Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 .. கன்னி, துலாம் ராசிக்காரங்களுக்கு கலகலன்னு காதல் மலருமாம்!

நவம்பர் மாதம் முடிந்து டிசம்பர் பிறக்கப் போகிறது. 2019ஆம் ஆண்டில் கடைசி மாதம் இந்த மாதத்தில் நவகிரகங்கள் சஞ்சாரம் எப்படி இருக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. நவ கிரகங்களில் 6 கிரகங்கள் மொத்தமாக தனுசு ராசியில் கூடப்போகின்றன. இந்த மாத இறுதியில் நிகழும் இந்த கிரக சேர்க்கையில் சந்திரன் தவிர ஐந்து முக்கிய கிரகங்கள் 15 நாட்களுக்கு மேல் தனுசுவில் கூடியிருக்கும். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் டிசம்பர் மாதத்தில் கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம். இந்த ராசி பலன்கள் பொதுவானவைதான் உங்களின் சுய ஜாதகத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொருத்தும் தசா புத்தியை பொருத்தும் உங்களுக்கு பலன்கள் மாற வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் முக்கிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. மிதுனத்தில் ராகு, துலாம் ராசியில் செவ்வாய், புதன், விருச்சிகத்தில் சூரியன், தனுசு ராசியில் குரு, சனி, கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சந்திரன் என இந்த மாதம் பிறக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி புதன் விருச்சிகத்திற்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 15ஆம் தேதி சுக்கிரன் தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 17ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் தரும்.

நவ கிரகங்கள் எல்லோருக்குமே நன்மையோ, தீமையோ செய்வதில்லை. கிரகங்களின் கூட்டணியால் டிசம்பர் மாதத்தில் கன்னி, துலாம் ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்குமா? திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும், விரைய செலவுகள் எதுவும் வருமா என்று பார்க்கலாம்.

ரொம்ப நல்ல மாதம்

ரொம்ப நல்ல மாதம்

புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரங்களே, பத்தில் ராகு சஞ்சரிக்கிறார். பத்தில் ஒரு பாவி இருப்பது நல்லது நல்ல வேலை கிடைக்கும். ராசி நாதன் புதன் பண வரவை தருவார், தகவல் தொடர்பில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் புதிய வேலை கிடைக்கும். புரோக்கரேஜ் தொழில் செய்பவர்களுக்கு ரொம்ப நல்ல மாதம், பங்குச்சந்தை தொழில் செய்பவர்களுக்கு லாபம் வரும். உங்க ராசி அதிபதியும் பத்துக்கு உடைய புதன் உங்க ராசிக்கு நல்லதே செய்வார். இந்த மாதம் நன்மை தீமை கலந்த மாதம்தான்.

கோபத்தை தவிர்க்கவும்

கோபத்தை தவிர்க்கவும்

மாணவர்களுக்கு நன்மையான மாதம், கேம்பஸ் இண்டர்வியூல வேலை கிடைக்கும். கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்கள் கவனமாக இருக்கணும். உங்களின் செல்வ நிலை உயரும். மகள், மனைவிக்கு தேவையான பொன்நகைகளை வாங்கி கொடுப்பீர்கள். கோரிக்கைகள் நிறைவேறும். இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் கவனம் வீட்டில் கோபமாக பேச வேண்டாம் வீண் வம்பு வாக்கு வாதங்களை தவிர்த்து விடுங்கள்.

காதல் மலரும் காலம்

காதல் மலரும் காலம்

அர்த்தாஷ்டம சனி உங்க ராசிக்கு இன்னும் 2 மாதத்திற்கு இருக்கு. புதன் டிசம்பர் 5ஆம் தேதி மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார். தைரியத்தை தருவார் புதன். நான்காம் வீட்டில் சனி கேது, குரு, சுக்கிரன், புதன், சூரியன் என ஆறு கோள்கள் மாத இறுதியில் இணைகின்றன. சுக்கிரன் டிசம்பர் 15ஆம் தேதி ஐந்தாம் வீடான மகரம் ராசிக்கு நகர்கிறார். சுக்கிரன் ஐந்தாம் வீட்டிற்கு மாறும் காலத்தில் காதல் வயப்பட வாய்ப்பு உள்ளது. வருமானம் கிடைக்கும். முதலீடுகளில் லாபம் வரும் கன்னி ராசிக்கு நல்லது நடக்கும்.

வாக்குவாதம் வேண்டாத்

வாக்குவாதம் வேண்டாத்

உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. பயணங்களில் நிதானமாக இருங்க. மாத இறுதியில் 6 கிரகங்கள் சேருவதால் அம்மாவின் உடல் நலத்தில அக்கறை காட்டுங்க. சொத்துக்கள் வாங்குவது, வெளியூர், வெளிநாடு பயணம் செல்வதை அந்த 3 நாட்கள் தவிர்த்து விடுங்க. ஆண்டின் இறுதியில் இருந்தாலும் இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதம்தான். செவ்வாய் வேறு இரண்டாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில வாக்குவாதம் வேண்டாம். வீட்ல என்ன சொன்னாலும் அமைதியாக இருங்க. கூடுமானவரை மவுன விரதம் இருப்பது ரொம்ப நல்லது. காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

வேலை கிடைக்கும்

வேலை கிடைக்கும்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரங்களே, மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. டிசம்பர் 5ஆம் தேதி புதன் குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு நகர்கிறார். வாக்கு திறமை பளிச்சிடும். மாணவர்களுக்கு அற்புதமான மாதம் தேர்வு நல்லா எழுதுவீங்க. வேலை தேடுபவர்களுக்கு திறமை அதிகமாகும் நல்ல வேலை கிடைக்கும். நிறைய வருமானம் வரும். சுக்கிரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருக்கிறார்.

புதிய வேலை கிடைக்கும்

புதிய வேலை கிடைக்கும்

பெண்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பொன் நகைகள் சேர்க்கை அதிகமாகும். மாத பிற்பகுதியில் உங்க ராசி நாதன் சுக்கிரன் நான்காம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு பத்தாம் வீட்டை பார்ப்பார். வண்டி வாகன சேர்க்கை அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி பண்ணுங்க. வருமானம் அதிகம் தரக்கூடிய வேலை கிடைக்கும். ஆண்கள் விலை உயர்ந்த பைக் வாங்குவீர்கள்.

தம்பதியர் உறவு அற்புதம்

தம்பதியர் உறவு அற்புதம்


திருமணமான தம்பதியருக்கு இருந்த குறைபாடுகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்க கடவுள் அனுக்கிரகம் வரும். வயிறு தொடர்பான நோய்கள் வரலாம். படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டின் மீது விழுவது அப்பாவிற்கு நல்லது
செவ்வாய் சஞ்சாரம் உங்க ராசியில் இருந்து களத்திர ஸ்தானத்தை பார்ப்பது கணவன் மனைவி உறவு அற்புமாக இருக்கும். 25ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருப்பதால் பேச்சில் கவனமாக இருங்க கோபமாக பேசாதீங்க. குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும்.

குதூகலமான பயணம்

குதூகலமான பயணம்

மாத பிற்பகுதியில் சூரியன் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார். ஆறு கோள்கள் மூன்றாம் வீட்டில் இணைவதால் சகோதர சகோதரி உறவில் கவனமாக இருங்க. ஒன்பதாம் இடத்தை அனைத்து கிரகங்களும் பார்க்கின்றன ஆன்மீக பயணம் கிடைக்கும். எதிர்பாராத யோகம் வரும். மாத பிற்பகுதியில் ராசி அதிபதி சுக்கிரன் நான்காம் வீட்டில் இருப்பது நன்மை. சகோதர உறவில் கவனமாக இருங்க. சிறு பயணங்கள் நன்மை கொடுத்தாலும் பாதுகாப்பான பயணம் அவசியம். குடும்பத்தோடு குதூகலமான பயணம் செல்வீர்கள். குரு பார்வையால் நாக தோஷம் பித்ரு தோஷம் நீங்கும். நல்ல லாபம் வரும். சீனியர்ஸ் உடல் நலத்தில கவனம் செலுத்துங்க. பெருமாள் கோவிலுக்கு போய் வழிபட்டு வாங்க நல்லது நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+