Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மங்களகரமான செவ்வாயில் இந்த ராசிக்காரங்களுக்கு வருவாய் அதிகமாம்

ரிஷபம் ராசியில் இன்றைய தினம் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது நல்லது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி 22, செவ்வாய்க்கிழமை, தசமி திதி காலை 07.52 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 05.15 வரை பின்பு தேய்பிறை துவாதசி. ரோகிணி நட்சத்திரம் பகல் 12.44 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 12.44 வரை பின்பு சித்தயோகம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களை பார்க்கலாம்.

இன்றைய தினம் ரிஷப ராசியில் சந்திரன், கடகம் ராசியில் சூரியன், ராகு, புதன் அமர்ந்திருக்க, கன்னி ராசியில் சுக்கிரன், துலாம் ராசியில் குரு பகவான், தனுசு ராசியில் சனி பகவான், மகரம் ராசியில் செவ்வாய், கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எந்த செயலையும் யோசித்து செய்வது நல்லது. வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இரண்டாவது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பணம் பாக்கெட்டில் நிறைய வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சில் இன்றைக்கு இனிமை அதிகரிக்கும். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி அடுத்தவரின் மனக்கஷ்டத்திற்கு ஆளாக்க வேண்டாத். வருமானம் இருந்தாலும் வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நன்மை தரும். ராசியான நிறம் மஞ்சள், ஆரஞ்சு, ராசியான எண்கள் 1, 3.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருக்கிறார். மனக்குழப்பமாக இருந்தாலும் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண் பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது. பணம் வரவு இன்று தாராளமாக இருக்கும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை, ராசியான எண்கள் 2, 5.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் நின்றிருப்பதால் வியாபாரத்தில் பணம் வருவாய் அதிகரிக்கும். கூடவே செலவும் வரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளை செய்யலாம். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். வீண் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை ராசியான எண் 9, 3.

கடகம்

கடகம்

ராசிக்கு 11 வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பணவரவு அதிகரிக்கும். இன்று எடுத்த முயற்சிகள் கை கூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோ தைரியம் கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றசாட்டிற்கு ஆளாக நேரிடலாம். திடீர் கோபம் உண்டாகும். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண் 4, 6.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ராசியான நிறம் சிவப்பு, மஞ்சள், ராசியான எண் 5, 6.

கன்னி

கன்னி

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் நின்றிருப்பதால் இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. தம்பதிகள் கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். சில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கோபத்தை தவிர்ப்பது நல்லது. ராசியான நிறம் பச்சை, நீலம், ராசியான எண்கள் 2, 5.

துலாம்

துலாம்

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். வீட்டிலும், அலுவலகத்திலும் அமைதி காப்பது நல்லது. ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள். ராசியான எண்கள் 1, 3.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் களத்திர ஸ்தானத்தில் நின்றிருக்கிறார். வீட்டில் ரொமான்ஸ் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. ராசியான நிறம் இளஞ்சிவப்பு, நீலம் ராசியான எண்கள் 3, 6.

தனுசு

தனுசு

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். மிகவும் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை தேவை. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். ராசியான நிறம் ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் ராசியான எண்கள் 1, 3.

மகரம்

மகரம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் நின்றிருக்கிறார். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. பூர்வீக சொத்துக்களை விற்க இன்று முயற்சி செய்யலாம். பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சிறு உல்லாச பயணங்கள் செல்வீர்கள். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள் 1, 3.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் நின்றிருப்பதால் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை, ராசியான எண்கள் 3, 6.

மீனம்

மீனம்

ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். ராசியான நிறம் நீலம், பச்சை, ஆரஞ்சு ராசியான எண்கள்: 6, 9.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+