தீபாவளி பட்டாசு முன்னோர்களை மகிழ்விக்கும் - யம தீபம் ஏற்றி மத்தாப்பு கொளுத்துவோம்
தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை அணிந்து பட்டாடு வெடிப்பார்கள், மத்தாப்பு கொளுத்துவார்கள். பட்டாசு வெடிக்க பல தடைகள் இருந்தாலும் இரண்டு மணிநேரமே பட்டாசு வெடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத
சென்னை: தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. டமால் டுமீல் என மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது. பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்கள் என்பது நம்பிக்கை.
நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள். மது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.
அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர்.
இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

முன்னோர்களுக்கு வெளிச்சம்
தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும். மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள். அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால், முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவாராம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

பித்ருக்கள் வழிபாடு
தீபாவளித் திருநாளன்று, நாம் செய்யும் பூஜையையும், படையலையும் பித்ருக்கள் சந்தோஷத்துடன் பெற்றுக் கொண்டு, நம்மை ஆசீர்வதித்து, பின்னர் அவர்களது உலகுக்குத் திரும்புகின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் தீபாவளித் திருநாளில் பித்ருக்களை அவசியம் வழிபட வேண்டும். இதனால் மறைந்த நம் முன்னோர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

முன்னோர்கள் வழிபாடு
மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள் ஐப்பசி அமாவாசை வரை பூலோகத்திலிருந்து நாம் தரும் தர்ப்பணம் மற்றும் பூஜைகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதாகவும் ஐதீகம். எனவே ஐப்பசி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கினால் அவர்களின் ஆசி நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

நரக சதுர்த்தசி
தீபாவளிக்கு ஏன் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று "ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. "துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ: உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்" என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா" எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது. இதில் வரும் 'பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும். அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி நாளில் மத்தாப்பு கொளுத்த வேண்டும்.

சொர்க்கம் செல்லும் வழி
'தர்சம்' என்ற வார்த்தை "அமாவாசை'யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை. இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம்.
காரணம் என்ன? "பித்ரூணாம்" என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது. பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் சொர்க்கம் நோக்கி முன்னேறிச் செல்வார்கள்.

லட்சுமி பூஜை
உல்கா என்பது நெருப்புடன் கூடிய கட்டை தற்காலத்தில் அது மத்தாப்பு மேலும் மூன்று நாட்களும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை, 'நீராஜிதோமஹாலக்ஷ்மீ மர்ச்சயன்ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதிஸ்ம்ருதா' என்ற வரிகள் தெளிவாக்குகின்றன. இந்த வருடத்தில் இருந்து, பட்டாசு விட விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக ப்ரதோஷ காலத்தில் யம தீபம் ஏற்றி "உல்காதானம்" செய்வோம்.

எம தீபம் ஏற்றுவோம்
தீபாவளிக்கு முதல் நாளில் திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி மாலை 5.41 மணி முதல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்றலாம். எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும். அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கியும் எம தீபம் ஏற்றலாம்.

முன்னோர்களின் ஆசி பெறுவோம்
தீபாவளி திருநாளான சதுர்த்தசி நாளிலும் பித்ரு வழிபாடு செய்யலாம். புதுத்துணிகளை படைத்து, இனிப்புகள், உணவுகளை படையலிட்டு முன்னோர்களை வணங்கினால் அவர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இன்றைக்கும் பல வீடுகளில் கன்னி தெய்வ வழிபாடாக முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ரிப்பன், கண்ணாடி, காதோலை கருகமணி படைத்து வழிபட்ட பின்னரே புத்தாடைகளை அணிந்து தீபாவளி கொண்டாடுகின்றனர். நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த நாளாகவும், மகாபலி மன்னர் முடிசூட்டிக்கொண்ட நாளாகவும் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் நம் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களின் ஆசியை பெறுவோம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications