை தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டும். சூரியன், சுக்கிரன், புதன் லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளனர். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். கடகத்தில் ராகு நீடிப்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். அலுவலகத்தின் இன்று வேலைகளை போராடி முடிக்க வேண்டி வரும். ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

    ரிஷபம்

    ரிஷபம்

    ராசிக்குள் இன்றைய தினம் சந்திரன் வர உள்ளதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். 10வது வீட்டில் சூரியன், சுக்கிரன் அமர்ந்துள்ளதால் தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். அலுவலகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துச் செல்லும். எதிலும் நிதானத்துடன் செயல்படுங்கள். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: ரோஸ், கிரே

    மிதுனம்

    மிதுனம்

    ராசிக்குள் 12வது வீட்டில் சந்திரன் வரப்போவதால் செலவுகள் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் மாலை வரை சந்திரன் அமர்ந்துள்ளார். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். ராசியான எண்: 8 ராசியான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

    கடகம்

    கடகம்

    சந்திரன் ராசிக்கு 11வது வீட்டில் அமர உள்ளதால் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். குரு பகவான் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்துள்ளார். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

    சிம்மம்

    சிம்மம்

    இன்றைய தினம் ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர உள்ளதால் அலுவலகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ராசிக்கு 12வது வீட்டில் ராகு அமர்ந்துள்ளதால் புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். ராசியான எண்: 5 ராசியான நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

    கன்னி

    கன்னி

    ராசிக்கு 8வது வீட்டில் மாலைவரை சந்திரன் அமர்ந்துள்ளார். மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். 9வது வீட்டிற்குள் சந்திரன் செல்லப்போவதால் சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. ராசியான எண்: 3 ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

    துலாம்

    துலாம்

    ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமரப் போகிறார். இன்றைய தினம் அமைதி காக்கவும். சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். ராசியான எண்: 1 ராசியான நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

    விருச்சிகம்

    விருச்சிகம்

    ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர உள்ளதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வீட்டில் பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். இன்றைக்கு உங்களின் உதவியால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். ராசியான எண்: 9 ராசியான நிறங்கள்: பச்சை, இளம் மஞ்சள்

    தனுசு

    தனுசு


    ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமரப் போகிறார். இன்றைய தினம் உங்களின்
    குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுக் கிட்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். புது நட்பு மலரும். தொழில் வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றி விட். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ராசியான எண்: 2 ராசியான நிறங்கள்: மெரூண், வெள்ளை

    மகரம்

    மகரம்

    உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமரப்போகிறார். அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் சகோதரி உதவுவார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ராசிக்கு 10வது வீட்டில் குரு அமர்ந்துள்ளார் புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். அலுவலகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். ராசியான எண்: 4 ராசியான நிறங்கள்: நீலம், ரோஸ்

    கும்பம்

    கும்பம்


    இன்றைய தினம் சந்திரன் 4வது வீட்டிற்குள் வரப்போகிறார். தாயார் உடல்நலத்தில் கவனம் தேவை.
    குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டப்படுவீர்கள். ராசியான எண்: 6 ராசியான நிறங்கள்: அடர் பச்சை, பிங்க்

    மீனம்

    மீனம்

    தன ஸ்தானத்தில் உள்ள சந்திரன் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் நுழைகிறார். நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகும் முகப்பொலிவும் அதிகரிக்கும். 12வது வீட்டில் சுக்கிரன், சூரியன் அமர்ந்துள்ளதால் இன்றைக்கு விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். லாப ஸ்தானத்தில் கேது அமர்ந்துள்ளதால் தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ராசியான எண்: 7 ராசியான நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+