Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துர்முகி : துலாம் முதல் மீனம் வரை ராசி பலன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துர்முகி தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. மேஷம் முதல் கன்னி வரை ராசிக்காரர்கள் பலன்களை அறிந்து கொண்டிருப்பீர்கள். துலாம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கு துர்முகி தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.

துலாம்:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.

எதிலும் நியாயம், நேர்மை, நீதி, வாக்கு தவறாமை, எல்லா செயல்களிலும் சீராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அன்பர்களே! நீங்கள் உங்கள் பேச்சால் சாதுரியம் செய்வீர்கள். சில சமயங்களில் யோசிக்காமல் பிறர் கூறும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் அவசரத்தால் அபசகுணமாக பேசி விடுவீர்கள். நீதி தேவதையின் கையில் துலாபாரமாக இருந்தாலும் பொருள் வைக்கும் பக்கமே சாய்வீர்கள். சிலரை சீண்டி பேசி வேடிக்கை பார்ப்பீர்கள்.

Durmuki newyear Rasi palan Thulam to meenam

சிறிது நேரத்திற்குள்ளேயே குண பேதங்களை மாற்றிக் கொள்பவர்களே சில சமயம் துலாபாரத்தின் முள் போல் சரியான நியாயத்தை பேசுவீர்கள், பிறரை போற்றி பேசி தன் காரியங்களை சாத்திதுக் கொள்பவர்களே மேலான சுறுசுறுப்பும் தெளிவும் கொண்டவர்களே, ஆடம்பர வாழ்க்கையும் கௌரவத்தையும் கௌரவத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள் பிறர் சொல்லில் பொருள் ஆய்ந்து அதற்கு தக்கபடி பதில் அளிப்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

அவசர வார்த்தைகளாலேயே வர இருக்கும் நன்மை நண்பர்களின் உதவி காரிய வெற்றி தன் அறியாமையால் நற்பலனை இழக்க நேரும் பிறர் கூறும் கருத்தை கவனமாய் கேட்பது போல் இருந்து பின் தான் நினைத்தபடி நடக்க வேண்டும் என்ற எண்னம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே,

உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்று ஆறுக்குடைய குரு பகவான் தன்னம்பிக்கையை கூடுதலாக வளர்க்கும் ஆனால் உங்களுக்கு யோக திசை நடக்குமானால் நன்மையான பலன்களும் அவயோக திசையினால் தீமையான பலன்களும் நடக்கும் எது செய்யத் தகுதியுடையதோ அதை வெகு ஜாக்கிரதையுடனும் பலத்துடனும் விருப்பத்துடனும் செய்ய வேண்டும்.

நாம் நம்முடைய கடமை மீது கொள்ளும் விருப்பத்தை நிறுத்தப் பார்க்கவோ தெய்வ வலிமையில் அதற்குரிய முக்கியத்தை தீர்கானக்கவோ நம்மிடம் எவ்வித அளவுகோலும் இல்லை நம்முடைய கால நேரம் நமக்கு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் அனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வு நமக்குல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் இது பெரிய பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட வழிவகை செய்யும்.

முன்பின் யோசிக்காமல் சில விஷயங்களில் அவசரப்பட்டு மாட்டிக் கொண்டதால் சில சங்கடமான அனுபவம் கிடைக்க கிடைக்க சுதாரிப்பீர்கள் எந்த ஒரு காரியத்திலும் நிதானம் தேவையென்பதை உணர்வீர்கள் பக்குவப்பட்ட பிறகு பலன் கிடைப்பது உறுதியாகும். இவ்வாண்டு உங்களின் செயல் காரியங்களை நிறைவேற்ற பாடுபடும் நடந்தவை யாவும் நன்மைக்குத்தான் என்ற பட்டறிவு உங்களைப் பதப்படுத்தியதால் யோகங்கள் அதிகரிக்கும் சோகங்கள் மறையும்.

பிள்ளைகளின் திருமணத்தை பிரமாதமாக நடத்துவீர்கள் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவீர்கள் வீட்டு வலைகளை விரைந்து முடிப்பீர்கள் மனை வாங்கி மகிழ்வீர்கள் சில குடும்பத்தில் விவசாய நிலத்தை வீட்டு மனையாக்க வேண்டுமென்று பிள்லைகள் விரும்புவார்கள் சிற்சில மாற்றங்களுடன் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

சனிக்கிழமை தோறும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யவும்.

விருச்சிகம்:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.

