Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று யாருக்கு பணவரவு... யாருக்கு விரைய செலவு - ராசிபலன்கள்

செவ்வாய்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள். சிம்மம் ராசிக்குள் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனி மாதம் 5ஆம் தேதி செவ்வாய்கிழமை இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்களை பார்க்கலாம். இன்றைய தினம் சந்திரன் சஞ்சாரம் சிம்ம ராசியில் உள்ளது.

இன்றைய தினம் மிதுனம் ராசியில் சூரியன், புதன், கடகம் ராசியில் சுக்கிரன், ராகு துலாமில் குரு, தனுசு ராசியில் சனி, மகரம் ராசியில் கேது, செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது. இன்று எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும் யாருக்கு செலவு என பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரனின் சஞ்சாரம் 5வது வீட்டில் உள்ளது. பிள்ளைகளிடம் கவனமாக இருக்கவும். அனைவரிடமும் மகிழ்ச்சியாக பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். இன்று உண்மையில் பலன் பெற விரும்பினால் - மற்றவர்களின் யோசனைகளைக் கேளுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அருமையாக இருக்கும். காதல் - துணையும் பிணைப்பும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் நல்ல வகையில் திருப்பம் ஏற்படும். பணவரத்து திருப்தியாக இருக்கும் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண் 1,2.

 ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் ராசிக்கு 4வது வீட்டில் உள்ளதால் கவனமாக பிரச்சினைகளை கையாளவும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

இன்று விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். பழைய வாகனங்களை பழுது பார்க்கலாம். தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். இன்று சுமாரான நாள்தான். ராசியான நிறம் ஆரஞ்சு, சிவப்பு ராசியான எண்கள் 6, 8.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். ரொமான்ஸ் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் இன்று மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு. ராசியான எண்: 4, 6

கடகம்

கடகம்

ராசிக்கு 2வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். இன்று கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும் நாளாக இன்று உள்ளது. பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். ராசியான நிறம் நீலம். ராசியான எண்கள் 2, 9. 4

சிம்மம்

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளதால் கவனமாக பிரச்சினைகளை கையாளவும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் உங்கள் வாழ்க்கை துணை ரொமான்ஸ் மூடில் இருப்பதால் உற்சாகம் கரைபுரண்டு ஒடும். இன்று மாணவர்களுக்கு பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். ராசியான மஞ்சள், வெள்ளை ராசியான எண் 3,9.

கன்னி

கன்னி

ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால் சுப விரைய செலவுகள் ஏற்படும். இன்று எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சில விசயங்கள் உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் என்பதால் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். ராசியான நிறம் சிவப்பு, அடர் நீலம் ராசியான எண் 4, 6.

துலாம்

துலாம்

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். வீட்டில் பிரச்சினைகள் எழும் போது அன்பையும் கனிவையும் காட்டி சிறப்பானதாக ஆக்குங்கள். பணவரவு திருப்தி தரும். ராசியான நிறம் சிவப்பு, வெளிர் நீலம் ராசியான எண்கள் 5, 6.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 10வது வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் வேலை செய்யும் இடத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கலாம். காதலருடன் அவுட்டிங் செல்லும் போது வம்பாக எதையும் பேச வேண்டாம். வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கருத்துக்களை எடுத்து கூறுவீர்கள். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். ராசியான நிறம் வெள்ளை, வெளிர் நீலம். ராசியான எண்கள் 3, 7.

தனுசு

தனுசு

ராசிக்கு 9வது வீடான பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் அப்பா உடன் பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். இன்றைய தினம் அருவி நகரங்களுக்க உல்லாச பயணங்களும் செல்ல வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும். இன்றைய தினம் எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை. ராசியான எண் 1, 7.

மகரம்

மகரம்

ராசிக்கு 8வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால் இன்று அமைதியாக இருப்பது நல்லது. சின்னச் சின்ன காரியத்தடங்கல்கள் ஏற்படும்.

இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். வேலை நேரத்தில் வேறு பக்கம் அதிக நேரம் செலவிட்டால் இன்று சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு உற்சாகப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கை துணையை உதாசீனப்படுத்த வேண்டாம். ராசியான நிறம் ஆரஞ்சு, வெள்ளை, ராசியான எண் 4, 5.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே குதூகலம் அதிகரிக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். உங்கள் வேலையில் தொய்வு ஏற்படுவதால் உங்கள் சீனியர் கண்டிப்புடன் இன்று நடந்து கொள்வார். திருமண வாழ்வில் இன்று உற்சாகமான நாள். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ராசியான நிறம் நீலம், பச்சை, ராசியான எண்கள் 5, 8.

மீனம்

மீனம்

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்துள்ளதால் இன்று காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான சூழ்நிலையை இன்று கண்டுபிடிப்பீர்கள். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியும். மனகுழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள் சாதகமான பலனை தரும். ராசியான நிறம் சிவப்பு, அடர் நீலம் ராசியான எண்: 2, 3.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+