டிசம்பர் மாத ராசி பலன் 2023: விபரீத ராஜ யோகம்.. யார் வீட்டில் பெட்டி நிறைய பணம் நிறையும்?
சென்னை: 2023ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம். இந்த மாதத்தில் ருச்சிக யோகம், சசயோகம், மாளவியா யோகம் செயல்படப்போகிறது. சூரியன் இந்த மாதத்தில் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளில் பயணம் செய்கின்றனர். நவ கிரகங்களின் சஞ்சாரத்தை பொறுத்து விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன யோகங்கள் செயல்படப்போகிறது என்று பார்க்கலாம். கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் மாதமாக டிசம்பர் மாதம் அமைந்துள்ளது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். ருச்சிக யோகம் கைகூடி வந்துள்ளது. ஆட்சி பெற்ற செவ்வாய் உடன் சூரியன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். அற்புதமான யோக காலமாகும். கிரகங்கள் கூட்டணி மாத பிற்பகுதியில் தனுசு ராசியில் இணையப்போகிறது. அதிகார பதவி தேடி வரும். நல்லவை தீயவை எது என்று புரிந்து கொள்வீர்கள்.

அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசன் தேடி வரும். எதிரிகள் தொல்லை நீங்கும். அரசு தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். அதிகார பதவியை செவ்வாய் பகவான் தரப்போகிறார். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கப்போகிறது. நிறைய பேருக்கு புரமோசன் கிடைக்கும் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். பெண்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். பொன் நகை சேர்க்கை உண்டாகும்.
உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆறாம் வீட்டில் குரு பயணம் செய்வதால் கடன் பிரச்சினை வரலாம். அகலக்கால் வைத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு பணத்தை கடனாக வாங்கித்தர வேண்டாம்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் யோகமான மாதமாக அமைந்துள்ளது. இந்த மாதம் உங்களுக்கு அற்புதங்களைத் தரப்போகிறது. சுப கிரகமான குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. பண வருமானம் அற்புதமாக இருக்கும். பிசினஸ் சிறப்பாக இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் இருந்த தொல்லைகள் நீங்கப்போகிறது. புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கப்போகிறது,
இந்த மாதத்தில் உங்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஆட்சி பெற்ற செவ்வாய் 12ஆம் வீட்டில் பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் கூடி வரப்போகிறது. பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு வந்து புதனோடு இணையப்போகிறார். லாப ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சுக்கிரன் மீது குருவின் பார்வை விழுகிறது. நிறைய பண வருமானம் வரும். பொற்காலத்தை தரக்கூடிய மாதமாக தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதம் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications