தீபாவளி ராசி பலன்: திடீர் அதிர்ஷ்டம் தீபாவளி நாளில் மகாலட்சுமியின் அருள் பெறும் ராசிக்காரர்கள்
சென்னை: தீபாவளி திருநாளில் அன்னை மகாலட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி குபேர செய்வார்கள். மகாலட்சுமியின் அருள் நிறைந்த தீபாவளி திருநாளில் நவகிரகங்களின் சஞ்சாரத்தினால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
தீபாவளி: நவ கிரகங்களும் தீபாவளி திருநாளில் சூரியன், செவ்வாய், சந்திரன் துலாம் ராசியில் பயணம் செய்ய புதன் விருச்சிகத்தில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் குரு, கும்பம் ராசியில் சனி, மீன ராசியில் ராகு, கன்னி ராசியில் கேது, சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு மகாலட்சுமியின் அருளை வாரி வழங்கப்போகிறது.

துலாம்: காதல் நாயகன் சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே இந்த புத்தாண்டில் குருபகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு நல்ல சுபபலன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். குரு பகவான் பார்வையால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்... லட்சுமி கடாட்சத்தால் பணம் நிறைய தேடி வரும். குரு அருளோடு குபேரன் அருளும் உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. பதவி உயர்வு தேடி வரப்போகிறது. குடும்பத்தோடு குபேரன் அருளை பெறப்போகின்றனர்.
விருச்சிகம்: குரு உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் அமர்ந்து அங்கிருந்து 2,10,12 ம் இடங்களை பார்த்து இந்த இடங்களுக்கு நன்மை செய்கிறார். ராகு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் கேது லாப ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் செய்யும் தொழில் சிறக்கும். தொழிலில் ராகுவால் லாபங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவீர்கள். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்போகிறது.
தனுசு: குரு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் பொருளாதார நிலையும் தேடி வரப்போகிறது. எதையும் எளிதில் ஜெயிப்பீர்கள். தீபாவளி திருநாளில் மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி மனதார வணங்குங்கள் செல்வ வளம் தேடி வரும். நெய்தீபம் எற்றி வணங்குங்கள்.
மகரம்: குருபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு சுகத்தை தரப்போகிறார். ராகுவின் அருளால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் லட்சுமி கடாட்சத்தால் பொன், பொருள் சேர்க்கையும் உண்டாகும். தொழில் இடமாற்றம் ஏற்படும். உயர் பதவியும்,சம்பளமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வரப்போகும் வருமானத்தை தக்க வைத்துக்கொள்வது நல்லது.
கும்பம்: ஜென்ம சனியாக இருந்தாலும் உங்களுக்கு ராகுவின் பயணத்தால் பண வருமானம் அதிகரிக்கும், குரு பகவான் தைரியத்தையும் வெற்றிகளையும் தரப்போகிறார். நினைத்த காரியம் நிறைவேறும். கிடைக்கப்போகும் பணத்தை பத்திரமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்.
மீனம்: குருபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்வது சிறப்பு. குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரையும், செய்யும் தொழிலில் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறார். ராகு ராசியில் அமர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறார். தீபாவளி திருநாளில் வெளிநாட்டு வருமானம் வீடு தேடி வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications