Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி செவ்வாயில் வருவாய் யாருக்கு செலவு யாருக்கு - இன்றைய ராசி பலன்கள்

ஆடி செவ்வாய்கிழமை இன்று சந்திரன் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்கிறார். கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் என்பதால் கவனமாக இருக்கவும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதம் 15ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி காலை 08.43 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் காலை 09.10 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். கும்பராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். கடகம் ராசிக்காரர்கள் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

இன்றைய தினம் கடகம் ராசியில் சூரியன், புதன், ராகு சிம்மத்தில் சுக்கிரன், துலாம் ராசியில் குருபகவான், தனுசு ராசியில் சனிபகவான், மகரத்தில் கேது செவ்வாய், கும்பத்தில் சந்திரன் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இன்றைய தினம் கடகம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும். இன்றைக்கு ஆடி செவ்வாய்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு வருமானம் அதிகரிக்கும், செலவு யாருக்கு என்று பார்க்கலாம்.


மேஷம்

மேஷம்

லாப ஸ்தானமான 11வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் இன்றைய தினம் இன்று தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். செயல் திறனும் புத்தி சாதுர்யமும் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. ராசியான நிறம் ஊதா, மஞ்சள். ராசியான எண் 9,3.

ரிஷபம்

ரிஷபம்

தொழில் ஸ்தானமான ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையைத் தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். ராசியான நிறம் பச்சை,சிவப்பு, ராசியான எண் 4, 6.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 9வது வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்க செய்யும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 2, 3.

கடகம்

கடகம்

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் சந்திராஷ்டமம். வம்பு வழக்குகளுக்கு செல்லாமல் அமைதி காப்பது நல்லது.

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்களின் பார்ட்னர்களை அனு சரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண்: 5,9

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். சம சப்தம பார்வையாக ராசியை சந்திரன் பார்வையிடுவதால் இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழ்ச்சியடைவீர்கள். உறவினர்கள் வருகையால் நன்மை நடைபெறும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். காரிய அனுகூலம் உண்டாகும். ராசியான நிறம் ஆரஞ்சு, ராசியான எண்கள் 4, 5.

கன்னி

கன்னி

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். அனைத்துவித வசதிகளும் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தேடி ப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும். ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை, ராசியான எண் 1, 7.

துலாம்

துலாம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். ராசியான நிறம் வெள்ளை, நீலம் ராசியான எண்கள் 3, 7.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இன்று வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். ராசியான நிறம் சிவப்பு, வெண்மை. ராசியான எண்கள் 5, 6.

தனுசு

தனுசு

ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று மேற்கொள்ளும் முயற்சிகளினால் வெற்றிகள் கிடைக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவுகள் ஏற்படும். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண் 4, 5.

மகரம்

மகரம்

ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். தனம், வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சந்திரனால் தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. அலுவலகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண்கள் 9,3.

கும்பம்

கும்பம்

ராசிக்குள் சந்திரன் அமர்ந்துள்ளதால் மனக்கலக்கம் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்க வேண்டாம். கணவன், மனைவி ஒருவருக் கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். ராசியான நிறம் ஊதா, மஞ்சள் ராசியான எண்கள் 9,3.

மீனம்

மீனம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பணவரத்து அதிகரிக்கும் கூடவே விரைய செலவுகளும் ஏற்படும். மனதில் இனம்புரியாத ஏதாவது ஒரு கவலை உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ராசியான நிறம் ஆரஞ்சு, வெளிர்பச்சை ராசியான எண் 4, 6.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+