சகல விஷயங்களிலும் ஆர்வம் காட்டி சுறுசுறுப்போடு சிக்கனமாய் இருக்கும் அன்பர்களே அனாவசிய செலவுகளை நீக்கி அவசிய அத்தியாவசிய செலவுகலை செய்யும் அன்பர்களே, சிலருக்கு ஏழரையிலும் ஏற்றம் எளிதில் வரும் மாற்றம் எங்கிருந்தாலும் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள், பிள்ளைகளின் படிப்பு திருமணம் நல்லவிதமாக அமையும்.

வேலையில் எதிர்பார்த்த வருமானம் தொழில் வளர்ச்சியும் காணும், அரசியல் செல்வாக்கு ஆதாயம் தரும் அடுத்தவெரென்ன நமக்கு வாய்ப்பு கொடுப்பது நாமே நமக்கு வாய்ப்பை உருவாக்கி கொள்வோமென முடிவு செய்து களத்தில் குதித்து அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

பலருக்கு வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும் சட்டச் சிகலை சந்தித்து வரும் நீங்கள் அதிலிருந்து விடுபட ஓரளவு நல்ல வழி கிட்டும்.

ஒப்பந்த வேலைகள் சூடு பிடிக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவிட்டலும் கணிசமான ஆதாயம் தரும். பழைய தொழிலில் மாற்றங்கள் கொண்டு வரவும் உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு குழிபறிப்பதை கண்டும் காணாமலும் இருப்பது போலிருந்து கையும் களவுமாக பிடிப்பீர்கள் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள் மனச்சோர்வின்றி செயல்பட முடிவெடுப்பீர்கள் ஒரே முயற்சியில் உச்சியை அடைய முடியாதென்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருப்பதால் படிப்படியான வளர்ச்சியைப் பெற பாடுபடுவீர்கள்.

துன்பம் வறுமை ஆகியவற்றை உழைப்பினால் விரட்டலாமென்பது நன்கு தெரிந்த காரணத்தால் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு வழியில் பயணிப்பீர்கள். வீழ்ச்சிகளில் பெரிய வீழ்ச்சி தன்னம்பிக்கையை இழந்துவிடுவது தான் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருபதால் திடமான சிந்தனை தெளிவான முயற்ச்சி உருப்படியான உழைப்பு உள்ளதால் இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

சனிக்கிழமை தோரும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்க்கேற்றி அர்ச்சித்து வழிபாடு செய்ய இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும்.

தனுசு:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.

வைராக்கியம் திட சிந்தனை பொன்மனம் நேர்மை நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே தங்கள் பேச்சால் பிரச்சினைகளை வரவழைத்து கொள்ளும் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்கை குறைந்தவர்கள் ஊருக்கு உபகாரத்தை செய்யும் நீங்கள் தன் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் ஆவீர்கள் கல்வி வாக்கு சாதுரியங்கள் கொண்ட நீங்கள் சமயத்தில் உண்மைக்கு புறம்பான வாக்கால் உங்கள் கௌரவத்தை கெடுத்துக்கொள்வீர்கள்.

ஏழரை சனியின் தடை இருந்து கொண்டு தான் இருக்கிறது அதோடு வேலையில் திடீர் பிரச்சினைகள் இடமாற்றம் குறைந்த சம்பளம் மேலிட தொந்தரவுகள், இருந்த வேலையும் கைவிட வேண்டிய கட்டாயம் திருமணம் அமையாமை என பல்வேறு குளறுபடிகள் கடன் ஒருபக்கம் மருத்துவ செலவுகள் ஒருபக்கம் என் செலவுகள் உண்டாகும்.

தொழிலில் கிடைக்கும் லாபங்கள் யாவும் முன்னர் பெற்ற அனுபவங்களினால் விளைந்த முத்துக்களாக இருக்கும் வெற்றியென்பது உடனே கிடைத்துவிடும் விஷயமல்ல பல தோல்விகளுக்கு பிறகே அதன் முகத்தைப் பார்க்க முடியும். இந்த ஆண்டு உங்களுக்கு நல்லதும் கெட்டதுமான விஷயங்கள் கலந்தேயிருக்கும் முழு அளவில் நல்ல பலன்களும் முழு அளவில் கெட்ட பலன்களும் இருந்திடாது எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிவரும் எதிரிகளை வீழ்த்தும் பொழுது காயங்கள் ஏற்படாமலிருக்குமா?

வீடு கட்டவும் வாங்கவும் திருமணம் முடிவு செய்யவும் குழந்தை பாக்கியம் பெறவும் ஜாமீன் போட்ட சங்கடத்திலிருந்து விடுபடவும் வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும் பங்காளி சொத்து பாகப் பிரிவினையும் வேலை வாய்ப்பு பிரச்சினைகளும் சில சில இடையூறுகளுடன் ஒரு நல்ல முடிவுக்கு வரும் யோகங்களை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு.

