துலாம் ராசிக்காரர்களே! வீட்டில் ரொமான்ஸ் அதிகரிக்கும் - இன்றைய பலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விருச்சிக ராசியில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி என பார்க்கலாம்.

மகரத்தில் சூரியன், புதன், கேது அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு தனுசு ராசியில் சனி பகவான், விருச்சிகத்தில் செவ்வாய் உடன் சந்திரன் அமர்ந்துள்ளார். கும்பம் ராசியில் சுக்கிரன் என இன்றைய தினத்தில் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

மேஷம் ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் நீடிக்கிறது. வீண் விதண்டாவாதம் பேசாமல் வீட்டிலும் அலுவலகத்திலும் அமைதி காக்கவும்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் செவ்வாயுடன் இருக்கிறார். சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருக்கும். உதவிக் கேட்டு உறவினர், நண்பர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊரியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் எதையும் அநாவசியமாக பேச வேண்டாம் அமைதி காப்பது நல்லது.

ராசியான எண்: 2

ராசியான நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு ஏழாவது வீட்டில் சந்திரன் செவ்வாயுடன் சஞ்சாரம் செய்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. 10ஆம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் வீட்டிற்கு விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

ராசியான எண்: 6

ராசியான நிறங்கள்: ரோஸ், கிரே

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். இன்றைய தினம் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும்.

ராசியான எண்: 4

ராசியான நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கடகம்

கடகம்

ராசிக்கு 5வது வீட்டில் செவ்வாயுடன் சந்திரன் இணைந்துள்ளதால் குழந்தைகளால் நன்மைகள் ஏற்படும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். 6ஆம் வீட்டில் உள்ள சனியால் எதிரிகள் தொல்லை நீங்கும்.

ராசியான எண்: 7

ராசியான நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் பயணிப்பதால் இன்றைக்கு நீங்கள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் இன்றைக்கு லாபமடைவீர்கள். அலுவலகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.

ராசியான எண்: 9

ராசியான நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

கன்னி

கன்னி

ராசிக்கு 3வது வீட்டில் உள்ள செவ்வாயுடன் சந்திரன் பயணிப்பதால் இன்றைக்கு உங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

ராசியான எண்: 8

ராசியான நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

துலாம்

துலாம்

இன்றைய தினம் குடும்ப ஸ்தானத்தில் செவ்வாயுடன் சந்திரன் பயணிப்பதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.

ராசியான எண்: 3

ராசியான நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் குழப்பம் அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். தொழிற்சாலையில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் இன்றைக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ராசியான எண்: 1

ராசியான நிறங்கள்: பச்சை, மஞ்சள்

தனுசு

தனுசு

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் பயணிப்பதால் செலவுகள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.

ராசியான எண்: 3

ராசியான நிறங்கள்: மெரூண், வெள்ளை

மகரம்

மகரம்

இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் சந்திரனின் பயணம் உள்ளது. ஏற்கனவே செவ்வாயும் அங்கே சஞ்சாரம் செய்து வருகிறார். தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்து கொடுப்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ராசியான எண்: 5

ராசியான நிறங்கள்: நீலம், பிங்க்

கும்பம்

கும்பம்

ராசிக்கு 10வது இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரனின் பயணம் உள்ளது. இன்றைக்கு உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைத் தருவீர்கள்.

ராசியான எண்: 2

ராசியான நிறங்கள்: பச்சை, ரோஸ்

மீனம்

மீனம்

ராசிக்கு 9வது வீட்டில் இன்றைக்கு சந்திரனின் பயணம் உள்ளது. தந்தையின் உடல் நலத்தில் அக்கறை தேவை.
கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மீக பயணமாக புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தாரிடம் கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் இன்றைக்கு திடீர் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

ராசியான எண்: 4

ராசியான நிறங்கள்: இளஞ்சிவப்பு, வெள்ளை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+