Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிசம்பர் மாத ராசி பலன்கள் 2019 - விருச்சிகம், தனுசு ராசிக்காரங்க ரொம்ப கவனமாக இருங்க

நவம்பர் மாதம் முடிந்து டிசம்பர் பிறக்கப் போகிறது. 2019ஆம் ஆண்டில் கடைசி மாதம் இந்த மாதத்தில் நவகிரகங்கள் சஞ்சாரம் எப்படி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2019ஆம் ஆண்டின் கடைசி மாதம் டிசம்பர் மாதம் பிறக்கப் போகிறது. நவ கிரகங்களில் 6 கிரகங்கள் மொத்தமாக தனுசு ராசியில் கூடப்போகின்றன. இந்த மாத இறுதியில் நிகழும் இந்த கிரக சேர்க்கையில் சந்திரன் தவிர ஐந்து முக்கிய கிரகங்கள் 15 நாட்களுக்கு மேல் தனுசுவில் கூடியிருக்கும். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் டிசம்பர் மாதத்தில் விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம். இந்த ராசி பலன்கள் பொதுவானவைதான் உங்களின் சுய ஜாதகத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதைப் பொருத்தும் தசா புத்தியை பொருத்தும் உங்களுக்கு பலன்கள் மாற வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் மாதத்தில் தனுசு ராசியில் முக்கிய கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளன. மிதுனத்தில் ராகு, துலாம் ராசியில் செவ்வாய், புதன், விருச்சிகத்தில் சூரியன், தனுசு ராசியில் குரு, சனி, கேது, சுக்கிரன், மகரம் ராசியில் சந்திரன் என இந்த மாதம் பிறக்கிறது. டிசம்பர் 5ஆம் தேதி புதன் விருச்சிகத்திற்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 15ஆம் தேதி சுக்கிரன் தனுசுவில் இருந்து மகரம் ராசிக்கு மாறுகிறார். 17ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு மாறுகிறார். டிசம்பர் 25ஆம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகங்களின் மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும், சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களையும் தரும்.

நவ கிரகங்கள் எல்லோருக்குமே நன்மையோ, தீமையோ செய்வதில்லை. கிரகங்களின் கூட்டணியால் டிசம்பர் மாதத்தில் விருச்சிகம் மற்றும் ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்குமா? திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும், விரைய செலவுகள் எதுவும் வருமா என்று பார்க்கலாம்.

கிரகங்கள் கூட்டணி

கிரகங்கள் கூட்டணி

சூரியன் உங்க ராசியில் 15 நாட்கள் இருக்கிறார். 17ஆம் தேதிக்கு மேல் இரண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் சனி இரண்டாம் வீட்டில் இருக்கிறார். வெளிநாட்டில் இருப்பவங்கள் விசா விசயத்தில் கவனமாக இருங்க உங்க உடல் நலத்தில அக்கறை காட்டுங்க. உடல் நல தொந்தரவு ஏற்படும். விருச்சிகம் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். சின்னச் சின்ன விரைய செலவுகள் வரும். அலைச்சல் ஏற்படும். குரு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். குரு பலம் வந்திருக்கு, வெளிநாடு யோகம், வேலை பணவரவை தருகிறார்.

கவனம் தேவை

கவனம் தேவை

பெண்களுக்கு நல்ல மாதம். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் பொன் நகை சேரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். மாத இறுதியில் ஆறு கிரக சேர்க்கை ஏற்படும். இது உங்களுக்கு சின்ன குழப்பத்தை தரும். ரொம்ப கவனமாக இருங்க. சுக்கிரன் இரண்டாம் வீட்ல இருக்கிறார். அவர் 15ஆம் தேதிக்கு மேல் மூன்றாம் வீட்டிற்கு போகிறார். கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. சீனியர் சிட்டிசன்ஸ் கவனமாக இருங்க.

பணம் நகை பத்திரம்

பணம் நகை பத்திரம்

இந்த மாதத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பெரிய அளவில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். பணம் விசயம் மட்டுமல்ல எந்த தொழில் முதலீடுகளையும் டிசம்பர் மாதத்தில் செய்ய வேண்டாம். 25ஆம் தேதிக்கு மேல உங்க ராசி நாதன் உங்க ராசியில வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்க தைரியத்தை அதிகரிக்கும். 25 முதல் 27 வரை மூன்று நாட்கள் நிதானமாக இருங்க வண்டி வாகனத்தில போகும் போது கவனமாக இருங்க. எலும்பு தொடர்பான நோய்கள் வரும். எருக்கம் இலையை தலையில் வைத்து குளித்து சூரியனை வழிபடுங்க.

பெண்களுக்கு யோகம்

பெண்களுக்கு யோகம்

ஏழரை சனியின் பிடியில் அதுவும் ஜென்ம சனியில் பிடியில் சிக்கியிருக்கும் தனுசு ராசிக்காரர்களே. இந்த டிசம்பர் மாதம் உங்க ராசியில முக்கிய கிரகங்கள் ஒன்று சேருகின்றன. உங்க ராசியில் சனி, கேது, குரு, சுக்கிரன் என நான்கு கிரகங்கள் இருக்கின்றனர். விரைய ஸ்தானத்தில் உள்ள சூரியன் 17ஆம் தேதிக்கு மேல் உங்க ராசிக்கு மாறுகிறார். புதன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வந்து பின்னர் உங்க ராசிக்கு வருகிறார். திடீர் இடமாற்றங்கள் வரலாம். 15ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு போகிறார். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீங்க. பெண்களுக்கு நல்ல தன லாபம் வந்து சேரும்.

கவனம் தேவை

கவனம் தேவை

செவ்வாய் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் இந்த மாதம் 25ஆம் தேதி வரை சஞ்சரிக்கின்றனர். மாத இறுதியில் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வருகிறார். மாணவர்களுக்கு புதன் சஞ்சாரம் நல்ல முன்னேற்றத்தை தருவார். மாத இறுதியில் ஆறு கிரகங்கள் உங்க ராசியில இணைகின்றனர். பெரிய பிரச்சினை எதுவும் வராது ஆனால் குழப்பங்கள் வரலாம். கிரகங்கள் கூட்டணியால் தெளிவில்லாத மனநிலையில் இருப்பீங்க. இல்லத்தரசிகள் வெளியாட்களை ரொம்ப நம்பாதீங்க. ஆன்மீகவாதிகள் கவனமாக இருங்க.

பயணம் வேண்டாம்

பயணம் வேண்டாம்

உங்க ராசியில் இணையும் ஆறு கிரகங்களும் சரியாக உங்க களத்திர ஸ்தானத்தை பார்க்கின்றன. எந்த முடிவுகளையும் நிதானமாக இருங்க. 12க்கு உடையவன் 12ல் அமர்ந்து சில தடைகளை தருவார். மொத்தத்தில இந்த மாதம் டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை அமைதியாக இருப்பது ரொம்ப நல்லது. சாதாரணமாக பேசுறது கூட உங்களுக்கு சங்கடத்தை தரும். லீவு நாள்ல சுற்றுலா போறேன்னு கிளம்பிடாதீங்க. அமைதியா வீட்ல தூங்கி ரெஸ்ட் எடுக்கிறது நல்லது. ஜனவரி மாதத்தில் இந்த கூட்டணி பிரிந்த பின்னர்தான் நிம்மதி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+