Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 - மேஷம், ரிஷபம் மிதுனம் ராசிகளுக்கு எப்படி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. நவ கிரகங்களில் 6 கிரகங்கள் மொத்தமாக தனுசு ராசியில் கூடப்போகின்றன. சந்திரன் தவிர ஐந்து முக்கிய கிரகங்கள் தனுசுவில் கூடியிருக்கும். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் டிசம்பர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம். இந்த ராசி பலன்கள் பொதுவானவைதான் உங்களின் சுய ஜாதகத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொருத்தும் தசா புத்தியை பொருத்தும் உங்களுக்கு பலன்கள் மாற வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் முக்கிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. மிதுனத்தில் ராகு, துலாம் ராசியில் செவ்வாய், புதன், விருச்சிகத்தில் சூரியன், தனுசு ராசியில் குரு, சனி, கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சந்திரன் என இந்த மாதம் பிறக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி புதன் விருச்சிகத்திற்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 15ஆம் தேதி சுக்கிரன் தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 17ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் தரும்.

நவ கிரகங்கள் எல்லோருக்குமே நன்மையோ, தீமையோ செய்வதில்லை. கிரகங்களின் கூட்டணியால் டிசம்பர் மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்குமா? பணவருமானம் எப்படி இருக்கும் குடும்பத்தில் சந்தோஷம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

நல்லது நடக்கும்

நல்லது நடக்கும்

மேஷம் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் கிரகங்கள் இணைகின்றன. முதல் 25 நாட்கள் உங்க ராசி நாதன் செவ்வாய் பார்வை ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பதிகிறது தெளிவாக திட்டமிடுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். புதன் எட்டாம் வீட்டிற்கு செல்வதால் இடையூறுகள் விலகும். 15ஆம் தேதி சுக்கிரன் மகரம் ராசிக்கு மாறுகிறார். பணம் தேடி வரும் ரியல் எஸ்டேட் லாபம் தரும். 25 ஆம் தேதி செவ்வாய் எட்டாம் வீட்டிற்கு வருகிறார். செவ்வாய் ஆட்சி பெற்று அமர்கிறார். இரண்டாம் மற்றும் மூன்றாம் வீட்டில் செவ்வாய் பார்வை படுகிறது. அடுத்த வருஷம் என்ன பண்ணலாம் என்று திட்டம் போடுங்க நல்லதா நடக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டம்

மாத இறுதியில் ஆறு கிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் இணைகின்றன. இந்த கிரக சேர்க்கை எப்படி இருக்கும் என்றால் அது நன்மையை தரும். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தை நல்லதாக நடக்கும். கடன் அடைக்க வருமானம் வரலாம். கல்வியில் உயர்கல்வி யோகம் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் நோய்கள் தீரும். சாதகமான பலன்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். எதிர்பாராத நன்மைகளை கொடுக்கும். செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

எச்சரிக்கை தேவை

எச்சரிக்கை தேவை

அஷ்டமத்து சனி எட்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. அந்த மூன்று நாட்களில் கவனமாக இருங்க. பண விசயத்தில் எச்சரிக்கையாக இருங்க. யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. ஆறாம் வீட்டில் செவ்வாய், டிசம்பர் 25ஆம் தேதி விருச்சிகத்திற்கு ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார். சூரியன் ஏழாம் வீட்டில் 16ஆம் தேதி வரை இருக்கிறார். புதன் டிசம்பர் 5ஆம் விருச்சிகத்திற்கு வருகிறார். உங்க ராசியின் மீது பார்வை படுகிறது. புதன் பார்வையால் பணவரவு அதிகமாகும். திருமண விசயங்களில் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.

கடன் விவகாரங்களில் கவனம்

கடன் விவகாரங்களில் கவனம்

சூரியன் 16ஆம் தேதி நகர்ந்து எட்டாம் வீட்டில் சனி, கேது குரு , புதன், உடன் இணைகிறார். சந்திரன் 25ஆம் தேதி எட்டாம் வீட்டிற்கு நகர்கிறார். சூரியன் பெயர்ச்சி உங்களுக்கு உடல் நலத்தை பாதிக்கும். எச்சரிக்கையாக இருங்க. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் எட்டிப்பார்க்கும். மழை கால நோய்கள் உண்டாகலாம். உங்க ராசிநாதன் சுக்கிரன் டிசம்பர் 15ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். பாதிப்புகளில் இருந்து உங்களை காப்பாற்றுவார். டிசம்பர் 25ஆம் தேதி ஆறு கிரகங்கள் இணைகின்றன. காதல் விவகாரங்களில் கவனம். பயணங்களில் கவனமாக இருங்க. தேவையில்லாத வார்த்தைகளை பேச வேண்டாம், பணம் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் வழிபட பாதிப்புகள் குறையும்.

மிதுனம்

மிதுனம்

உங்க ராசிநாதன் 5 ஆம் தேதி ஆறாம் வீட்டிற்கும் 25ஆம் தேதி 7ஆம் வீட்டிற்கு நகர்கிறார். ஆறாம் வீட்டில் உள்ள சூரியன் 16ஆம் தேதிக்கு மேல் ஏழாம் வீட்டிற்கு நகர்கிறார். ஆறு கிரக கூட்டணி ஏழாம் வீட்டில் இருக்கின்றன. பத்தாம் இடத்திற்கு பத்தாம் இடம் ஏழாம் வீடு. தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். நிதானமாக இருங்க. திடீர் முடிவுகள் ஏற்படும். ஆபத்து எதுவும் இல்லை என்றாலும் அவசரப்பட வேண்டாம். டிசம்பர் 25 முதல் 27 இரவு வரை ஆறு கிரகங்கள் உங்க ராசியை பார்க்கிறார்கள். குரு பார்வை இருப்பதால் நல்லதே நடக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்க. திருமணம் தொடர்பான முடிவுகள் எடுப்பதை ஒத்திப்போடுங்க. பயணங்களை ஒத்திப்போடுங்க. இந்த கிரகங்கள் விலகிய பின்னர் முடிவுகளை எடுங்க. இடமாற்றம், வேலை மாற்றம் பற்றி கொஞ்சம் யோசிங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இந்த மாதம் நீங்க பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+