தனுசு ராசிக்காரங்க மவுன விரதம் இருக்கலாம் - இன்றைய ராசிபலன்கள்
கடகத்தில் சந்திரனின் சஞ்சாரம் அமைந்துள்ளதால் மனக்குழப்பமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.
சென்னை: இன்று ஆவணி 21, வியாழக்கிழமை, ஏகாதசி திதி பகல் 12.15 வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.13 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பகல் 03.13 வரை பின்பு சித்தயோகம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
கடக ராசியில் சந்திரன், ராகு, சிம்ம ராசியில் சூரியன், புதன், துலாம் ராசியில் குரு, சுக்கிரன் தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது, செவ்வாய் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.
தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையில்லாத விசயங்களில் தலையிடாமல் மவுன விரதம் இருப்பது நல்லது. கோவில்களுக்கு சென்று ஜென்ம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வரலாம்.

மேஷம்:
சந்திரன் ராசிக்கு 4வது வீட்டில் ராகு உடன் அமர்ந்துள்ளார். இன்றைய தினம் அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. குரு ஏழாமிடத்தில் இருப்பதால் பண வரவு தாராளமாக இருக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் பெண்களால் நன்மை உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 5.

ரிஷபம்:
முயற்சி ஸ்தானமான 3வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதி காரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபமான நாள். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 3.

மிதுனம்:
தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனால் கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தோற்றப் பொலிவுக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. தடைகள் உடைபடும் நாள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 5.

கடகம்:
ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்கலக்கம் ஏற்படும். சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.அடுத்தவர்கள் மனது காயப்படும் அளவிற்கு பேசி விட வேண்டாம். புதிதாக எந்த வேலைக்கும் யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 6.

சிம்மம்:
விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளதால் திட்டமிட்ட காரியங்களை அலைந்து,திரிந்து முடிப்பீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளிநாடு செல்ல இன்று முயற்சி செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 7.

கன்னி:
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 9.

துலாம்:
ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் புதிய அதிகாரி உங்களை மதிப்பார். சுப காரிய முயற்சிகளினால் வெற்றி கிடைக்கும். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 3.

விருச்சிகம்:
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும். கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப்போனவிஷயங்கள் உடனே முடியும்.உறவினர்களிடம் எதிர் பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சி படி செயல்படும் நாள். ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 2.

தனுசு:
8வது வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத் துங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். இன்று ஞாபக மறதியால் பிரச்னை ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அலுவலகத்திலும் குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 7.

மகரம்:
ராசிக்கு 7வது வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். கடினமான காரியங்களையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை ஏற்படும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். நண்பர்கள் புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நன்மை கிட்டும் நாள். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண்கள் 8.

கும்பம்:
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். மறைவு ஸ்தானம் என்றாலும் இன்றைக்கு எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானால் தெய்வத்தின் அருள் கிடைக்கும். சுக்கிரனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 3.

மீனம்:
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பாராத பண வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவி கிடைக்கும். கனவு நனவாகும் நாள். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 2.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications