தீபாவளி, கந்த சஷ்டி ஐப்பசி மாதம் என்னென்ன முக்கிய பண்டிகைகள் இருக்கு தெரியுமா?

ஐப்பசி மாதம் முக்கிய பண்டிகை நாட்கள் உள்ளன. துலா ஸ்நானம், தீபாவளி பண்டிகை, கந்த சஷ்டி, பௌர்ணமி அன்னாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்கள் உள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐப்பசி மாதம் துலாம் மாதம். சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். துலாம் மாதத்தில் சூரியன் நீசமடைந்திருப்பார். அவரது வேகம் குறைந்திருக்கும். இந்த மாதத்தில் காவிரியில் துலா ஸ்நானம் செய்யலாம். 30 நாட்களில் ஏதாவது ஒரு நாளாவது காவிரியில் புனித நீராடலாம். கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும். ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கந்தன் சூரனை சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி விழாவும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி அசுவினி நட்சத்திரத்தில் பௌர்ணமி நாளில் சிவபெருமான் ஆலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த ஐப்பசி மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குருபெயர்ச்சியால் பலரது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. எந்த நாளில் என்னென்ன விஷேசம் நடைபெறுகிறது என்று பார்க்கலாம்.

Deepavali Skanda sasti Aippasi month important days

ஐப்பசி மாத முக்கிய விசேஷ நாட்கள்:

ஐப்பசி 1 அக்டோபர் 18 ஆம் தேதி துலா ஸ்நானம் ஆரம்பம் ஸ்ரீரங்கம் காவிரியில் நீராட கங்கையில் நீராடிய புண்ணியம் கிடைக்கும்.

ஐப்பசி 8 அக்டோபர் 25ஆம் தேதி பிரதோஷம் இன்றைய தினம் பசுவையும் கன்றையும் வழிபட வீட்டின் குழந்தைகளும் பெண்களும் உடல் நலம் பெறுவர்.
யம தீபம் ஏற்றலாம். பிரதோஷம் நேரத்தில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டு தெற்கு நோக்கி தீபம் ஏற்றலாம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும்.

ஐப்பசி 9 அக்டோபர் 26 சனிக்கிழமை தனத்திரயோதசி இன்று தங்கம் வெள்ளி வாங்க உகந்த தினம். தன்வந்திரி ஜெயந்தி. தன்வந்திரி பகவானை வழிபட ஆரோக்கியம் அதிகரிக்கும்.

ஐப்பசி 10 அக்டோபர் 27 ஞாயிறு கிழமை தீபாவளி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் வீட்டில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விளக்கேற்றி லட்சுமி பூஜை செய்யலாம். கேதார கௌரி விரதம் கௌரி பூஜை, லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

ஐப்பசி 11 அக்டோபர் 28 திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படியும் ஐப்பசி 18 ஆம் தேதி நவம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை மறுநாள் விடியற்காலை திருக்கணிதப்பஞ்சாங்கப்படியும் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் குரு பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

ஐப்பசி 12 அக்டோபர் 29 செவ்வாய்கிழமை யம துவிதியை இன்று சகோதரி அழைப்பின் பேரில் சகோதரன் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டு பரிசுகள் கொடுக்க வேண்டும். இரு குடும்பத்தினரும் தீர்க்க ஆயுளுடன் இருப்பார்கள்.

ஐப்பசி 16 நவம்பர் 2 சனிக்கிழமை சூரசம்ஹாரம் இன்று முருகப்பெருமானை வழிபட தொழிலில் வெற்றி கிடைக்கும்.

ஐப்பசி 25 நவம்பர் 11 சந்திர ஜெயந்தி இன்று சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். 2 நெய்தீபங்கள் ஏற்றி வழிபடலாம்.

ஐப்பசி 26 நவம்பர் 12ஆம் தேதி பௌர்ணமி செவ்வாய்கிழமை அன்னாபிஷேகம். சிவன்கோவில்களில் இன்றைய தினம் அன்னாபிஷேகம் நடைபெறும்.

ஐப்பசி மாதம் திருமணம், சீமாந்தம், வாசல்கால் வைக்க, கிரக ஆரம்பம் மாங்கல்யம் செய்ய புது வண்டி வாங்க வித்யாரம்பம் செய்ய தொழில் தொடங்க நல்ல நாட்கள்:

கடன் வாங்க: ஐப்பசி 07, 13,15,17,24,25,29

கடன் தீர்க்க ஐப்பசி 2,5,14,19,23,25,30

கிரகப்பிரவேசம்: ஐப்பசி 7,13,15,17,25

புதுவாகனம் வாங்க ஐப்பசி 03,07,24

காதுகுத்த நல்ல நாட்கள்: ஐப்பசி 13,15,17,24,25,29,30

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+