கடகத்திற்கு சந்திராஷ்டம் வம்புக்கும் போகாதீங்க - 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு லக் எப்படி?
திங்கட்கிழமையான இன்று சந்திரன் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருக்கவும்.
சென்னை: மனோகாரகன் சந்திரனின் சஞ்சாரம் இன்றைய தினம் கும்பம் ராசியில் உள்ளது. கும்பம் ராசிக்காரர்கள் இன்றைய தினம் கவனமாக இருக்கவும்.
இன்றைய தினம் மிதுனத்தில் சூரியன், கடகத்தில் சுக்கிரன், புதன், ராகு, துலாம் ராசியில் குருபகவன், தனுசு ராசியில் சனி பகவான், மகரம் ராசியில் கேது, செவ்வாய், கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.
கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மவுன விரதம் இருப்பது நல்லது. எந்த வம்புக்கும் போகாமல் அமைதியாக இருந்தாலே போதும் பிரச்சினைகள் வர வாய்ப்பு இல்லை.

மேஷம்
ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. பணம் வரும் வாய்ப்பு அதிகம்.வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை, ராசியான எண்கள் 5, 6.

ரிஷபம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். வீட்டில் சின்னச் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்களிடையே சுமூக உறவு ஏற்பட விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 4, 6

மிதுனம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பணம் வந்தாலும் எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படும். ராசியான நிறம் சிவப்பு, வெளிர் நீலம் ராசியான எண்கள் 2, 9.

கடகம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று பகல் 11-07 மணி முதல் 04-07-2018 அன்று இரவு 10-54 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.இன்று வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். ராசியான நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் ராசியான எண்கள் 4, 8.

சிம்மம்
ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இன்று கூட்டுத் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை, ராசியான எண் 4, 5.

கன்னி
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்துள்ளதால் நோய் பாதிப்புகள் ஏற்படும். இன்றைய தினம் யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். இன்று நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சு திறமை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். கணவர், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை, ராசியான எண் 5, 6.

துலாம்
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்றைய தினம் பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்டவும். வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். இன்றைய தினம் பூர்வீக சொத்துக்களை விற்க முயற்சி செய்யலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ராசியான நிறம் நீலம், பச்சை, ராசியான எண்கள் 3, 7.

விருச்சிகம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் வண்டி, வாகன பழுது பார்க்க செலவு செய்வீர்கள். உங்களின் பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் காரியத்தில் தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். ராசியான நிறம் சிவப்பு, அடர் நீலம் ராசியான எண்கள் 1,9.

தனுசு
ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். தடைகளை தாண்டி காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண் 4, 5.

மகரம்
ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். ராசியான நிறம் மஞ்சள் ராசியான எண் 5,7.

கும்பம்
ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளதால் சற்றே மனக்குழப்பமாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு பாராட்டு வாங்குவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகை உண்டு. ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு. ராசியான எண்கள் 2, 3.

மீனம்
ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சின்னச் சின்ன செலவுகள் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை செய்யலாம். உத்தியோகத்தில் சிலருக்கு இடம் மாறுதல் கிடைக்கலாம்.ராசியான நிறம் ப்ளூ, ராசியான எண் 1, 3.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications