Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி போடப்போகும் பிள்ளையார் சுழி.. சிம்மாசனத்தில் அமர்ந்து.. சிங்க நடை போடப்போகும் மிதுன ராசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 தீபாவளி அன்று மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்.. அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்று இங்கே பார்க்கலாம். தீபாவளி முன்னும், தீபாவளி அன்றும் , அதன்பின்பும் என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

பொருளாதாரம்: பொருளாதார ரீதியாக இந்த தீபாவளி உங்களுக்கு நல்ல தீபாவளியாக இருக்கும். உங்களுக்கு பணம் அதிக அளவில் கிடைக்கும். நீங்கள் யாருக்கு கடன் கொடுத்தீர்களா.. அவர்கள் உங்களிடம் பணத்தை திரும்ப கொடுப்பார்கள். அதேபோல் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நிலவி வந்த கடன்கள் குறையும். சிலருக்கு கிரெடிட் கார்டு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் நிலவி வந்தன. அது போன்ற கடன்கள் இனி இருக்காது. இந்த தீபாவளி அன்று நடக்க போகும் சம்பவங்கள் சில உங்களுக்கு பெரிய பொருளாதார மாற்றத்தை கொடுக்கும் .

diwali deepavali guru peyarchi palan 2024 guru peyarchi krodhi tamil new year astrology

கல்வி; கல்வி ரீதியாக நீங்கள் கொஞ்சம் சோம்பலாக இருக்கும் காலம் இது. கல்வியில் கொஞ்சம் பின்தங்குவீர்கள். படிப்பில் சுணக்கம் ஏற்படும். கல்லூரி மாணவர்கள் அரியர் வைக்கும் நிலை ஏற்படும். சிலருக்கு படிப்பை நிறுத்தும் கஷ்டம் கூட ஏற்படலாம். ஆனால் இந்த தீபாவளி முடிந்து அடுத்த சில மாதங்கள் மட்டுமே இந்த கண்டம் கல்வியில் இருக்கும். சரியாக பணிகளை செய்தால் அந்த கஷ்டம் சரியாகும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். கண்டத்தை தாண்டி விடலாம்.

குடும்ப வாழ்க்கை: உங்களுக்கு திருமணம் கைகூடும். இந்த தீபாவளிக்கு உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக.. தீபாவளி அன்று காதல் விஷயத்தை ஓபன் செய்தால்.. அந்த விஷயம் உங்களுக்கு கைகூடும் வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் அண்ணன் - தம்பி உறவில் மோதல் ஏற்படலாம். முக்கியமாக பங்காளிகள் உறவில் சண்டைகள் ஏற்படலாம். இதனால் கவனமாக இருக்கவும். வார்த்தைகளை சரியாக பயன்படுத்தவும்.

ஆரோக்கியம்: உங்களின் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். எண்ணெய் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம். சுகர் அதிகம் சாப்பிட வேண்டாம். சிலருக்கு கிட்னி ரீதியான பிரச்சனைகள் வரும். மற்றபடி பெரிதாக பிரச்சனை இருக்காது. சிலருக்கு அம்மை பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் கூட உள்ளன. சூடு குறைவான பொருட்களை சாப்பிடவும் . ஜூஸ் அதிகம் குடிக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவும் விளக்குகள், ரங்கோலி மற்றும் பூக்களால் உங்கள் வீட்டை அலங்கரிக்கவும். கடவுள் வழிபாட்டில் நேரத்தை செலவிடுங்கள் மற்றும் செல்வம் மற்றும் செழிப்புக்காக உள்ள மந்திரங்களை கூறலாம். குபேர மந்திரம் அல்லது லக்ஷ்மி காயத்ரி மந்திரம் போன்றவை நிதி வளத்திற்காக பயன்படும். இதை அடிக்கடி கூறவும்.

வேலை: வேலை ரீதியாக முன்னேற்றம் ஏற்படும் காலம் இது. தீபாவளி போடப்போகும் பிள்ளையார் சுழி உங்கள் வாழ்க்கையை முன்னேற்றம். நீங்கள் சிம்மாசனத்தில் அமர்ந்து.. சிங்க நடை போடப்போகும் காலம் வந்துவிட்டது. செழிப்புக்காக லட்சுமி தேவியையும், ஞானத்திற்காக விநாயகப் பெருமானையும் பிரார்த்தனை செய்யுங்கள். செல்வம் மற்றும் செழிப்புக்கான தெய்வங்களான குபேரன் அல்லது லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பு பூஜை (சடங்கு) செய்யவும் உங்கள் வாழ்க்கை சரியான பாதையில் முன்னேற்றம் அடையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+