டிசம்பர் மாத ராசி பலன் 2022: குரு தரும் யோகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிக்காரர்கள் நீங்கதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் மாதம் 2022ஆம் ஆண்டின் கடைசி மாதம். கார்த்திகை, மார்கழி மாதங்கள் இணைந்த மாதம் டிசம்பர் மாதம். இந்த மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியிலும் தனுசு ராசியிலும் பயணம் செய்வார். மழைக்காலம் படிப்படியாக முடிந்து பனிக்காலம் தொடங்கும் டிசம்பர் மாதத்தில் ஆன்மீக அலைகள் அதிகம் வீசும். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டின் கடைசி மாதம் இந்த மாதத்தில் கிரகங்கள் தனுசு ராசியில் கூட்டணி அமைக்கின்றன. சூரியன் மாத பிற்பகுதியில் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 3ஆம் தேதி புதன் இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு சென்று புதனோடு இணைகிறார்.

ஆண்டு கிரகங்களைப் பார்த்தால் சனி மகர ராசியிலும் குரு மீன ராசியிலும் பயணம் செய்கின்றனர். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் பயணத்தால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்கிறார். சுக்கிரனும், புதனும் உங்கள் ராசிக்கு வருகிறார். இரண்டாவது வீட்டில் சனி, நான்காவது வீட்டில் குரு ஐந்தாவது வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் கேது என நவ கிரகங்கள் பயணம் செய்கின்றன. டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. உறவுகளும் நட்பும் தேடி வரப்போகிறது. ராசி நாதன் குரு பகவான் தரும் ஹம்ச யோகம் தேடி வரப்போகிறது. பொன்மழை பொழியப்போகிறது. ஆன்மீக தரிசனம் செய்யப்போகிறீர்கள். ஆலய தரிசனம் அதிகம் செல்வீர்கள். வேலை, பிசினஸ் தொடர்பான முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். இட மாற்றம் தொடர்பான முயற்சி செய்யலாம். பெண்களுக்கு இந்த மாதம் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். சனி பகவான்உங்களுக்கு இந்த மாதம் லாபத்தை தரப்போகிறார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கப்போகிறது. கடந்த கால கஷ்டங்கள் நீங்கப்போகிறது. மொத்தத்தில் 2022ஆம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் மன நிம்மதி தரக்கூடிய மாதமாக அமைந்துள்ளது.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்கிறார். சுக்கிரன், புதன் இணைந்து விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கின்றனர். ஜென்ம ராசியில் சனி, மூன்றாவது வீட்டில் குரு, நான்காவது வீட்டில் ராகு, பத்தாவது வீட்டில் கேது என நவ கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் தலைக்கு மேல் உள்ள கஷ்டங்கள் கவலைகள் நீங்கப்போகிறது. இந்த மாதம் ஆன்மீக பயணம் செய்யலாம். சுகமான பயணங்கள் செல்வதற்கு ஏற்ற மாதம். சுப விரையங்கள் செய்வதற்கு ஏற்ற மாதம். சூரியன் மாத பிற்பகுதியில் 12ஆம் வீட்டிற்கு வருவதால் சுப விரைய செலவுகள் நீங்கும். வேலை மாற்றத்திற்காக முயற்சி செய்யலாம். உற்சாகமாக இந்த மாதத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள். எது வந்தாலும் எதிர் கொள்ள தயாராகுங்கள். திருப்பங்களை நிகழ்த்தப்போகிற மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது. தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு இது ஏற்ற மாதமல்ல. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. பிள்ளைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கப்போகிறது. இந்த மாதம் முதல் புதிய அனுபவங்களை இன்பங்களை உற்சாகமாக அனுபவிக்கப் போகிறீர்கள். இந்த மாதம் அனுமனை சரணடையுங்கள் அல்லல்கள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். சுக்கிரன், புதன் இணைந்து லாப வீட்டில் பயணம் செய்கின்றனர். நான்காம் வீட்டில் செவ்வாய் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். விரைய ஸ்தானத்தில் சனி, இரண்டாவது வீட்டில் குரு, மூன்றாவது வீட்டில் ராகு, ஒன்பதாவது வீட்டில் கேது என நவ கிரகங்கள் பயணம் செய்கின்றன. விரைய சனி முடிந்து ஜென்ம சனி வரப்போகிறது. தலைமேல் சனி அமர்ந்தாலும் உங்கள் ராசி நாதன் உங்களுக்கு நன்மைகளையே செய்யப்போகிறார். இழந்தவைகளை மீட்கப்போகிறீர்கள். வியாபாரத்தில் தொழிலில் லாபம் அதிகரிக்கும். திருமண சுப காரியம் செய்வதற்கு ஏற்ற காலம்தான். கடனாக கொடுத்த பணம் இந்த மாதம் திரும்ப வரும். மன குழப்பங்கள் நீங்கும். மாணவர்களுக்கு மனதில் தெளிவு அதிகரிக்கும். குருவின் ஆசி கிடைக்கப்போகிறது. பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் உடலிலும் மனதிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் தொந்தரவுகள் நீங்கப்போகிறது. தொட்டது துலங்கும் மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது. தோஷங்கள் நிவர்த்திய அடையப்போகிறது. சாபங்கள் வரமாக மாற சந்தோஷமாக இருக்க சனிக்கிழமை நாளில் சனிபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். சுக்கிரன், புதன் இணைந்து பத்தாம் வீட்டில் பயணம் செய்கின்றனர். மாத பிற்பகுதியில் சூரியன் பத்தாம் வீட்டிற்கு வந்து அமர்வார். விரைய ஸ்தானத்தில் சனி, ராசியில் குரு, இரண்டாவது வீட்டில் ராகு, எட்டாவது வீட்டில் கேது என நவ கிரகங்கள் பயணம் செய்கின்றன. விரைய சனி முடிந்து ஏழரை சனி ஆரம்பிக்கப்போகிறது. உங்களுக்கு இந்த மாதம் நிறைய சாதகங்களை அள்ளித்தரப்போகிறது. ஜென்ம குரு ஹம்ச யோகத்தை தரப்போகிறார். குரு பலன் குரு பார்வையால் திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேசி முடிக்கலாம். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் பிரச்சினைகள் முடியப்போகிறது. பொருளாதாரநிலை உயரும். மனதில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கப்போகிறது. லாப சனியால் தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது. வேலை மாற்றம் செய்வதற்கு சரியான மாதம். குருவின் ஆசியால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. இரண்டாம் வீட்டில் ராகு உள்ளதால் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். ஏழரை சனி ஆரம்பிக்கப்போகிறது என்றாலும் தொழில் ஸ்தானத்தில் உள்ள கிரகங்கள் வேலை தொழிலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. அனுபவிக்கத் தயாராகுங்கள். குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் பாதிப்புகள் நீங்கி நல்லதே நடக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+