டிசம்பர் மாத ராசி பலன் 2023: அள்ளித்தரப்போகும் குரு.. தடைகளை தாண்டி முன்னேறும் ராசிக்காரர்கள் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் மாதத்தில் சூரியன் விருச்சிகம் மற்றும் தனுசு ராசியில் பயணம் செய்வார். சூரியன், செவ்வாய், புதன் கூட்டணி யோகத்தை தரப்போகிறது. அதே நேரத்தில் சனியின் பார்வை தனித்த குருவிற்கு கிடைப்பதால் சிலரது வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகும். மிதுனம், கடக ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மிதுனம்: 2023ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் சாதகமாக உள்ளது. குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்தால் பண வருமானம் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எத்தனையோ கஷ்டங்களை தாண்டி வந்திருப்பீர்கள். இனி எல்லாம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த நாட்களாக இருக்கும். குரு பகவானின் பார்வையும் சாதகமாக உள்ளது.

December matha rasi palan 2023: Mithunam and Kadagam rasi palan month of December

நேர்மறை எண்ணங்கள்: 5ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் சுக்கிரன் வெற்றிகளை தேடித்தருவார். திறமை பளிச்சிடும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் தேடி வரும். வேலை வாய்ப்பு சிறப்பாக இருக்கும். சனிபகவான் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை பெற்றுத்தருவார். திருமணம் சுப காரியத்திற்காக முயற்சி செய்யலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

வெற்றிகள் தேடி வரும்: வெற்றிகள் கிடைக்கப்போகிறது. உங்கள் ராசிநாதன் புதன் 7ஆம் வீட்டில் அமர்ந்து பார்வையிட்டாலும் அவர் வக்ரமடைகிறார். பண விசயங்களில் கவனம் தேவை. பேச்சில் கவனம் தேவை. உங்களின் திறமை அதிகரிக்கும் அறிவு வளர்ச்சியடையும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டவும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. இந்த மாதத்தில் சனி அஷ்டமத்தில் பயணம் செய்கிறார். குரு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். மனதில் நீங்கள் எத்தனையோ கவலைகளை சுமந்து கொண்டிருந்தாலும் தெளிவாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள். 5ஆம் வீட்டில் உள்ள சூரியன் செவ்வாய் 6ஆம் வீட்டிற்கு செல்லப்போகின்றனர். ராசிக்கு ஆறாம் வீட்டில் மாத பிற்பகுதியில் கிரகங்கள் இணைகின்றன. ராசிநாதன் சந்திரன் சுகங்களை தரப்போகிறார்.

வருமானம் அதிகரிக்கும்: டிசம்பர் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். குரு பகவான் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுக்கிரன் சுக போகங்களைத் தரப்போகிறார். வீடு மனை வாங்குவதற்கான யோகம் கிடைக்கும். அஷ்டமத்து சனி சோதனைகளைக் கொடுப்பார். தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். பொறுமையும் நிதானமும் அவசியம். வேகத்தையும் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள். சனிக்கிழமையன்று சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+