தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாளில் சாந்தி ஹோமம் - வளர்பிறை அஷ்டமி பைரவ யாகம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் யாகமும் நடைபெற்றது.
வேலூர்: தன்வந்திரி பீடத்தில் இன்று வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும், காலபைரவர் வழிபாடும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 23.04.2018 திங்கட் கிழமை வாஸ்து நாள் மற்றும் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் காலபைரவருக்கு சிறப்பு ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது.

காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், காலபைரவர் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்று ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூறியுள்ளார்.

தன்வந்திரி பீடத்தில் இன்று வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும், காலபைரவர் வழிபாடும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications