இன்றைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு பண வருவாய் - ரொமான்ஸ் உற்சாகம் தரும்
இன்றைய தினம் மகரம் ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் மவுன விரதம் இருப்பது நல்லது.
சென்னை: ஆடி மாதம் 12 ஆம் நாள் சனிக்கிழமை, பிரதமை திதி பின்இரவு 04.20 வரை பின்பு தேய்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 03.37 வரை பின்னர் அவிட்டம். இன்று நாள் முழுவதும் சித்தயோகம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பார்க்கலாம்.
கடகத்தில் சூரியன், ராகு, புதன், சிம்மத்தில் சுக்கிரன், துலாம் ராசியில் குரு, தனுசு ராசியில் சனிபகவான், மகரம் ராசியில் கேது, சந்திரன், செவ்வாய் என இன்றைக்கு கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
மகரம் ராசியில் சந்திரன் அமர்ந்திருப்பதால் இந்த ராசிக்காரர்கள் சற்றே மனக்கலக்கத்திற்கு ஆளாவீர்கள். அதே போல மிதுனம் ராசிக்காரர்கள் சந்திராஷ்மம் நீடிப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

மேஷம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். கேது, செவ்வாய் உடன் அமர்ந்து உள்ள சந்திரன் கெடு பலன்களை செய்ய மாட்டார். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செய்வீர்கள். இன்றைக்கு உங்களுக்கு சுமாரான நாள்தான். காதல் கை கொடுக்காது, பண வரவு சுமாராகவே இருக்கும்.
ராசியான நிறம் நீலம், ராசியான எண்கள் 7,9.

ரிஷபம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள். ஆனந்தமாக இருப்பீர்கள். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. பணவருவாய் அதிகரிக்கும் அதற்காக ஊதாரித்தனமாக செலவு செய்யாதீர்கள். காதல் நினைவுகள் உற்சாகமாக இருக்கும். மணவாழ்க்கை உற்சாகமாக இருக்கும். ராசியான நிறம் ஊதா, ராசியான எண்கள் 6,8.

மிதுனம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் இருப்பதால் இன்றைக்கு மன உளைச்சல் ஏற்படும். வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள். ஆலய தரிசனம் அமைதியை ஏற்படுத்தும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. காதல் இன்றைக்கு கசக்கும் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண்கள் 5, 9.

கடகம்
ராசிக்கு 7வது வீட்டில் இன்றைக்கு சந்திரன் அமர்ந்துள்ளார். களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை சந்திரன் பார்ப்பதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உற்சாகமாக இருக்கும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண்கள் 4, 6.

சிம்மம்
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். பணிசெய்யும் இடத்தில் சிலருக்கு மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையின் அன்பில் நீங்கள் உற்சாகமடைவீர்கள். சாப்பாடு விசயத்தில் கவனம் தேவை. இன்றைக்கு உல்லாச பயணம் செல்ல திட்டமிடலாம். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5,9.

கன்னி
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பிள்ளைகள் மீது ஒரு கண் வைக்கவும். குழந்தைகள் நலனில் அக்கறை தேவை. சொத்து வழக்குகளில் பிரச்சினைகள் ஏற்படலாம் கவனமாக இருக்கவும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். காதல் நினைவுகள் பாசிட்டிவ் ஆன நினைவுகளை ஏற்படுத்தும். இன்றைக்கு உங்கள் குடும்ப வாழ்க்கையில் இனிமையான நாளாகும். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 3,6,

துலாம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு வலுக்கும். இன்று உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண்கள் 7, 9.

விருச்சிகம்
ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து இருக்கிறார். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண்கள் 5,9.

தனுசு
ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணவரவு அதிகரிக்கும். இன்று ரொமான்ஸ் நினைவுகள் உங்களை உற்சாகப்படுத்தும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வார்த்தைகளில் கவனம் தேவை. ராசியான நிறம் ப்ளூ, ராசியான எண்கள் 6,8.

மகரம்
ராசிக்குள் இன்று சந்திரன் அமர்ந்து உள்ளதால் மனக்குழப்பம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உடல் நலம் உற்சாகமாக இருக்கும். உங்கள் துணையுடன் உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள். ராசியான நிறம் நீலம், ராசியான எண்கள் 2,7.

கும்பம்
ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். வேலையில் அழுத்தம் இருப்பதால் இன்றைக்கு கவனமாக பணி செய்யவும். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண்கள் 6,9.

மீனம்
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளார். பயணத்தினால் அலைச்சல் அதிகரிக்கும். காதல் துணையுடன் காலையில் ஊடலும் மாலையில் கூடலும் ஏற்படும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் குறையும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண்கள் 5,8.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications