விருச்சிகத்தில் சந்திரன் மேஷத்திற்கு சந்திராஷ்டமம்- இன்றைய ராசிபலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருச்சிக ராசியில் இன்றைய தினம் சந்திரன் அமர்ந்துள்ளார். மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு 12 ராசிக்கும் பலன்களை அறிந்து கொள்வோம்.

மகரத்தில் சூரியன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய் உடன் சந்திரன் அமர்ந்துள்ளார். கும்பம் ராசியில் சுக்கிரன் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

மேஷம் ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வீண் வாதம் செய்யாமல் அமைதி காக்கவும்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சந்திராஷ்டமம் தொடங்குவதால் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். அலுவலகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

ராசியான எண்:7

ராசியான நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்.

ரிஷபம்

ரிஷபம்

உங்கள் ராசிக்கு ஏழாவது இடத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைய தினம் குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். புது பொறுப்பை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.

ராசியான எண்: 5

ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு ஆறாவது இடத்தில் சந்திரன் மறைந்துள்ளார். நீசமடைந்துள்ள சந்திரன் மறைந்திருக்கிறார். சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அலுவலகத்தில் உங்களின் உழைப்பிற்கு இன்று பாராட்டு கிடைக்கும்.

ராசியான எண்: 2

ராசியான நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

கடகம்

கடகம்

ராசிக்கு ஐந்தாவது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளது சாதகமான அம்சம். சனியும் சாதகமாக 6வது வீட்டில் அமர்ந்துள்ளார். இன்றைக்கு வீட்டில் உங்கள் கை ஓங்கும். குழந்தைகள் உங்களின் சொல் பேச்சு கேட்பார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

ராசியான எண்: 4

ராசியான நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு நான்காவது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைய தினம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். காதலை சொல்ல நல்ல நாள் இது. இன்றைக்கு தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் உரிமையை நிலைநாட்டுவீர்கள்.

ராசியான எண்:1

ராசியான நிறங்கள்:மெரூண், வெள்ளை

கன்னி

கன்னி


ராசிக்கு மூன்றாவது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளது சிறப்பம்சம்.
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள்.

ராசியான எண்:2

ராசியான நிறங்கள்:மயில்நீலம், பிங்க்

துலாம்

துலாம்

ராசிக்கு இரண்டாவது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த டென்சன் தீர்ந்து விடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கடந்த இரண்டு நாட்களாக அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள் வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

ராசியான எண்:6

ராசியான நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்

விருச்சிகம்

விருச்சிகம்

இன்றைய தினம் சந்திரன் நீச்ச கதியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசியில் உச்சமடையும் சந்திரன் விருச்சிக ராசியில் நீச்சமடைகிறார். ராசியில் ஏற்கனவே செவ்வாய் அமர்ந்துள்ளார். செவ்வாய் சந்திரனுடன் சேரும் போது சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது.சந்திரன் நுழைவதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். மனக்குழப்பமாக இருக்கும். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். அலுவலகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.

ராசியான எண்:8

ராசியான நிறங்கள்:இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

தனுசு

தனுசு

ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். மறைமுக விமர்சனங்கள் வரும் சமாளிக்க பழகுங்கள், தாழ்வுமனப்பான்மை வரும், தூக்கி தூரப்போடுங்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் செல்வது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செவ்வாய் விரைய ஸ்தானத்தில் பயணிப்பதால் வண்டி வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.

ராசியான எண்:7

ராசியான நிறங்கள்:அடர்சிவப்பு, கிரே.

மகரம்

மகரம்

ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் பயணிப்பது நன்மை தரும் அமைப்பாகும். செவ்வாய் உடன் சந்திர மங்கள யோகத்தில் அமர்ந்துள்ளார். தொட்டது துலங்கும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள்.

ராசியான எண்:3

ராசியான நிறங்கள்:ரோஸ், வைலெட்

கும்பம்

கும்பம்

ராசிக்கு பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளது சிறப்பான அம்சம். உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன், கேது உள்ளிட்ட மூன்று கிரகங்கள் உள்ளன. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

ராசியான எண்:9

ராசியான நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா

மீனம்

மீனம்

கடந்த 2 நாட்களாக இருந்த சந்திராஷ்டமத்தில் கொதிநிலை மனதில் இருந்தீர்கள். இன்றைக்கு வீட்டில் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எடுத்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். இரண்டு நாட்களாக வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும் மேலதிகாரி உதவுவார்.

ராசியான எண்:5

ராசியான நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+