பணவரவு யாருக்கு செலவு யாருக்கு - இன்றைய ராசிபலன்
இன்றைய சந்திரன் சஞ்சாரம் கடகம் ராசியில் உள்ளது, தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது என்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் மவுன விரதம் இருப்பது நல்லது.
சென்னை: இன்றைய தினம் விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி அக்டோபர் 4ஆம் நாள் வியாழக்கிழமை. தேய்பிறை தசமி திதி இரவு 9.49 மணி வரை அதன் பின்னர் ஏகாதசி திதி. பூசம் நட்சத்திரம் நாள் முழுவதும் சித்த யோகம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்.
கடக ராசியில் சந்திரன், ராகு, கன்னியில் சூரியன், புதன், துலாமில் சுக்கிரன், குரு, தனுசுவில் சனி, மகரத்தில் கேது செவ்வாய் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது.
கடகத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதாலும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதாலும் இரண்டு ராசிக்காரர்களும் கவனமாக இருப்பது நல்லது. பேசி வம்பில் மாட்டுவதை விட மவுன விரதம் இருக்கலாம்.

மேஷம்
சந்திரன் சஞ்சாரம் 4ஆம் வீட்டில் உள்ளது. அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்கள் அறிமுகமாவார்கள். திடீர் பணவரவு கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 4.

ரிஷபம்
சந்திரன் முயற்சி ஸ்தானமான 3வது வீட்டில் அமர்ந்து உள்ளார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணத்தால் வெற்றி கிடைக்கும். ராசியான நிறம் இளம் பச்சை, ராசியான எண் 5.

மிதுனம்
சந்திரன் 2வது வீடான குடும்ப ஸ்தானத்தில் இருக்கிறார். பணவரவு அதிகரிக்கும். கடந்த இரண்டு நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வரும். இன்றைக்கு மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினருடன் உற்சாகமாக செலவிடுங்கள். பணியாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 7.

கடகம்
ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் கவனமாக செயல்படவும். குடும்ப ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 6.

சிம்மம்
12ஆம் வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். விரைய செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வீடு வாங்குவது, கட்டுவது லாபகரமாக அமையும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 1.

கன்னி
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் இருக்கிறார். உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சுப காரியங்கள் கைகூடும். பணவரவு அதிகரிக்கும். கடன்கள் குறையும் நாள். ராசியான நிறம் ஊதா, ராசியான எண் 3.

துலாம்
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சுப காரியங்கள் கை கூடும். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள். ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 6.

விருச்சிகம்
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. கடந்த 2 நாட்களாக இருந்த மனக்குழப்பம் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச் சுமை குறையும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 2.

தனுசு
ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வீட்டிலும் அலுவலகத்திலும் அவசரப்பட்டு எதையும் பேசாமல் மவுன விரதம் இருக்கலாம். கோவிலுக்கு சென்று வரலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 3.

மகரம்
ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. பிள்ளைகளால் சமூகத்தில் மதிப்பும் மரியதையும் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வண்டி வாகன வசதிப் பெருகும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெளி வட்டார நட்பு ஏற்படும்.
வீட்டில் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். வங்கியில் சேமிப்பு உயரும்.

கும்பம்
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் அன்பு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள். வெளியூர் பயணத்தால் லாபம் கிடைக்கும்.

மீனம்
சந்திரன் சஞ்சாரம் 5வது வீட்டில் உள்ளது. உங்களுக்கு இன்றைக்கு உற்சாகம் அதிகரிக்கும் தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தொல்லைகள் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். வீட்டில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications