Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த ராசிக்காரர்களுக்கு குதூகலம்.... வருமானம் யாருக்கு? - இன்றைய ராசிபலன்

மங்களகரமான செவ்வாய்கிழமையான இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் அதிர்ஷ்டம், என்ன நம்பர் அதிர்ஷ்டம் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய் பகவான் மகரத்தில் உச்ச நிலையில் இருக்கும் இன்றைய தினத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

மிதுனத்தில் சூரியன், கடகத்தில் சுக்கிரன், ராகு, புதன் என கிரகங்கள் கூட்டணி சேர்ந்து அமர்ந்துள்ளனர். துலாம் ராசியில் குரு, தனுசு ராசியில் சனி மகரத்தில் கேது செவ்வாய், கும்பத்தில் சந்திரன் என இன்றைய தினம் கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

கும்ப ராசிக்காரர்களும், கடகம் ராசிக்காரர்களும் இன்றைய தினம் வாயை மூடி அமைதியாக இருந்தாலே போதும் வம்புகள் தேடி வராது.

எந்த ராசிக்கு எந்த கலர் லக், எந்த நம்பர் அதிர்ஷ்டம் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இன்று குல தெய்வ கோவிலுக்கு சென்று வரலாம். புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். இந்த நாள் இனிமையான நாள், ரொமான்ஸ் ஆன நாள் என்பதால் காதல் உணர்வுகள் அதிகரிக்கும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு, வயலட், ராசியான எண்கள் 1,9.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் ராசிக்கு 10வது வீடான தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். சொர்க்கம் மடியிலே என்று உங்கள் காதல் துணைவர் இன்றைக்கு பாடி உற்சாகப்படுத்துவார். உடல் நலம் உற்சாகமாக இருக்கும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை, ராசியான எண்கள் 2, 6.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 9வது வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் வெளிநாடு பயணங்களும் உற்சாகமாக இருக்கும்.

இன்று பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறப்பாக இருக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. ரொமான்ஸ் நினைவுகள் உற்சாகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். அப்பாவின் உடல் நலனில் அதிகம் அக்கறை தேவை. ராசியான நிறம் ஆரஞ்சு, வெள்ளை ராசியான எண்கள் 1, 7.

கடகம்

கடகம்

ராசிக்கு 8வது வீடான அஷ்டத்தில் சந்திரன் இருப்பதால் இன்றைக்கு கவனமாக இருப்பது அவசியம். வாயை மூடி அமைதியாக இருந்தாலே பிரச்சினைகள் தலை தூக்காது. நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். காதல் துணையுடன் கை கோர்த்து உற்சாகமாக இருக்கும் நாள் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை. ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள் ராசியான எண்கள் 2, 6.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்து கொண்டு உங்கள் ராசியை நேரடியாக பார்க்கிறார். வீட்டில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய இன்றைக்கு நல்ல நாளாகும். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் இன்றைக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. காதல் துணையால் இன்றைக்கு மூடி அவுட் ஆகலாம். ராசியான நிறம் பச்சை, நீலம், ராசியான எண்கள் 3, 5.

கன்னி

கன்னி

ராசிக்கு 6வது வீட்டில் இன்று சந்திரன் அமர்ந்துள்ளதால், இன்றைக்கு கடன் அடைக்க ஏற்ற நாள். முருகனை வணங்கி கடன் அடைக்கும் முயற்சியில் ஈடுபடலாம். காதலிலேயே எப்பொதும் மூழ்கியிருப்பீர்கள். காதல் உணர்வுகளால் உற்சாகம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். ராசியான நிறம் வெள்ளை, ஆரஞ்சு, ராசியான எண்கள் 2, 9.

துலாம்

துலாம்

ராசிக்கு 5வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால் நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம் என்பதால் கவனம் தேவை. உறுதியுடன் செயல்படுங்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். காதல் பேரின்பத்தின் இன்று திளைக்கப் போகிறீர்கள். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். ராசியான நிறம் சிவப்பு, பச்சை. ராசியான எண்கள் 1, 5.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். பயணங்கள் இனிமையாக அமையும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. இன்று உறவுகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள். ராசியான நிறம் ஆரஞ்சு, மஞ்சள், ராசியான எண்கள் 1, 3.

தனுசு

தனுசு

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் நீங்கள் இன்று செய்யும் வேலைக்கான முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். இன்றைக்கு வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளால் இருந்து வந்த தொல்லைகள் தானாக விலகும். ஜென்ம சனியால் கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது கண் பிரச்சினையால் அவதிப்படுவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 3, 9.

மகரம்

மகரம்

ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது. பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும். நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ராசியான நிறம் நீலம், பச்சை, ராசியான எண்கள் 2, 5.

கும்பம்

கும்பம்

சந்திரன் ராசியில் அமர்ந்திருந்தாலும் சங்கடங்கள் ஏற்படாது. சின்னச் சின்ன பிரச்சினைகளை உடனே சரி செய்வீர்கள். காதலும் ரொமான்சும் உங்களை நல்ல மனநிலையில் வைத்திருக்கும். இன்று நற்பெயர் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், அதிக லாபம் தரும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 2, 6.

மீனம்

மீனம்

சந்திரன் ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். சுகமும், மகிழ்ச்சியும் பெருகும் நாள். பணம், பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். பணம் புகழ் தேடி வரும். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். ராசியான நிறம் நீலம், சிவப்பு, ராசியான எண்கள் 3,5.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+