Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொன்னான புதன்கிழமையில் சிம்ம ராசிக்காரங்க மவுன விரதம் இருங்க... - இன்றைய ராசிபலன்

மீனம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை இன்றைக்கு எந்த ராசிக்கு பலன் என பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதம் 16 ஆம் தேதி, புதன்கிழமை, சதுர்த்தி திதி காலை 10.23 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 11.25 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் பகல் 11.25 வரை பின்பு சித்தயோகம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

இன்றைய தினம் சந்திரனின் சஞ்சாரம் மீனம் ராசியில் உள்ளது. கடகம் ராசியில் சூரியன், ராகு, புதன், சிம்மத்திற்கு கன்னி ராசிக்கு சுக்கிரன் நகர்கிறார். துலாம் ராசியில் குருபகவான், தனுசு ராசியில் சனிபகவான் மகரம் ராசியில் கேது செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் வீட்டிலும் வெளியிடத்திலும் அமைதி காப்பது நல்லது. மீனம் ராசிக்காரர்களும் மனக்கலக்கம் தீர ஆலய தரிசனம் செய்யலாம்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பணம் வரவு வந்தாலும் வீணான செலவுகள் ஏற்படும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். முயற்சிகளினால் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பழைய கடன்கள் வசூலாகும். ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண்கள் 2, 7.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 11வது இடமான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று பணவரத்து கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சொத்து சேர்க்கை உண்டாகும். ராசி அதிபதி சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் இடம் பெயர்கிறார் சிறுபயணம் செல்வீர்கள். ராசியான நிறம், பச்சை ராசியான எண்கள் 2, 7.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 10 இடமான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும். ராசியான நிறம் ஆரஞ்சு, ராசியான எண்கள் 1, 3.

கடகம்

கடகம்

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். கடந்த 2 நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் பிரச்சினைகள் தீரும். பெற்றோர்கள் உடல் நலனில் அக்கறை தேவை. ராசிக்கு 3வது வீட்டிற்கு சுக்கிரன் பெயர்ச்சியடைகிறார் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். இன்று கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும், கடன் பிரச்சனை தீரும். ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண்கள் 4, 6.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். இன்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணங்களை தவிர்க்கவும். சில முக்கியமான பணிகளை அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள்: 3, 5.

கன்னி

கன்னி

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்கிறார். உங்கள் ராசியை சந்திரன் நேரடியாக பார்ப்பதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் கைக்கு கிடைக்கும். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண்கள் 2, 6.

துலாம்

துலாம்

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும், ராசியான நிறம் ஆரஞ்சு, வெளிர் பச்சை ராசியான எண்கள்: 1, 5.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று சில முக்கியமான காரியங்களை அதிக உழைப்பினால் செய்து முடிப்பீர்கள். வெளியூருக்கு பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 3, 5.

தனுசு

தனுசு

ராசிக்கு 4வது வீடான சுக ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். இன்று உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். தந்தை மூலம் உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை செலுத்தவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். சகோதரர்களுக்குள் ஒற்றுமை குறையும். ராசியான நிறம் பச்சை, மஞ்சள், ராசியான எண்கள் 2, 7.

மகரம்

மகரம்

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். இன்று எதை பற்றியும் கவலைப்படாமல் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். ராசியான நிறம் வெள்ளை, இளஞ்சிவப்பு. ராசியான எண்கள்: 3, 9.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளார். கடந்த 2 நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும்.

இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். உங்களது பொருட்களின் மீது கவனம் தேவை. சாதுரியமான செயல்களால் லாபம் உண்டாகும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை, ராசியான எண்கள் 2, 6.

மீனம்

மீனம்

ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளார் சற்றே மனக்கலக்கம் ஏற்படும். உடலில் அசதி ஏற்படும். பெரியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும். எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஒதுங்கி போனால் கூட வலுக்கட்டாயமாக எதிலாவது ஈடுபட உறவினர்கள் தூண்டுவார்கள். கவனமாக அதை தவிர்ப்பது நல்லது. ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண்கள் 5, 9.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+