ஹாட்ரிக் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்... அரசு அதிகாரியை அரசியல்வாதியாக்கிய யோகங்கள்
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக அமரப்போகிறார். அவரது ஜாதகத்தில் அரியாசனத்தில் அமர்வதற்கான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன.
சென்னை: டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக முடிசூடப்போகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அவருடைய ஜாதக அமைப்பு பலவித யோகங்களை கொண்டிருக்கிறது அதுவே அவரை மூன்றாவது முறையாக அரியணையில் அமரவைத்திருக்கிறது. சிலருடைய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும் நாடாளும் யோகமும் அரியணையில் அமரும் யோகமும் கிடைப்பதில்லை. நல்ல கல்வியாளர், சமூக சேவகர், அரசு அதிகாரி என பயணத்தை தொடங்கிய அர்விந்த் கெஜ்ரிவால் பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் பலராலும் அறியப்பட்டவர். அரசியல் கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்து வெற்றிகரமாக திறம்பட முதல்வராக ஐந்தாண்டு காலம் பதவி வகித்து மீண்டும் அரியணையை கைப்பற்றியுள்ளார். இது அவருக்கு ஹாட்ரிக் வெற்றி.
1968 ஆகஸ்ட் 16 ஆவணி 1ஆம் தேதி அன்றைக்கு ஜென்மாஷ்டமியை இந்தியா கொண்டாடிக்கொண்டிருந்த நாளில்தான் பிறந்திருக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால். ரிஷப ராசி ரிஷப லக்னம் கிருத்திகை நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் பிறந்திருக்கிறார் கெஜ்ரிவால். சிம்ம ராசியில் சூரியன், புதன், குரு, சுக்கிரன், மீனம் ராகு கன்னியில் கேது மேஷத்தில் சனி நீசம் என கிரக நிலைகள் சொல்கின்றன.
பிறக்கும் போதே ஏழரை சனி அதுவும் ஜென்ம சனி இருந்தாலும் கவலையில்லை படிப்பில் புலியாகவும் திறமைசாலியாகவும் வளர்ந்து அரசு அதிகாரியாக உயர்ந்து அரசியல்வாதியாக மாறி மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

கார்த்திகையின் குணம்
கார்த்திகை நட்சத்திரம் சூரியனின் நட்சத்திரம். நெருப்பு நட்சத்திரம். இந்த நட்சத்திர அதிபதி சூரியன் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்று ஜம்மென்று குரு, சுக்கிரன் உடன் இணைந்திருக்கிறார். இது அற்புதமான அமைப்பு. சபதத்தை வெற்றிகரமாக முடித்து காட்டுபவர்கள். தலைமைப்பண்பு எதையும் வெற்றிகரமாக முடித்துக்காட்டும் திறமையும் கொண்டவர்.

ராஜயோக கிரக அமைப்பு
கெஜ்ரிவால் ஜாதகத்தில் சந்திரன் ரிஷபத்தில் உச்சம், சூரியன் சிம்மத்தில் ஆட்சி கூடவே குரு, புதன், சுக்கிரன் சஞ்சரிப்பது சிறப்பு. மீனம் ராகு கன்னி கேது என சர்ப்ப யோகத்தில் ஜாதகம் அமைத்துள்ளது. செவ்வாய் நீசம் பெற்றிருந்தாலும் நீசனுக்கு வீடு கொடுத்த சந்திரன் உச்சம் பெற்றிருப்பதும் சனி நீசம் பெற்றிருந்தாலும் சனிக்கு நான்காம் வீட்டில் செவ்வாய் நீச பங்கமாகியிருப்பதும் ஒருவித ராஜயோக அமைப்பை கொடுத்துள்ளது.

முதல்வர் ஆக்கிய யோகங்கள்
நான்காம் வீட்டில் கிரகங்கள் ஆட்சி பெற்ற சூரியனுடன் இணைந்திருப்பது அற்புத அமைப்பு. அவரது உயர்கல்வி யோகத்தை அதிகரித்தது. அரசு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுத்தது. இளம் வயதிலேயே அரசு வேலை கிடைக்க உதவியது. முதல்வர் நாற்காலியிலும் அமரவைத்தது. மக்கள் செல்வாக்கு கிடைக்க வைத்தது.

சர்ப்ப யோகம்
கெஜ்ரிவால் ஜாதகத்தில் கால சர்ப்பயோகம் உள்ளது. சர்ப்ப தோஷமாக இருப்பது 30 வயதிற்கு மேல் இது மிகப்பெரிய யோகத்தை கொடுக்கக் கூடியது. அதேபோல கெஜ்ரிவால் ஜாதகத்தில் கஜகேசரி யோகமும், புத ஆதிபத்ய யோகமும் அமைந்துள்ளது. இதுவே சிறந்த கல்வியையும், திடீர் பதவி வசதி வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது.

போராளி
தைரியம் தன்னம்பிக்கை அதிகம் காரணம் மூன்றாம் வீட்டில் செவ்வாய் நீச பங்கம் பெற்றிருக்கிறார். மிகவும் உறுதியானவர், எடுத்த காரியத்தில் வெற்றி என்ற இலக்கை அடையக்கூடிய யோகத்தை கொண்டவர் கெஜ்ரிவால். மிகச்சிறந்த போராளியாக வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது வாட்டி வதைக்கும். காரணம் கேதுவும் அதை ராகு பார்வையிடுவதும்தான்.

சூரியன், சுக்கிரன், குரு, புதன்
பத்தாம் வீடு தொழில் ஸ்தானம். சனி பத்தாம் வீட்டு அதிபதி நீசம் பெற்றிருந்தாலும் 12ஆம் வீட்டில் மறைந்திருக்கிறார். இதுவே ஒருவித யோகம்தான். கூடவே பத்தாம் வீட்டின் மீது சூரியன், புதன், குரு, சுக்கிரன் பார்வை விழுவதால் அவருக்கு அரசு அதிகாரியாகும் யோகத்தை கொடுத்து கூடவே அரசியல்வாதியாகும் யோகத்தையும் கொடுத்துள்ளது. ஹாட்ரிக் முதல்வராக பொறுப்பேற்றுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் தனது லட்சிய பயணத்தை நேர்மையாக தொடங்கி வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு அவருக்கு சுய ஜாதகத்தில் உள்ள கிரகங்களும் ஒத்துழைக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications