Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றைக்கு எந்த ராசிக்கு பணம் வரவு... யாருக்கு செலவு தெரியுமா?

வியாழக்கிழமையான இன்று மகரத்தில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. ஏற்கனவே அங்கு கேது, செவ்வாய் இருக்கையில் சந்திரனும் இணைந்துள்ளார். இன்றைய தினம் எந்த ராசிக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குருபகவான் அருள் நிறைந்த வியாழக்கிழமை இன்று ஏகாதசி திதி பின்இரவு 01.16 வரை பின்பு வளர்பிறை துவாதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.44 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு பலன் எப்படி என்று பார்க்கலாம்.

இன்றைய தினம் சந்திரன் சஞ்சாரம் மகரம் ராசியில் உள்ளது. கேது செவ்வாய் மகரத்தில் இருக்க, கடகத்தில் ராகு, கன்னியில் சூரியன், புதன், துலாமில் குரு, சுக்கிரன், தனுசு ராசியில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

மகரம் ராசிக்காரர்களும், மிதுனம் ராசிக்காரர்களும் இன்றைய தினம் அமைதியாக இருப்பதால் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் இருக்கிறார். தொழில் செய்யும் இடத்தில் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். சந்தர்ப்ப, சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோஜிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ராசியான எண் 2, ராசியான நிறம் மஞ்சள்.

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மந்தநிலை மாறி சுறுசுறுப்பாக மாறுவீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். ராசியான எண் 4 ராசியான நிறம் பச்சை.

மிதுனம்

மிதுனம்

சந்திராஷ்டமம் என்பதால் இடம் பொருள் அறிந்து பேசுவது நல்லது. பிரச்சினைகளை நீங்களாக ஆரம்பிக்க வேண்டாம். தொழில் செய்யும் இடத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மன அமைதி ஏற்பட கோவிலுக்கு சென்று வரலாம். ராசியான எண் 5, ராசியான நிறம் மஞ்சள்.

கடகம்

கடகம்

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. கணவன் மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். கொடுத்த கடன் வசூலாகும். உங்களின் கடன் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பாக்கெட் நிறைய பணம் குவியும். அலுவலகத்தில் அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ராசியான எண் 3, ராசியான நிறம் சிவப்பு.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளதால் எதிர்பாராத பணவரவு இன்றைக்கு உண்டு. வியாபாரத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். திடீர் யோகம் ஏற்படும் நாள். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 5.

கன்னி

கன்னி

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பூர்வீக சொத்துக்களை விற்க முயற்சி செய்வீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். பணம் வரவு அதிகரிக்கும். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவை. ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 8.

துலாம்

துலாம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளதால் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையை ஏற்படும் இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் முன்னேரும் நாள் ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 4.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். பொன், பொருள், சேரும் நாள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 6.

தனுசு

தனுசு

ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். பண வருவாய் அதிகரிக்கும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். குழப்பம் நீங்கி நிம்மதி எற்படும் நாள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 7.

மகரம்

மகரம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை பேசாமல் அமைதி காப்பது நல்லது. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். இன்றைக்கு விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 5.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து உள்ளார். எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். அலுவலகத்தில் மறைமுக பிரச்னைகள் வரலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும் ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 8.

மீனம்

மீனம்

கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப் பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 3.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+