திருமண வாழ்க்கையில் பிரச்சினை, விவாகரத்து - காரணகர்த்தா யார் தெரியுமா? #Astrology

ஒருவரின் திருமண வாழ்க்கையில் குழப்பங்கள், சிக்கல்கள், மனமுறிவு, வழக்கு, விவாகரத்து போன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணமாக அமைகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டை விட்டு எதிர்த்துக்கொண்டு காதல் திருமணம் செய்தவர்கள் திடீரென பிரிந்து விடுகின்றனர். பத்து பொருத்தம் பார்த்து திருமணம் முடித்தவர்களும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விடுகின்றனர். இதெற்கெல்லாம் ஈகோ என்று கூறினாலும் எல்லாத்திற்கும் காரணம் குருபகவான் நிற்கும் இடம்தான் என்கிறது ஜோதிட விதி.

ஜாதகக் கட்டத்தில் 12 வீடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை. 2, 7, 8 ஆகிய இடங்களும் சுக்கிரன், செவ்வாய், சந்திரன், புதன் போன்ற கிரக அமைப்புச் சேர்க்கையும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம். மதம், ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. மணமுடித்த கையோடு பலரும் கோர்ட் படியேறுகின்றனர்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பலருக்கு நரகமாகவே அமைந்து விடுகிறது. மண வாழ்க்கையில் குழப்பங்கள், சிக்கல்கள், மனமுறிவு, வழக்கு, விவாகரத்து போன்ற துயரங்கள் ஏற்படுவதற்கு சில கிரக அமைப்புகளே மூலகாரணம். இந்த விஷயத்தில் குரு இருக்கும் இடம், சனி பார்க்கும் இடம் தன, குடும்பஸ்தானம் எனும் இரண்டாம் இடம், களத்திரஸ்தானம் எனும் ஏழாம் இடம் ஆயுள், மாங்கல்யஸ்தானம் எனும் எட்டாம் இடம் முக்கியம்.

மணவாழ்க்கை நரகம்

மணவாழ்க்கை நரகம்

ஏழாம் அதிபதியுடன் சூரியன் இணைந்திருந்தாலோ சூரியன் ஏழாம் வீட்டை பாத்தாலும்.சிறப்பான மனைவி அமையமட்டார்கள். ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன் பலமற்று இருந்தால் திருணம் நடைபெறது. ஏழாம் வீட்டில் சூரியன்,சந்திரன்,செவ்வாய் மூவரும் இருந்தால் திருமணவாழ்வு நரக வாழ்கையாகி விடும்.

விவாகரத்துக்கு காரணம்

விவாகரத்துக்கு காரணம்

மனைவியைக் கறுப்பி என்று அழைத்தால் அது அவரை கொடுமைப்படுத்துவதாகும், அதுவே விவகாரத்திற்கான காரணமாக அமையும் என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனைவியை கறுப்பி என்றழைப்பது அவரை அவமரியாதையாக நடத்துவதாகும். அது அவரைக் கொடுமைப்படுத்துவதாகும் என நீதிபதி கூறியுள்ளார். தும்மினால், குறட்டை விட்டாலும் கூட விவாகரத்து பெறும் காலமாகி விட்டது.

குடும்ப ஸ்தானம் எப்படி?

குடும்ப ஸ்தானம் எப்படி?

குரு நின்ற இடம் பாழ், சனி நின்ற இடம் விருத்தி, குரு பார்த்த இடம் விருத்தி, சனி பார்த்த இடம் பாழ் என்பது ஜோதிட சாஸ்திர விதி. சனி 5ம் வீட்டில் இருந்தபடி களத்திர ஸ்தானமான 7ம் வீட்டையும், தன, குடும்ப, வாக்குஸ்தானமான 2ம் வீட்டையும் பார்ப்பதால் திருமண உறவில் சிக்கல், வெறுப்பு, கசப்பு, நெறி தவறிய வாழ்க்கை, விவாகரத்து ஏற்படுகிறது.

திருமண வாழ்க்கை சிக்கல்

திருமண வாழ்க்கை சிக்கல்

ஒருவரின் ஜாதகத்தில் எந்த லக்னமாக இருந்தாலும் குரு 2, 7, 8, 12 ஆகிய இடங்களில் தனித்து இருப்பது. இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது, ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது மணவாழ்க்கைக்கு சிக்கலாக அமைகிறது. ஏழாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்து, லக்னாதிபதி, சுக்கிரன் நீசம் அல்லது மறைந்து இருப்பதால் மணவாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

திருமணம் செய்யக்கூடாது

திருமணம் செய்யக்கூடாது

ஆண், பெண் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடம் மிக முக்கியமான இடமாகும். இந்த இடம் ஆயுள், மாங்கல்யம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களை பற்றி அறிந்துகொள்ளும் இடம். இந்த எட்டாம் இடத்தின் அதிபதி எந்த நட்சத்திரத்தில் இருக்கிறாரோ, அந்த நட்சத்திர அதிபதி எந்தக் கிரகமோ அந்த கிரகத்தினுடைய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்யாமல் தவிர்த்து விடலாம்.

பரிகாரம் என்ன?

பரிகாரம் என்ன?

சந்திரன் ஏழில் இருப்பது. களத்திரகாரகன் சுக்கிரன், ஆன்மகாரகன் சூரியன், மனோகாரகன் சந்திரன் ஆகிய மூவரும் 2, 7, 8 ஆகிய இடங்களில் சம்பந்தம் பெற்றிருப்பது. பெண் ஜாதகத்தில் செவ்வாய், கேதுவும், ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவும் சேர்ந்து இருந்தால் மனக்கசப்பு, இருதார யோகம் அமைகிறது.திருச்செங்கோடு நகரில் அமைந்துள்ள அர்த்ததாரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட இருதார தோஷம் நீங்கும். திருமலையில் ஸ்ரீநிவாசப் பெருமாளை ஆண்டுக்கு ஒருமுறை தரிசிப்பதும் நல்ல பலனைத்தரும். ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகத் திருவுருவப் படத்தை வைத்து வழிபடுவதும் இரு தார தோஷ நிவர்த்தியாகும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+