டிசம்பர் மாத ராசி பலன் 2022: ஹம்ச யோகம் யாருக்கு தேடி வரும்..கவனமாக இருக்க வேண்டியது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2022ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். கார்த்திகை, மார்கழி மாதங்கள் இணைந்த மாதம் டிசம்பர் மாதம். இந்த மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியிலும் தனுசு ராசியிலும் பயணம் செய்யப்போகிறார். மழைக்காலம் படிப்படியாக முடிந்து பனிக்காலம் தொடங்கும் டிசம்பர் மாதத்தில் ஆன்மீக அலைகள் அதிகம் வீசும். மாலை அணிந்த பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படும். கன்னி,துலாம், விருச்சிக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டின் கடைசி மாதம் இந்த மாதத்தில் கிரகங்கள் தனுசு ராசியில் கூட்டணி அமைக்கின்றன. சூரியன் மாத பிற்பகுதியில் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 3ஆம் தேதி புதன் இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு சென்று புதனோடு இணைகிறார்.

ஆண்டு கிரகங்களைப் பார்த்தால் சனி மகர ராசியிலும் குரு மீன ராசியிலும் பயணம் செய்கின்றனர். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் பயணத்தால் கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..சுக ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் சேர்ந்துள்ளதால் உங்களுக்கு சுகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. குரு பகவான் நேர் எதிராக அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் சாதகமாகவே அமைந்துள்ளது. செவ்வாய் 9ஆம் வீட்டில் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். சூரியன் 16ஆம் தேதி வரை 3ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலைக்காக இந்த மாதம் முயற்சி செய்யலாம். இடமாற்றத்தினால் நன்மைகள் நடைபெறும்.

யோகமான மாதம்

யோகமான மாதம்

கிரகங்களின் பார்வைகள் நன்றாக இருப்பதால் இடம் வீடு வாங்கலாம். வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகம் கை கூடி வந்துள்ளது. நல்ல காரியங்கள் செய்வதற்கு முன்பாக எதையும் யாரிடும் சொல்ல வேண்டாம். உங்களுடைய குடும்ப ரகசியங்களை.. பண விவகாரங்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம். களத்திர ஸ்தானமும், சுக ஸ்தானமும் நன்றாக இருப்பதால் காதலிப்பவர்கள் திருமணத்தை பேசி முடிக்கலாம். புத ஆதிபத்ய யோகமும் கை கூடி வரப்போவதால் மாணவர்களுக்கும் டிசம்பர் மாதம் அற்புதமாக அமைந்துள்ளது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன்..மூன்றாம் வீட்டில் சுக்கிரன், புதன், நான்காம் வீட்டில் சனி ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். விபரீத ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. கேது உங்கள் ராசியிலும் ராகு ஏழாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். இந்த மாதம் உங்களுக்கு நினைத்த காரியம் நடக்கப்போகிறது. நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை,தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். எந்த ஒரு காரியத்தையும் யோசித்து முடிவு செய்வது நல்லது. சிறு பயணங்கள் செல்வீர்கள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும்.

பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

திருமண சுபகாரியம் தொடர்பாக இந்த மாதம் முயற்சி செய்யாதீர்கள் நேரம் சரியில்லை. கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் செவ்வாயினால் பயணங்களில் வேகத்தை தவிர்ப்பது நல்லது. கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எதையும் வேகத்தோடு கையாளாமல் விவேகத்தோடு கையாளுங்கள். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். துன்பங்கள் துயரங்களை இந்த மாதம் கடந்து விடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. ராசியில் சூரியன், இரண்டாம் வீட்டில் சுக்கிரன்,புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. ராசி நாதன் செவ்வாய் 7 ஆம் வீட்டில் வக்ரமடைந்துள்ளார். சனி பகவான் நான்காம் வீட்டிலும் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டிலும் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். ராகு ஆறாம் வீட்டிலும் கேது 12ஆம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். 2022ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்களைத் தரப்போகிறது. குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். திருமண யோகம் கைகூடி வரும்.

திருமண யோகம் கை கூடி வரும்

திருமண யோகம் கை கூடி வரும்

செவ்வாய் வக்ர நிலையில் பயணம் செய்வதால் அதிகம் உணர்ச்சி வசப்பட வேண்டாம். இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு நகைகள் வாங்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியிருப்பதால் திருமண வாழ்க்கையில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. திருமண சுப காரியம் தொடர்பாக பேசலாம். மாணவர்களுக்கு அற்புதங்கள் நிகழும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு நல்ல மாதம். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு சாதகமான மாதம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+