சோமவார நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு சுகம்... சோகம் தெரியுமா?- இன்றைய ராசிபலன்
சோமவார தினமான இன்று சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருக்கவும்.
சென்னை: ஆடி 21 ஆம் தேதி திங்கட்கிழமை, நவமி திதி காலை 09.56 வரை பின்பு தேய்பிறை தசமி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 02.07 வரை பின்பு ரோகிணி. மரணயோகம் பகல் 02.07 வரை பின்பு அமிர்தயோகம். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என பார்க்கலாம்.
இன்றைய தினம் ரிஷப ராசியில் சந்திரன், கடகம் ராசியில் சூரியன், ராகு, புதன் அமர்ந்திருக்க, கன்னி ராசியில் சுக்கிரன், துலாம் ராசியில் குரு பகவான், தனுசு ராசியில் சனி பகவான், மகரம் ராசியில் செவ்வாய், கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு நாட்களுக்கு வாயை மூடி மவுன விரதம் இருப்பது நல்லது.

மேஷம்
ராசிக்கு இரண்டாவது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். ராசியான நிறம் சிவப்பு, வெளிர் நீலம், ராசியான எண் 5, 6.

ரிஷபம்
ராசிக்குள் இன்று சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மனக்குழப்பமாக இருப்பதால் முக்கிய முடிவுகளை இன்று எடுக்காமல் தள்ளி போடலாம். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள். ராசியான எண் 3, 7.

மிதுனம்
ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் சோர்வும் உண்டாகும். ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை, ராசியான எண் 1,5.

கடகம்
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது மூலமும் விருந்தினர் வருகையாலும் செலவு உண்டாகும். ராசியான நிறம் ஆரஞ்சு, ராசியான எண் 4, 5.

சிம்மம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் வேலை செய்யும் இடத்தில் நிதானமாக இருக்கவும். இன்று திடீர் கோபங்கள் உண்டாகலாம். புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு எடுப்பது நல்லது. தெளிவான சிந்தனை ஏற்படும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்யது வெற்றிக்கு வழிவகுக்கும். ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண் 1, 5.

கன்னி
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் தீரும். இன்று சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண் 2, 3.

துலாம்
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் சற்றே மனக்குழப்பம் ஏற்படும். இன்றைய தினம் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். அலுவலகமோ, வீடோ இன்றைக்கு அமைதியாக இருப்பது நல்லது. அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

விருச்சிகம்
ராசிக்கு 7வது வீட்டில் இன்றைக்கு சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுங்கள். இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றத்திற்கு உதவும். குழந்தைகள் நலனின் அக்கறை காட்டுவீர்கள். இன்றைக்கு ராசியான நிறம் மஞ்சள் ராசியான எண்கள்: 1, 5.

தனுசு
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். ராசியான நிறம் வெண்மை, பச்சை, ராசியான எண்கள் 1, 3.

மகரம்
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. உங்களது வியாபாரத்திற்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல் அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி வரலாம். ராசியான நிறம் வெண்மை, நீலம். ராசியான எண்கள் 6, 9.

கும்பம்
ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். தடைபட்டு வந்த திருமண காரியங்கள் சாதகமாக நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். கவனம் தேவை. ராசியான நிறம் பழுப்பு, நீலம் ராசியான எண்கள் 5, 7.

மீனம்
ராசிக்கு 3வது வீட்டில் இன்று சந்திரன் அமர்ந்துள்ளார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று சாதுரியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரிய தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். வாழ்க்கை தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். இன்று ரொமான்ஸ் நினைவுகள் ஏற்படும். மிகவும் நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள் ராசியான எண்கள் 2, 5.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications