Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்ப ராசிக்காரர்கள் இன்றைக்கு மவுன விரதம் இருக்கவும் - இன்றைய ராசிபலன்கள்

கன்னி ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் இரண்டு ராசிக்காரர்களும் மவுன விரதம் இருக்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 23ஆம் நாள் செவ்வாய்கிழமை பிரதமை திதி, ஹஸ்தம் நட்சத்திரம் இன்றைக்கு சந்திரனின் சஞ்சாரம் இன்றைக்கு கன்னி ராசியில் உள்ளது. கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

கடக ராசியில் ராகு கன்னி ராசியில் சூரியன் சந்திரன், துலாம் ராசியில் சுக்கிரன், புதன், குரு தனுசு ராசியில் சனி மகரம் ராசியில் செவ்வாய், கேது என கிரகங்களின் சஞ்சாரம் இன்றைக்கு அமைந்துள்ளது.

12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு பணம் வரும் செலவு அதிகரிக்கும், அதிர்ஷ்டமான எண்கள், அதிர்ஷ்ட நிறங்களைப் பார்க்கலாம்.

மேஷம்:

மேஷம்:

ராசிக்கு 6வது வீட்டில் தந்தை காரகன் சூரியனுடன் இணைந்து சந்திரன் குடித்தனம் செய்கிறார். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். பணவரவு அதிகரிக்கும். அமோகமான நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 7.

ரிஷபம்:

ரிஷபம்:

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். நட்புவழியில் நல்ல செய்தி தேடி வரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சி செய்யலாம். ராசியான நிறம் சிவப்பு. ராசியான எண் 4.

மிதுனம்:

மிதுனம்:

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை இன்றைக்கு நீங்கள் பார்க்க நேரிடலாம். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.

கடகம்:

கடகம்:

ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளார். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். அலுவலகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். ராசியான நிறம் ஆரஞ்சு, ராசியான எண் 9.

சிம்மம்:

சிம்மம்:

ராசிக்கு 2வது வீட்டில் உங்கள் ராசி நாதன் சூரியனுடன் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். தனவரவு அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். விலை உயர்ந்த பொருட்களை நீங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். இன்றைக்கு குடும்பத்தினருடன் குதூகலமாக நேரத்தை செலவழிப்பீர்கள். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 8.

கன்னி:

கன்னி:

ராசிக்குள் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். கொடுக்கல் வாங்கலில் சிறு பிரச்சினைகள் ஏற்படும். டென்சனை குறைத்து நேர்மறையாக சிந்தனை செய்யுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 6.

துலாம்:

துலாம்:

ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சந்திரன் நிற்பதால் அநாவசிய செலவுகளை தவிர்க்கவும். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 5.

விருச்சிகம்:

விருச்சிகம்:

ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மேலதிரிகளினால் புகழும், கௌரவமும் கூடும் நாள். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 7.

தனுசு:

தனுசு:

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. தொழில் செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். புது இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். ஜென்ம சனியால் சில சங்கடங்கள் ஏற்பட்டலாம் குருவும் விரையத்தை ஏற்படுத்தலாம் கவனம் தேவை. ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 6.

மகரம்:

மகரம்:

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரனின் சஞ்சாரம் உள்ளது. பாக்ய சந்திரன் பலன்களை அள்ளித்தருவதார். அப்பா உடன் பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. இன்றைக்கு காதல் துணையுடன் ரொமான்ஸ் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். தொழில் உத்தியோகத்தில் லாபம் அதிகரிக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.

கும்பம்:

கும்பம்:

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்படாதீர்கள். அமைதியாக இருந்து அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். வேலைச்சுமை அதிகரிக்கும் அலுவலகத்தில் மவுன விரதம் இருக்கலாம். ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 8.

மீனம்:

மீனம்:

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. களத்திர ஸ்தானத்தில் உள்ள சூரியன், சந்திரனால் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+