டிசம்பர் மாத ராசி பலன் 2023: பஞ்சமகா புருஷ யோகம்.. பண மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: 2023ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன. சூரியன் இந்த மாதத்தில் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளில் பயணம் செய்கிறார். நவ கிரகங்களின் பயணம் பார்வையை பொருத்து டிசம்பர் மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்: யோகமான மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது. ராசிநாதன் சூரியன் நான்காம் வீட்டில் பயணம் செய்தாலும் மாத பிற்பகுதியில் 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. தளபதியாக திகழும் செவ்வாய் பகவானும் உங்களுக்கு சாதகமான நிலையிலேயே ஆட்சி பெற்று ருச்சிக யோகத்தை தந்து கொண்டிருக்கிறார். குரு பகவானும் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வது பாக்யங்களை தந்து கொண்டிருக்கிறார்.

பஞ்சமகா புருஷ யோகம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. 7ஆம் வீட்டில் அமர்ந்துள்ள சனி பகவான் கண்டச்சனியாக இருந்தாலும் சச மகா யோகத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார். சொத்து, வீடு, நிலம் வாங்கும் யோகம் வந்து விட்டது. எத்தனையோ சோதனைகளை கடந்து வந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இனி எல்லாம் சாதனைகளை நிகழ்த்தப்போகும் காலமாக அமைந்துள்ளது. பூர்வீக சொத்துக்கள், முன்னோர்கள் சொத்துக்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கப்போகிறது.
மாணவர்களுக்கு இது அற்புதமான காலம். மிகச்சிறப்பான வளர்ச்சி கிடைக்கும். கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் சிறப்பாக தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் வரும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு மேன்மைகள் நிறைந்த மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு, பெண்களுக்கு மாணவர்களுக்கு இது சிறப்பான மாதம். சனிபகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய குடும்ப ஸ்தான அதிபதி சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று பயணம் செய்வது மகாலட்சுமி யோகத்தை தரப்போகிறது. நிறைய பண வருமானம் வரப்போகிறது. செலவுகள் கட்டுக்கு அடங்கியிருக்கும். இந்த மாதம் நிறைய சேமிப்பீர்கள்.
கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை கடந்திருப்பீர்கள். இந்த மாதம் அஷ்டம ஸ்தானத்தில் உள்ள குரு பகவானை சுக்கிரன் பார்வையிடுவதால் பணமழை பொழியப்போகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்காக கிடைக்கப்போகிறது. பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். கன்னி ராசிக்காரர்களுக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய பொற்காலமாக அமைந்துள்ளது. வரக்கூடிய அதிர்ஷ்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
துலாம்: டிசம்பர் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரப்போகிறது. உங்களுடைய ராசி நாதன் சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் மாளவியா யோகம் கிடைக்கப்போகிறது. சுக்கிரன் மீது ஏழாம் வீட்டில் உள்ள குரு பகவானின் பார்வையும் கிடைக்கிறது. குரு சுக்கிர யோகம் உங்களுக்கு கோடி கோடியாக செல்வத்தை தரப்போகிறது. இனி வரும் காலங்களில் பண மழையில் நனையப்போகிறீர்கள். 5ஆம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனி பகவான் பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபத்தை தரப்போகிறார்.
அலுவலகத்தில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரப்போகிறது. இதுநாள் வரை இருந்த தடைகள் விலகி இனி சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். ராகு கேதுவின் பயணமும் சாதகமாக உள்ளது. 6ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு விபரீத ராஜயோகத்தை அள்ளித்தரப்போகிறார். வெற்றியை தேடித்தரக்கூடிய பொற்காலமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications