Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த ராசிக்காரங்களுக்கு நிறைய பணம் வருமாம்! - இன்றைய ராசிபலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய்க்கிழமை ஆனி 26 ஆம் தேதி துவாதசி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 03.15 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 03.15 வரை பின்பு சித்தயோகம். இன்று ருணவிமோசன பிரதோஷம். சிவ ஆலயங்களுக்கு சென்று நந்தி தேவரை வழிபாடு நல்லது. 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். இன்றைய தினம் மிதுனத்தில் சூரியன், கடகத்தில் ராகு, புதன், சிம்மத்தில் சுக்கிரன், துலாமில் குருபகவான், தனுசு ராசியில் சனிபகவான் மகரத்தில் செவ்வாய் கேது என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்கவும். ரிஷப ராசிக்காரர்களும், துலாம் ராசிக்காரர்களும் மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். பணவரவு தாராளமாக இருக்கும். இன்று இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும். மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபார ரீதியாக உங்கள் செல்வாக்கு உயரும்.படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை, வெள்ளை ராசியான எண்கள்: 5, 9

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் அமர்ந்திருப்பதால் ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்து சேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் அச்சப்படும் அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். ராசியான நிறம் பச்சை, ஊதா, ராசியான எண்கள் 1, 4.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். இன்று உத்தியோகத்தில் துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 1, 6.

கடகம்

கடகம்

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று நீங்கள் வேலையில் சுறுசுறுப்புடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். ராசியான நிறம் நீலம், சிவப்பு, ராசிய எண்கள் 3, 5.

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உள்ளார். இன்று அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் தொடர்பாக திட்டமிடுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எல்லா பிரச்சனைகளும் தீரும். எதிர்ப்புகள் அகலும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு, ராசியான எண்கள் 6,9.

கன்னி

கன்னி

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். இன்று ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் இன்று உதவியும் கிடைக்கலாம். ராசியான நிறம் நீலம், இளஞ்சிவப்பு ராசியான எண்கள் 2, 5.

துலாம்

துலாம்

ராசிக்கு 8வது வீட்டில் இன்று சந்திரன் அமர்ந்துள்ளதால் கவனமாக இருக்கவும், சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக பேசவும், வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள்1, 3.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 7வது வீட்டில் இன்று சந்திரன் அமர்ந்துள்ளார். அலுவலகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். ராசியான நிறம் ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் ராசியான எண்கள் 5, 9.

தனுசு

தனுசு

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். திடீர் பயணம் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், நீலம், ராசியான எண்கள் 1, 3.

மகரம்

மகரம்

ராசிக்கு 5வது வீட்டில் இன்று சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். இன்று கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். ராசியான நிறம் நீலம், இளஞ்சிவப்பு, ராசியான எண்கள் 2, 5.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும் உறவினர்களின் ஆதரவுடன் எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு, ராசியான எண்கள் 2, 6.

மீனம்

மீனம்

ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். இன்று வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள், ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டு. வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வண்டி, வாகனம் வாங்குவார்கள். ராசியான நிறம் நீலம், சிவப்பு, ராசியான எண்கள் 3, 5.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+