எந்த ராசிக்காரர்கள் இன்றைக்கு மவுன விரதம் இருக்கணும் தெரியுமா?
சனிக்கிழமையான இன்றைய தினம் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மனக்குழப்பம் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவேண்டும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் பார்க்கலாம்.
சென்னை: சனிக்கிழமையான இன்றைய தினம் மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்கள் பார்க்கலாம்.எந்த ராசிக்கு என்ன நம்பர் லக் என்றும் தெரிந்து கொள்வோம்.
இன்றைய தினம் மிதுனத்தில் சூரியன், கடகத்தில் புதன் உடன் ராகு, சிம்மத்தில் சுக்கிரன், துலாமில் குரு, தனுசு ராசியில் சனி, மகரம் ராசியில் செவ்வாய் உடன் கேது மேஷம் ராசியில் சந்திரன் என கிரகங்களில் சஞ்சாரம் அமைந்துள்ளது.
கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் வீட்டிலும் வெளியிடங்களிலும் மவுனமாக இருப்பதன் மூலம் வம்பில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களே இன்றைக்கு ஒரே குழப்பமாக இருக்கிறதா? சந்திரன் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்வதால் அப்படித்தான் இருக்கும் ஆனாலும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உடல் நலம் இன்றைக்கு நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் பணவரவு நன்றாக இருக்கும். ராசியான நிறம் பச்சை, மஞ்சள் ராசியான எண்கள் 2, 5.

ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களே இன்றைக்கு சந்திரன் உங்களின் 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். சுப விரைய செலவுகள் ஏற்படும். வெளியூர் செல்வதற்காக வாய்ப்புகள் கிடைக்கும். எட்டாமிட சனி அவ்வப்போது வேலையை காட்டுவார் ஆனாலும் சமாளிப்பீர்கள். இன்று சிலருக்கு பதவியும் பொறுப்பு கிடைக்கும். வியாபாரத்தல் அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். ராசியான நிறம் வெள்ளை, பச்சை ராசியான எண்கள்: 1, 3.

மிதுனம்
உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளார். வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். இன்று நல்ல சம்பளமும் சலுகைகளும் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ராசியான நிறம் இளஞ்சிவப்பு, நீலம். ராசியான எண்கள் 3, 6.

கடகம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் பணி செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது அவசியம். கவனமாக வேலை செய்தால் பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே ஒத்துழைப்பு இருக்கும். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள் 5, 7.

சிம்மம்
ராசிக்கு 9வது வீடான பாக்ய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளார். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை.
இன்று மகிழ்ச்சிகர வாழ்வுமுறை தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். ராசியான நிறம் மஞ்சள், நீலம் ராசியான எண்கள் 1, 3.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் இன்று சந்திரன் உள்ளதால் மனக்குழப்பம் ஏற்படும். சந்திராஷ்டம் என்பதால் அமைதியாக இருக்கவும். கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யலாம். இன்று மாணவர்கள் தேர்ச்சி பெறுவர். ஒரு சிலருக்கு புதிய பதவி தேடிவரும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். பணம் வரும் வாய்ப்பு இன்றைக்கு குறைவுதான். கடன் வாங்காமல் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்றைக்கு ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண்கள் 6, 9.

துலாம்
ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரன் உங்களின் ராசியினை சம சப்தம பார்வையாக பார்க்கிறார். வீட்டில் தம்பதியரிடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் ஏற்படும். காரணமில்லாமல் உங்கள் வாழ்க்கை துணைவருடன் வாக்குவாதம் செய்வீர்கள். இன்று கூடுதல் சொத்து கிடைக்கும். அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் நல்ல முறையில் நடக்கும். ராசியான நிறம் நீலம், ஆரஞ்சு, ராசியான எண்கள் 8, 9

விருச்சிகம்
ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால் சின்னச் சின்ன உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். 12வது வீட்டில் அமர்ந்து உள்ள குருபகவானால் விரைய செலவுகள் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உடல்நிலையில் கவனம் தேவை. இன்று எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள். இளைய சகோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராசியான நிறம் நீலம், பச்சை. ராசியான எண்கள் 2, 7.

தனுசு
ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனால், பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. பூர்வீக வீட்டினை விற்பதற்கு முயற்சி செய்யலாம். உங்கள் துணையுடன் ஜாலியாக ஒரு சுற்றுப்பயணம் சென்று வரலாம். இன்று இயந்திரங்களை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. உடல் நலம் இன்றைக்கு சுமாராகவே இருக்கும். பணம் வரும் வாய்ப்பும் குறைவுதான்.குடும்பத்தில் தாய், தந்தையிடமும், பெரியோரிடமும் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள் 3, 5.

மகரம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்து இருக்கிறார். தாயாரின் உடல் நலனில் கவனமாக இருக்கவும். உங்கள் துணையிடம் இருந்து நீங்கள் சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை எதிர்பார்க்கலாம். இன்று மனக்குறைகள் நீங்கி மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்தும் கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளும் தீரும். சொந்தம், நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ராசியான நிறம் ஆரஞ்சு, வெள்ளை. ராசியான எண்கள்: 1,9.

கும்பம்
ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து இருக்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மீனம்
ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் இன்று அமர்ந்து உள்ள சந்திரனால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். இதுநாள் வரை இருந்த சிக்கல்கள் இன்று தீரும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். ராசியான நிறம். மஞ்சள், பச்சை ராசியான எண்கள் 3, 5.












Click it and Unblock the Notifications