டிசம்பர் ரிஷப ராசி பலன் 2021: ரிஷபம், மிதுன ராசிக்காரர்களுக்கு யோகங்கள் நிறைந்த மாதம்
: ரிஷப ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் செவ்வாய் பகவானால் ருச்சிக யோகமும் சுக்கிரன் சனி சேர்க்கையால் திடீர் அதிர்ஷ்டமும் தேடி வரப்போகிறது.
சென்னை: சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வைகள் சாதகமாக உள்ளது. ருச்சிக யோகம் திடீர் அதிர்ஷ்டத்தை தரும். புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் விபரீத ராஜ யோகத்தை தரப்போகிறது.
உங்கள் ராசி நாதன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு போகிறார். சனியோடு சுக்கிரன் இணைவது அற்புதமான யோகம்.
லக்னாதிபதி சுக்கிரன் பாக்யாதிபதியுடன் இணைவது அற்புதம். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். புதன் எட்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகி இரண்டாம் வீட்டை பார்க்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு கிரகங்களின் பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

ருச்சிக யோகம்
ஆறில் உள்ள செவ்வாய் 5ஆம் தேதி ஏழாம் வீட்டிற்கு வருகிறார். ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ருச்சிக யோகம் கிடைக்கும். உங்கள் ராசியின் மீது செவ்வாய் பார்வை விழுகிறது. பத்தில் குரு பயணம் செய்வதால் வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைக்கும் வேலையில் புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

திருமண பாக்கியம்
திருமண வாழ்க்கையில் உங்களுக்கு சிறப்பான யோகம் கிடைக்கும். ஏழுக்குடைய செவ்வாய் கேது உடன் இணைந்து பயணிக்கிறார். கணவன் மனைவி இடையே குடும்பத்தில் சில சங்கடங்கள் வந்தால் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். வார்த்தைகளில் கவனம் தேவை. கோபப்பட்டு பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம். காதல் வாழ்க்கையில் சில சங்கடங்கள் வரலாம் பேசும் போது கவனம் அவசியம். இல்லாவிட்டால் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இந்த மாதமும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதமாகும்.

பெண்கள் கவனம்
குருவின் பார்வையும், புதன் பார்வையும் குடும்பத்தின் மீது விழுவதால் பெண்களுக்கு சுமை, வேலை பளு அதிகரிக்கும். நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். புதன் எட்டில் பயணம் செய்வதால் மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் அதிகரிக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். 15ஆம் தேதிக்கு மேல் சூரியன் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு செல்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனம்தேவை. காரணமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுனம் ராசிக்கு யோகம்
புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது சிறப்பு. ஒன்பதாம் வீட்டில் இருந்து தனுசு ராசிக்கு செல்லும் புதனின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். வீடு வாகனம் வாங்குவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சுக்கிரன் சனி எட்டாம் வீட்டில் இணைவது நல்ல யோகத்தை தரும் என்றாலும் புதிய முயற்சிகளில் தடைகள் நீங்கி வெற்றி பெறுவீர்கள்.

குரு பார்வையால் யோகம்
நெருக்கடிகள் வரலாம் அதை எதிர்கொள்வதற்கான தைரியத்தை குருபகவான் தருவார். செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் ஆட்சி பெறுவார். ஆறுக்கு உடைய செவ்வாய் ஆறாம் வீட்டில் ஆட்சி பெறுவதால் விபரீத ராஜயோகத்தை தரும். திருமண பேச்சுக்கள் தேடி வரும். வரன்கள் வரலாம் பேசி முடிவு செய்யலாம். காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

கவனம் தேவை
மறைமுகமாக எதிர்ப்புகள் வரலாம்.கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. வாகன பராமரிப்பு செலவுகள் வரலாம். பெண்கள் இல்லத்தரசிகளுக்கு உடல் நலத்தில் சில பாதிப்புகள் வரலாம் கவனம் தேவை. உணவு விசயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சில நேரங்களில் குதூகலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு யோகம்
மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு சூரியன் இடப்பெயர்ச்சியாகிறார். ராசிநாதன் புதனோடு இணைந்து உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. ஏழாம் வீட்டில் புத ஆதிபத்ய யோகம் இணைகிறது. கூடவே புதன், குருவின் பார்வையால் மாணவர்களுக்கு அற்புதமான யோகம் கிடைக்கப் போகிறது. வெளியூர், வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications