Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனம் ராசிக்காரர்கள் மவுன விரதம் இருக்கவும் ... எந்த ராசிக்கு என்ன கலர் லக்கி தெரியுமா?

ஆனி 9ஆம் நாள் ஏகாதசி நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம். இன்று எந்த ராசிக்காரர்களுக்கும் லக்கி கலர், அதிர்ஷ்ட எண்களையும் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரனின் சஞ்சாரம் துலாம் ராசியில் உள்ளது. மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இன்றைய நாளில் இருப்பது நல்லது.

மிதுனத்தில் சூரியன், புதன், கடகத்தில் சுக்கிரன், ராகு துலாம் ராசியில் குரு பகவானுடன் சந்திரன் இணைந்து அமர்ந்துள்ளார். தனுசு ராசியில் சனி பகவான், மகரத்தில் கேது செவ்வாய் என கிரகங்களில் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இன்றைய தினத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யாருக்கு செலவு வரும் என பார்க்கலாம். சில ராசிக்காரர்களுக்கு கோபம் அதிகமாக இருக்கும் எச்சரிக்கையும் கவனமும் தேவை.

மேஷம்

மேஷம்

சந்திரன் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்து சம சப்தம பார்வையாக பார்ப்பதால் வீட்டில் சந்தோஷ அலைகள் வீசும்.
இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். ராசியான நிறம் சிவப்பு, ஆரஞ்சு,ராசியான எண்கள்: 1, 9

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று நோய் நீங்கி உடலில் ஆரோக்கியம் அடைவீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். . நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை. உங்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் இனிமையான நினைவுகளால் உற்சாகமடைவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள் 2,6.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அலுவலகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். முதல் பார்வையிலேயே காதல் ஏற்படலாம். அந்தளவிற்கு உங்களின் அம்பு இருக்கும். இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள். ராசியான நிறம் வெள்ளை, கரும்பச்சை, ராசியான எண்கள் 5, 9.

கடகம்

கடகம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். கவனமாக செயல்படவேண்டிய நாள் இது. அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தேவையான பொருட்களை மட்டுமே வாங்கவும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். ராசியான நிறம் நீலம், இளம் மஞ்சள். ராசியான எண்கள் 2, 7

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சின்னச் சின்ன பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும்.இன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தாலும் உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. இன்று உங்களுக்கான நாள் என்பதால் உற்சாகமாக இருங்கள். காதல் விவகாரங்களும், மண வாழ்க்கையும் அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி

கன்னி

ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் குருவுடன் இணைந்து அமர்ந்துள்ளார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. குழந்தைகளிடம் இருந்து வரும் எதிர்பாராத நல்ல செய்தி மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டு வரும். உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும். இன்று சிரிப்பு நிறைந்த நாள். ராசியான நிறம் பச்சை, நீலம், ராசியான எண்கள் 2, 7.

துலாம்

துலாம்

ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளார். பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு மிக ரொமான்டிக்கான நாள். காதல் உணர்வுகள் உற்சாகமாக இருக்கும். ராசியான நிறம் இளஞ்சிவப்பு, நீலம், ராசியான எண்கள் 3, 9.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் சுப விரைய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். செலவுகள் ஏற்படும்.இன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடும்.ராசியான நிறம் ஊதா, மஞ்சள், ராசியான எண்கள் 5, 9.

தனுசு

தனுசு

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. காதல் நினைவுகள் அதிகமாக இருக்கும். மண வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். ராசியான நிறம் மஞ்சள், நீலம் ராசியான எண்கள்: 1,3.

மகரம்

மகரம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் பயணங்களால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ராசியான நிறம் நீலம், இளஞ்சிவப்பு ராசியான எண்கள் 2, 9.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை. ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 2, 9.

மீனம்

மீனம்

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று சந்திராஷ்டமம் என்பதால் வாயை மூடி பேசவும். தேவையற்ற விவகாரங்களில் வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் யாரிடமும் அநாவசியமாக பேச வேண்டாம். ராசியான நிறம் நீலம், சிவப்பு, ராசியான எண்கள் 3, 5.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+