வாகனப் பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நெரிசல் மிகுந்த இடங்கஆளுக்கு செல்லக் கூடாது உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் வைத்தியச்செலவுகளைத் தவிர்க்க முடியாது கடன் இருந்து கொண்டுதான் இருக்கும் படிப்படியாகத்தான் விடுபட முடியும் உங்களின் ஆன்மீக பலமும் அயராத முயற்சியும் உழைப்பும் விட்டு விலகிடாத தன்னம்பிக்கையும் உங்களுக்கு நிச்சயம் வெற்றி படிக்கட்டுகளாக இவ்வாண்டு அமையும்.

சனிக்கிழமை தோறும் மாலைவேளையில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும்.

மகரம்:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மகரம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.

எதையும் யோசித்து பார்க்கும் திறன் பல வழிகளில் சாமர்த்தியம் காட்டி தன்னிடம் எதுவும் இல்லாதது போல் நடந்து கொள்ளும் குணம் பிறர் கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலும் தன் எண்ணப்படி காரியம் ஆற்றுபவர்களே பிறர் சொல்லுவதை அல்லது பிறர் தன்னுடைய கருத்தை கேட்டாலும் மற்றவருடைய அபிப்பிராயத்தை தான் கேட்டுக் கொள்வீர்கள் தன்னுடைய அபிப்பிராயத்தை கூற மாட்டீர்கள்.

எதை கேட்டாளும் ஆம், இல்லை என்று பதில் தர மாட்டீர்கள் அடுத்து என்ன என்று திரும்பி கேட்டும் தன்னை தன் மனதுக்குள்ளேயே சில பிரச்சினைகளை போட்டு போராடி போராடி தானே தனக்கு தீர்வு காண்பீர்கள். உங்களின் ராசி அதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்திலிருப்பதால் வருமானம் அபரிமிதமாக இருக்கும் உழைப்புக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

துணிச்சல் வைராக்கியம் தன்னம்பிக்கை தீவிரமாகும், சோர்வை விரட்டுவீர்கள், எதையும் கிடைக்கும் வரை விடமாட்டேன் என்கிற வெறி உள்ளத்தில் நங்கூரமிட்டு நிலைத்திருக்கும் கண்டிப்பாக தொழில் வேலையில் புது அணுகுமுறையில் வெற்றி காண்பீர்கள்.

ராசிக்கு 8ல் ராகு 2ல் கேது இருப்பதால் இடமாற்றம் வெளி விவகாரம் பாகப்பிரிவினை வெளிநாட்டுப் பயணம் தூர தேச வேலை சற்று அலைச்சலுடன் கூடிய ஆதாயம் என பலன்களிருக்கும். மற்ற கிரகங்களின் கோச்சார அமைப்புப்படி இந்த ஆண்டு சாதனை ஆண்டாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் பிரச்சினைகள் குறையும் கடன் நிவர்த்தியாகும்.

தன்கையே தனக்குதவி யாரையும் எதிர்பார்த்து வாழ்தல் கூட்டாது முடிந்தவரை உழைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட நீங்கள் பெற்றோரையும் உறவினரையும் பிரிந்து வாழ வேண்டிய நிலை வரலாம், மகன் மகளுக்கு திருமணமாகியிருந்தால் பேரன் பேத்தி கொஞ்சும் பாக்கியம் கிடைக்கும் இல்லாவிட்டால் மகன் மகளுக்கு இந்த ஆண்டு திருமணம் ஆகிவிடும்.

நீங்கள் யாருக்கு உதவி செய்தாலும் அது வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது அதுவே உங்களுக்கென்று ஈடுபட்டால் தடையும் தடுமாற்றமும் தவிர்க்க முடியாமல் போய் எப்படியோ கடுமையாக முயற்சித்து கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும்.

புதன்கிழமை தோறும் ஸ்ரீகிருஷ்ணர் சந்நிதியில் தேங்காய் உடைத்து 2 பாகத்திலும் பசும்நெய் ஊற்றி தீபம் ஏற்றி பச்சரிசியில் வைத்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும்.

கும்பம்:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கும்பம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.

நவகோள்களில் தன் பணியை நீடி வழிவாது செய்யும் அனலோன் மகனான அந்தகனே கும்பராசியின் அதிபராவார். தெய்வீக குணமிக்க கோடியில் ஒருவர் கும்பத்தில் உதிக்கும் ஞானி ஆவார் என்னும் சொல்லுக்கு உரித்தான கும்பராசி அன்பர்களே,

தீர்க்கமான கண்கள் காரிய சாதனை தர்ம சிந்தனை சிரித்த முகமும் குழந்தை உள்ளம் நியாய தர்கங்களுக்கு பயந்து நடப்பவரும் பிறர் அன்புக்கு கட்டுப்படும் நீங்கள் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் இருப்பதும் தக்க மரியாதைக்கு உரியவர்களைத் தவிர பிறருக்கு தலை வணங்காமல் இருப்பதும் மனைவி மேல் அன்பு கொண்டவராய் இருப்பீர்கள்.

