இந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் கோபம் வருமாம்- எச்சரிக்கையா இருங்க
மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன நிறம் ராசி, அதிர்ஷ்ட எண்கள் என்ன என்பதைப்பற்றி இன்று பார்க்கலாம்.
சென்னை: வியாழக்கிழமை இன்றைய தினம் குருபகவானை வணங்கி நாளை தொடங்குவது சிறப்பானது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
கன்னி ராசியில் இன்றைய தினம் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் சற்றே கவனமாக இருப்பது நல்லது.
இன்றைய தினம் மிதுனம் ராசியில் சூரியன்,புதன் கடகம் ராசியில் சுக்கிரனுடன் ராகு, கன்னியில் சந்திரன், துலாமில் குரு, தனுசு ராசியில் சனிபகவான் மகரத்தில் கேது, செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

மேஷம்
ராசிக்கு 6வது வீட்டில் மறைந்துள்ள சந்திரனால் மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நல்லது. இன்று நீங்கள் மூடு அப்செட் ஆக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். ராசியான நிறம் வெள்ளை, வெளிர் நீலம் ராசியான எண் 3, 7.

ரிஷபம்
ராசிக்கு 5வது வீட்டில் உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பது அவசியம். இன்று பணம் வருவது அதிகரிக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. கடினமாக பேசி துணைவரின் கோபத்திற்கு ஆளாகிவிட வேண்டாம். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். ராசியான நிறம் இளம் சிவப்பு , பச்சை, ராசியான எண்கள் 5, 6.

மிதுனம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளார். உங்கள் மனதிற்கு இனிய நபருடன் வாக்குவாதம் ஏற்படலாம். கோபமான பேச்சு மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். சின்னச் சின்ன சோதனைகள் வேதனைகளுக்குப் பின்னர் இன்றைய நாள் இனிமையானதாக மாறும்.
உங்களின் கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண் 4, 5.

கடகம்
ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் இன்று புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான பிணைப்பு காணப்படும். உங்களை மகிழ்விக்க பல வேலைகளை உங்கள் துணைவர் செய்வார். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண் 1, 7.

சிம்மம்
ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணவரவு சீராக இருக்கும். பொறுப்புகள் கூடும். இன்று முக்கியமான ஒருவரை நீங்கள் சந்திப்பீர்கள். அடுத்தவர்கள் பிரச்சனையை இன்று தீர்த்து வைப்பீர்கள். உங்களின் தனிப்பட்ட விசயங்களில் மாற்றம் ஏற்படும். துணையுடன் காதல் தீ பற்றி எரியும். பயணங்கள் சாதகமான பலன் தரும். அலுவலத்தில் சிலர் உங்களின் பொறுமையை சோதிப்பார்கள் கவனமாக இருப்பது நல்லது. ராசியான நிறம் நீலம் ராசியான எண் 4, 5.

கன்னி
ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளதால் இன்று திடீர் கோபம் ஏற்படலாம். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. உங்கள் அன்புக்குரியவர் அதிக மகிழ்ச்சியை தருவதோடு உங்களுக்கு சக்தியை அதிகரிப்பார். பணத்தை பாதுகாப்பாப முதலீடு செய்யுங்கள். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண் 5,8.

துலாம்
ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் சில சோதனைகள் ஏற்பலாம். இன்று அலுவலகத்தில் சிலர் உங்களின் பொறுமையை சோதித்து கோபத்தை ஏற்படுத்துவார் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண் 2,4.

விருச்சிகம்
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் பணவரவு அதிகமாக இருக்கும். காதல் உணர்வுகள் அதிகமாக இருக்கும் உங்களுக்கு களைகட்டும் நாள். இன்று மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையேயான உறவில் உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், வெளிர் பச்சை, ராசியான எண் 1,2.

தனுசு
10வது வீட்டில் இருக்கும் சந்திரனால் பயணங்கள் இனிமையாக இருக்கும். அலுவலகத்தில் பணியில் கவனம் செலுத்தினால் நல்லது. வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளியே இருங்கள். இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றியடையும். உங்களின் கோபத்தை வேண்டுமென்றே சிலர் தூண்டிவிடுவார்கள். முடிந்தவரை கோபத்தை குறைப்பது நல்லது முடியாவிட்டால் புத்தரை போல அமைதி காப்பது ரொம்ப நல்லது. கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ராசியான நிறம் வெள்ளை, நீலம் ராசியான எண்கள் 5, 6.

மகரம்
ராசிக்கு 9வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால் அப்பாவிடம் சின்னச் சின்ன சண்டைகள் போடுவீர்கள். அப்பாவின் நலனில் அக்கறை தேவை. அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். உங்கள் துணையுடன் நீங்கள் காதல் உரையாடலில் மூழ்குவீர்கள். சிலருக்கு இன்று கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறிந்து பேசுவது நல்லது. ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை ராசியான எண் 4, 6.

கும்பம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும். சந்திராஷ்டமம் என்பதால் வம்பு வழக்குகளில் சிக்க நேரிடலாம் எனவே கவனமாக இருப்பது நல்லது. ராசியான நிறம் ஆரஞ்சு, மஞ்சள், ராசியான எண் 2, 9.

மீனம்
ராசிக்கு 7வது வீட்டில் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும். உங்களுடைய கோபமான பேச்சு நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது அவசியம். ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண் 3,9.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications