டிசம்பர் மாத ராசி பலன் 2022: பொன் மழை பொழியும்.2 ராசிக்காரர்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழைக்காலம் படிப்படியாக முடிந்து பனிக்காலம் தொடங்கும் மாதம் டிசம்பர் மாதம். கார்த்திகை மாதம் பாதி நாட்களும் மார்கழி மாதம் பாதி நாட்களும் இணைந்த மாதம் டிசம்பர் மாதம். ஆன்மீக அலைகள் அதிகம் வீசும். மாலை அணிந்த பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யும் மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். மேஷம். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

2022ஆம் ஆண்டின் கடைசி மாதம் இந்த மாதத்தில் கிரகங்கள் தனுசு ராசியில் கூட்டணி அமைக்கின்றன. சூரியன் மாத பிற்பகுதியில் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 3ஆம் தேதி புதன் இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு செல்கிறார். டிசம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி தனுசு ராசிக்கு சென்று புதனோடு இணைகிறார்.

ஆண்டு கிரகங்களைப் பார்த்தால் சனி மகர ராசியிலும் குரு மீன ராசியிலும் பயணம் செய்கின்றனர். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் பயணம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான பலனைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

ராசி நாதன் செவ்வாய் 2ஆம் வீட்டில் வக்ரநிலையில் பயணம் செய்கிறார். 8ஆம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன் கூடியுள்ளன. டிசம்பர் 3ஆம் தேதி புதன் 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ராகு ராசியிலும் கேது 7ஆம் வீட்டிலும் பயணம் செய்கிறார். சந்திரனின் பயணம் சாதகமாகவே உள்ளது. மாத பிற்பகுதியில் 9ஆம் வீட்டிற்கு சூரியன் பயணம் செய்கிறார். உங்களின் அறிவும் திறமையும் பளிச்சிடும் மாதம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். நேர்மறை எண்ணங்களை அதிகரித்துக்கொள்ளுங்கள். மூத்த குடிமக்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

வேலையில் புரமோசன்

வேலையில் புரமோசன்

பிள்ளைகளால் சில செலவுகள் வரும். சனி பகவான் வேலையில் முன்னேற்றத்தை தருவார். புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். ராகு கேதுவின் பயணம் உடல் ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன இடையூறுகளைத் தறுவார். திருமண சுப காரியம் தொடர்பாக பேசுபவர்களுக்கு 15 நாட்களுக்குள் பேசி முடிவு செய்யுங்கள். மாத பிற்பகுதியில் பெரிய மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகள் வரலாம் அதை சுப விரைய செலவாக மாற்றுங்கள்.

கணவன் மனைவி ஒற்றுமை

கணவன் மனைவி ஒற்றுமை

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் நடந்த தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சுக்கிரனால் வேலையில் புரமோசன் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு பொன் ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக்கொள்ளாதீர்கள். இறை நம்பிக்கையோடு எதையும் எதிர்கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். டிசம்பர் மாதம் அற்புதங்களை நிகழ்த்தும் மாதமாக மாறும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு சனி பகவான் சாதகமாக இருக்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் கூட்டணி அமைக்கப்போகின்றன. விபரீத ராஜ யோகம் கை கூடி வரப்போகிறது. உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். எந்த நெருக்கடிகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

ஆலய தரிசனம்

ஆலய தரிசனம்

புதன், சுக்கிரன் எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டினை பார்வையிடுவதால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். சனி பகவான் 9ஆம் வீட்டில் அமர்ந்து லாப ஸ்தானத்தில் உள்ள குருவை பார்வையிடுகிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்த சிரமங்கள் நீங்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். மாத பிற்பகுதியில் சூரியன், புதன் சுக்கிரனுடன் இணைந்து பயணம் செய்கிறார்.

திருமண சுபகாரியம்

திருமண சுபகாரியம்

திருமணம் சுப காரியம் தொடர்பான விசயங்களை தள்ளிப்போடுவது நல்லது. கணவன் மனைவி இடையே சின்னச்சின்ன ஊடல்கள் வந்து போகும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். புத்திரபாக்கியம் கை கூடி வரும். டிசம்பர் மாதத்தில் பொதுவாக எந்த தேவையற்ற விசயங்களிலும் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. வாகன பயணங்களில் கவனமும் நிதானமும் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+