டிசம்பர் மாத ராசி பலன் 2021: இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்கள் தேடி வரும்

கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் என்னென்ன என்னென்ன யோகம் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கும், சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கும் புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கும் டிசம்பர் மாதத்தில் என்னென்ன யோகம் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

டிசம்பர் மாதத்தில் ரிஷப ராசியில் ராகு, விருச்சிக ராசியில் கேது உடன் சூரியன் பயணம் செய்கிறார். துலாம் ராசியில் செவ்வாய்,புதன், தனுசு ராசியில் சுக்கிரன், மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு என கிரகங்கள் பயணம் உள்ளது.

இந்த மாதத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் 5 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். விருச்சிக ராசியில் சூரியன், புதன், செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை நடைபெறுகிறது. அதே நேரத்தில் சனியின் பார்வையில் இருந்து செவ்வாய் விலகுவது சிறப்பு. தனுசு ராசியில் உள்ள சுக்கிரன் டிசம்பர் 8ஆம் தேதி மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்து சனியோடு இணைகிறார். டிசம்பர் 10ஆம் தேதியன்று விருச்சிக ராசியில் உள்ள புதன் தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

கடகம் ராசி

கடகம் ராசி

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, மாத துவக்கத்தில் சந்திரன் சாதகமாக இருக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவாக உள்ளது. உங்கள் தொழில் ஸ்தான அதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் இந்த மாதம் ஆட்சி பெற்று சூரியன், கேது உடன் இணைகிறார். அதிகார பதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். மாத முற்பகுதியில் உங்கள் ராசியின் தொழில் ஸ்தானத்திற்கு செவ்வாய் சந்திரன் பார்வை கிடைப்பதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். பலமான சந்திரன் நிறைய பலன்களைத் தருவார். உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமரும் போது நல்ல வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில் குரு உடன் சந்திரன் இணைந்து குரு சந்திர யோகத்தையும் தருவார். நிறைய பணம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். சுபசெலவுகளாக மாற்றுங்கள்.

 திருமண யோகம்

திருமண யோகம்

புதன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தான அதிபதி, மூன்றாம் வீட்டு அதிபதி இந்த மாதம் நான்காம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி சூரியன், கேது செவ்வாய் உடன் இணைகிறார். நிறைய சுப காரியங்கள் நடைபெறும். சனியோடு இணையும் சுக்கிரன் உங்கள் ராசியை பார்வையிடுவதால் திருமண யோகங்கள் கை கூடி வரும். காதலர்களிடையே உற்சாகமான மாதம். திருமணம் செய்வதற்காக பேசி முடிவு செய்யலாம். பொருளாதார பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

கடன் வாங்கி வீடு சொத்து வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளுக்கு பெரிய அளவில் செலவு செய்ய வேண்டாம், இன்னும் ஒரு மாதத்திற்கு தள்ளிப்போடுவது நல்லது. நினைத்தது நிறைவேற திங்கட்கிழமை சிவ ஆலயம் சென்று வணங்குவது நல்லது.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருந்தாலும் வேலை, தொழிலில் கவனதும் நிதானமும் தேவை. குரு பார்வை சாதகமாக உள்ளதால் திருமண யோகம் கை கூடி வரும். வரன் தேடி வரும். நிரந்தர வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். வேலை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலகட்டமாகும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். குருவின் பார்வையால் நிறைய சாதகங்கள் கிடைக்கும். செவ்வாய் நான்காம் வீட்டிற்கு சென்று சூரியன் உடன் இணைவதால் சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு, மனை வாங்கலாம்.

திருமண சுப காரியம்

திருமண சுப காரியம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் விசயங்களில் பிரச்சினைகள் வந்து நீங்கும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கை கூடி வரும். மாத பிற்பகுதியில் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த மாதம் குரு பார்வை சாதகமாக உள்ளதால் மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது. உயர்கல்வி யோகம் கை கூடி வந்துள்ளது. வேலையில் பளு அதிகரிக்கும் நிதானத்தை கடைபிடிக்கவும். சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு சென்று சனியோடு இணைவதால் வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு பதவிகள் தேடி வரும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு இடமாற்றமும் புரமோசனும் கிடைக்கும். ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் சனி சேர்க்கையால் பூர்வ புண்ணிய பலன் அதிகரிக்கும். சிலருக்கு யோகம் கை கூடி வரும். திடீர் கௌரவ பதவிகள் தேடி வரும். வேலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நல்ல வேலை கிடைக்கும். திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். குழந்தை பாக்கியம் கை கூடி வரும்.

வேலையில் கவனம்

வேலையில் கவனம்

ஆறாம் வீட்டில் உள்ள குருவினால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பூமி காரகன் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதால் வீடு, சொத்து சேர்க்கை ஏற்படும். சொந்த வீடு வாங்கும் யோகம் கை கூடி வந்துள்ளது. புதிய யோசனைகள் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கை கூடி வரும். சகோதரர்களின் ஒற்றுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்கும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. டென்சன் ஏற்பட வாய்ப்புள்ளது தியானம் பழகுவது அவசியம். புதன்கிழமை பெருமாளை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+