Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னி, கும்பம் ராசிக்காரர்கள் வாயை மூடிக் கொண்டு பேசவும், வம்பு வரலாம்- இன்றைய ராசிபலன்!

கன்னி ராசியில் இன்றைக்கு சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது அவசியம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதன்கிழமையான இன்று சந்திரன் கன்னி ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இன்றைய தினம் கன்னி ராசிக்காரர்கள் பேசும் வார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் மிதுனத்தில் சூரியன், புதன் கடகத்தில் ராகு, சுக்கிரன் கன்னி ராசியில் சந்திரன் துலாம் ராசியில் குரு பகவான் தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இன்றைய தினம் கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் அலுவலகம், வீடு, பணியிடங்களில் கவனமாக இருக்கவும்.

எந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ராசி, ராசியான எண்கள் பற்றியும் இன்றைய ராசி பலன்கள் பார்க்கலாம்.


மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் மறைந்திருப்பதால் கவனமாக இருக்கவும். இன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பேசவும், வம்பு வேண்டாம். காதல் நினைவுகள் உங்களை உற்சாகப்படுத்தும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். புதியவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் நல்ல தகவல்கள் தேடி வரலாம். ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண்கள் 2, 4.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வது தொடர்பாக பேசவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கைத்துணையுடன் கவனமாக இருக்கவும். உங்கள் அன்புக்குரியவர் இன்று காதல் உணர்வுடன் இருப்பார். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை. ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு. ராசியான எண்கள் 6,7.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 4வது வீட்டில் இன்றைக்கு சந்திரன் அமர்ந்துள்ளார். தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. பணம் பாக்கெட்டில் நிறையும் அளவிற்கு வரும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழு கவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாளாகும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண் 4, 6.

கடகம்

கடகம்

ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் செய்யும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். இன்று பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு தேவையான நன்மைகளை செய்வார். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகும். ராசியான நிறம் நீலம், பச்சை, ராசியான எண்கள் 2,7.

சிம்மம்

சிம்மம்


ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும். கடந்த 2 நாட்களாக இருந்த சிக்கல்கள், குழப்பங்கள் தீரும்.

இன்று தொழில் வியாபாரம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். அலுவலகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண்கள் 3,7.

கன்னி

கன்னி


ராசிக்குள் இன்று சந்திரன் அமர்ந்துள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண் 4, 6.

துலாம்

துலாம்

ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் சுப விரைய செலவுகள் ஏற்படும். வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். ஆடம்பரமாக செலவு செய்ய தோன்றும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உங்களின் அந்தரங்க ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. வேலையில் இன்று மிக சாதகமான நாள் என்பதால் பயன்படுத்தி கொள்ளுங்கள். ராசியான நிறம் நீலம், சிவப்பு ராசியான எண் 4,6.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பண வரவு அதிகமாக இருக்கும். வீடு, மனை வாங்க இன்று திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். பழைய பாக்கிகளை, கடன்களை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். அலுவலகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். ராசியான நிறம் வெள்ளை, வெளிர் நீலம் ராசியான எண்கள் 2,8.

தனுசு

தனுசு

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். இன்று உங்கள் துணை கொடுக்க போகும் சர்ப்ரைசில் நீங்கள் திக்குமுக்காடி போய்விடுவீர்கள். ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை ராசியான எண் 7,9.

மகரம்

மகரம்

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. அப்பா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று ஆடை ஆபரணம் வாங்கு வீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனகவலை ஏற்படும். பிறருக்கு உதவி செய்வதில் உங்கள் நேரத்தையும் சக்தியையும் செலவிடுங்கள் - உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும் உடல் நலம் சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். உங்கள் திருமண வாழ்க்கை குறித்து உங்களை தேடி ஒரு ஆச்சர்யமான தகவல் வந்து சேரும். ராசியான நிறம் ஆரஞ்சு, மஞ்சள், ராசியான எண் 5, 8.

கும்பம்

கும்பம்


ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று எடுத்த காரியத்தை செய்யும் போது எதுசரி, எதுதவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். சந்திராஷ்டமம் 3 நாட்களுக்கு நீடிப்பதால் கவனமாக இருப்பது அவசியம். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட்டு வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பணவரவு திருப்தியாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். ராசியான நிறம் ப்ளு, கரும்பச்சை, ராசியான எண்கள் 5, 7.

மீனம்

மீனம்

ராசிக்கு 7வது வீட்டில் களத்திர ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். உங்கள் ராசியை சந்திரன் சம சப்தம பார்வையாக பார்ப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் காதலர் அல்லது காதலியுடன் காலையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் மாலையில் சமாதனம் ஆகிவிடுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+