Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 - மகரம்,கும்பம், மீனம் ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

நவம்பர் மாதம் முடிந்து டிசம்பர் பிறக்கப் போகிறது. 2019ஆம் ஆண்டில் கடைசி மாதம் இந்த மாதத்தில் நவகிரகங்கள் சஞ்சாரம் எப்படி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. நவ கிரகங்களில் 6 கிரகங்கள் மொத்தமாக தனுசு ராசியில் கூடப்போகின்றன. இந்த மாத இறுதியில் நிகழும் இந்த கிரக சேர்க்கையில் சந்திரன் தவிர ஐந்து முக்கிய கிரகங்கள் 15 நாட்களுக்கு மேல் தனுசுவில் கூடியிருக்கும். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் டிசம்பர் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம். இந்த ராசி பலன்கள் பொதுவானவைதான் உங்களின் சுய ஜாதகத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொருத்தும் தசா புத்தியை பொருத்தும் உங்களுக்கு பலன்கள் மாற வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் முக்கிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. மிதுனத்தில் ராகு, துலாம் ராசியில் செவ்வாய், புதன், விருச்சிகத்தில் சூரியன், தனுசு ராசியில் குரு, சனி, கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சந்திரன் என இந்த மாதம் பிறக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி புதன் விருச்சிகத்திற்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 15ஆம் தேதி சுக்கிரன் தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 17ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் தரும்.

நவ கிரகங்கள் எல்லோருக்குமே நன்மையோ, தீமையோ செய்வதில்லை. கிரகங்களின் கூட்டணியால் டிசம்பர் மாதத்தில் மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்குமா? திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும், விரைய செலவுகள் எதுவும் வருமா புதிய வேலைகள் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

முன்னேற்றமான மாதம்

முன்னேற்றமான மாதம்

மகரம் ராசிக்காரர்களுக்கு இது மிகச்சிறந்த யோகமான மாதம், நிறைய நன்மைகள் நடைபெறப் போகிறது. ராகு நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தருவார். உங்க ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மாத துவக்கத்தில் விரைய ஸ்தானத்தில் சனி, கேது, சுக்கிரன், குரு லாப ஸ்தானத்தில் சூரியன், தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன், ஆறாம் வீட்டில் ராகு என அமைந்துள்ளது. மகரம் ராசிக்கு 15ஆம் தேதி சுக்கிரன் வருவார். மகரம் ராசிக்கு பத்துக்கு உரிய சுக்கிரன் உங்க ராசிக்கு வருவது சிறப்பு. பெண்களுக்கு நல்ல மாதம், வேலையிலும், குடும்பத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

சனி 12ஆம் வீட்டு அதிபதி குருவோடு சேர்ந்திருக்கிறார். 12ஆம் வீடு வலுத்திருக்கிறது. இடமாற்றம் ஏற்படும். வேலையிலும், இருக்கக்கூடிய வீடுகளிலும் இடமாற்றம் நன்மையை தரும். சிலர் வெளிநாடுகளில் இருந்து சொந்த நாட்டிற்கு வருவார்கள். 16ஆம் தேதி சூரியன் உங்க விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி 12ஆம் அதிபதிகள் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளனர். விபரீத ராஜயோகமாகும். மாத இறுதியில் உங்க விரைய ஸ்தானத்தில் சனி, குரு, சூரியன், சந்திரன்,புதன்,கேது ஆறு கிரகங்கள் இணைகின்றனர்.

நிதானம் தேவை

நிதானம் தேவை

என்னதான் நல்ல மாதமாக இருந்தாலும் ஆறு கிரக சேர்க்கையால் மாத இறுதியில் மகரத்திற்கு மன உளைச்சலை கொடுக்கும். திடீர் பிரயாணத்தை கொடுக்கும் முடிந்த அளவிற்கு தவிர்த்து விடுங்க. எதிர்பாராத செலவுகள் வரலாம். பெற்றோர்கள் உடல் நலத்தில கவனமாக இருங்க. செலவுகளை சுருக்கிக்கங்க. வண்டி வாகன வசதிகள் ஏற்படும். விழிப்புணர்வோட இருங்க வண்டி வாகனத்தில் போறப்ப நிதானமும் கவனமும் தேவை. பெண்கள் உடல் நலத்தில கவனமாக இருங்க. தனியாக எங்கேயும் நேரங்கெட்ட நேரத்தில போகாதீங்க. பாதுகாப்பா இருங்க. மகரம் டிசம்பர் மாதம் விழிப்புணர்வோட இருந்தா பிரச்சினைகளை எளிதாக கையாளலாம். பைரவர் வழிபாடு அவசியம் செய்யவும். நிறைய தான தர்மங்கள் செய்யலாம்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

இந்த மாதம் கும்பத்தில் லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூட்டணி அமைந்துள்ளது. லாப ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. பத்தாம் வீட்டில் சூரியன், ஒன்பதாம் வீட்டில் புதன் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. புதன் பெயர்ச்சியாகி தொழில் ஸ்தானத்திற்கு வருவார். புதன் நன்மை செய்வார். உங்க தொழிலில் லாபத்தை தருவார். பெண்களுக்கு அற்புதமான கால கட்டம். லாபத்தில் உள்ள சுக்கிரன் பல நன்மைகளை கொடுப்பார். செவ்வாய் 25ஆம் தேதி தொழில் ஸ்தானத்திற்கு வருவது சிறப்பு. சொத்துக்கள் வாங்கலாம். சுக்கிரன் 15ஆம் தேதி உங்க ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு மாறுகிறார். வெளிநாடு யோகம் தேடி வரப்போகிறது. சுக்கிரன் மறையும் போது உடல் நலத்தில கவனமாக இருங்க. பெற்றோர்கள் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்க. மருத்துவ பரிசோதனை தேவை.

ஆதாயம் அதிகமாகும்

ஆதாயம் அதிகமாகும்

குரு பகவான் லாபத்தில் இருக்கிறார் நல்ல தன செழிப்பு ஏற்படும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குங்க. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. டிசம்பர் மாதத்தில் ஆறு கிரக சேர்க்கை அற்புதமான பலன்களை கொடுப்பார். மாணவர்களுக்கு அற்புதமான மாதம், குடும்பத்திலும் குதூகலமாக இருக்கும். நல்ல ஆதாயம் கொடுக்கக்கூடிய மாதம் இந்த டிசம்பர் மாதம் என்பது சிறப்பு. எதையும் தள்ளி வைக்காதீங்க முடிக்க வேண்டிய நல்ல காரியங்களை முடிச்சிருங்க. துர்க்கையம்மனை விளக்கேற்றி வழிபடுங்க நல்லதே நடக்கும்.

வாகனத்தில் கவனம்

வாகனத்தில் கவனம்

இந்த மாதம் மீனம் ராசிக்கு பத்தாம் வீட்டில் சனி,குரு, கேது, சுக்கிரன் சஞ்சாரம் உள்ளது எட்டாம் வீட்டில் செவ்வாய், புதன், ஒன்பதாம் வீட்டில் சூரியன், நான்காம் வீட்டில் ராகு சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் எட்டில் இருந்தாலும் உங்க தன ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு நன்றாகவே இருக்கும். வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக இருங்க, நெருப்பு, கூர்மையான ஆயுதங்களை கையாளும் போது கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருங்க.
புதன் ஒன்பதாம் வீட்டிற்கு விரைவில் வருகிறார். தொழில் லாபத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு படிப்பு, உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. தேர்வு பயம் நீங்கிவிடும்.

திடீர் அதிர்ஷ்டங்கள்

திடீர் அதிர்ஷ்டங்கள்

பத்தாம் வீட்டில் ஆறு கிரக சேர்க்கை பதவி உயர்வை கொடுக்கும். நினைத்தது நிறைவேறும். யோகமான காலகட்டம், வீடு, நிலம் வாங்கலாம். புதிய வேலை மாறலாம். சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருந்தாலும் 15ஆம் தேதிக்கு மேல் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். உங்களுக்கு நல்லதே செய்வார். திருமண யோகம் கை கூடி வருகிறது. சுக்கிரன் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும் பயணங்களில் சுபம் ஏற்படும். செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்கு மாத இறுதியில் வந்து தனது ராசியில் ஆட்சி பெற்று அமரும் போது இன்னும் நல்ல பலன்களை கொடுக்கும். இது மாற்றங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கை கொடுக்கும். சந்தோஷமாக டிசம்பர் மாதத்தை கொண்டாடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+