அதிகமான கல்வியும் அதிகமான அனுபவங்களை கொண்டவரும் விளம்பர ஆடம்பரத்தை விரும்பாதவர்களும் சகல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களும் பல கலைகளை பயில்பவரும் சாந்த குணமும் இறைஞான சித்தமும் தெய்வீக அனுக்கிரகமும் கொண்டவர்களும் இளகிய மனம் கொண்டவர்களாகவும் அமைதியும் அடக்கமாகவும் பால்மனம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

ஒரு சிலர் பிறரை சாடையாக இடித்து பேசி ஒவ்வொருவருடைய குணாதிசயங்களை அறிந்து அவர்கள் இடையில் கலகத்தை மூட்டிவிடும் குணமும் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

இந்த புத்தாண்டில் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தொழில் மிகவும் சிறப்பாக நடைபெறும். சனி பகவானின் கேந்திர பலம் உங்களை தொழிலில் உச்சத்திற்க்கு கொண்டு செல்லும், தொழிலில் சில கஷ்டங்கள் இருந்தாலும் கண்டிப்பாக நஷ்டம் கிடையாது.

சில சமயங்களில் அவசரப்படுதல் முன்கோபம் பிறர் மீது எரிந்து விழுதல் போன்ற ஆகாத குணங்களைத் தவிர்க்க வேண்டும். தற்சமயம் ஏழாமிடத்தில் இருக்கும் குருபகவான் எட்டாமிடத்திற்க்கு இந்த ஆண்டு மாறப்போகிறார் எனவே உடல் நலத்தில் கவனம் தேவை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ நெருங்கிய உறவினர்களுக்கோ வைத்திய செலவுகள் உண்டாகும்.

பிள்ளைகளுக்கு தக்க படிப்பு படித்து முடித்தவுடன் வேலை, திருமண யோகம் இந்த ஆண்டு அமையும். இவ்வாண்டு ஆரம்பத்தில் மந்தமாகவும் பின் படிப்படியாக வளர்ச்சியும் பெறக்கூடியவர்கள் நெருக்கமான உறவுகளின் ஒத்துழைப்பு கிட்டும்.

வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிரன் ஹோரையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும்.

மீனம்:

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மீனம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.

மிக மேலான குணம் கொண்டவர்களும் வாசனை திரவியங்கள் மீது விருப்பம் ஒரு சில சமயங்களில் மிக சுறுசுறுப்பாக காரியம் ஆற்றும் நீங்கள் ஒருசிலர் நிதானமாகவும் வேகமின்றி மந்தமாக காரியத்தை செய்ய நீங்கள் இரண்டு விதமான மனோபாவத்தை கொண்டவர்கள்.

நீங்கள் பல காரியங்களை நேர்த்தியோடு செய்ய நினைப்பீர்கள் மனத் தெளிவும் வாக்கு சாதுரியமும் உண்டு. தன் காரியத்தை சாதித்து கொள்ளும் வேளை மிக நளினமாக பேசி அவர்களை தன் வசம் ஆக்கி காரியங்களை சாதிக்கும் மீன ராசி அன்பர்களே.

உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும், இடம் விட்டு இடம் மாறி இருக்க நேரிடும்.

தனக்கோ தனக்கு நெருக்கமான உறவினருக்கோ வைத்திய செலவுகள் தவிர்க்க முடியாது. கூடுதல் அலைச்சலும் கூடாத நட்பும் குடும்பத்தில் சலசலப்பை உண்டாக்கும். வருமானம் அதிகமாகவும் உண்டாகும். ராசிக்கு லாப விரயாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்திலிருப்பதால் மிகவும் சிரமப்பட்டு பணத்தை சேமிக்க வேண்டியிருக்கும்.

ராகு ஆறிலும் கேது பன்னிரெண்டிலும் அமர்ந்து வாழ்க்கைக்கு புதுப்பாதை போட்டுக் கொடுக்கும். படிக்கும் வயதில் இருக்கும் ஆண்-பெண்கள் வருமானம் பெறக்கூடிய படிப்பை தேர்வுச் செய்து அதே சமயம் அதிக கோபத்தால் அவசர முடிவெடுத்து பாதிப்பைப் பெறுவார்கள் குடும்பத்தை விட்டு படிப்பு வேலையென்று பிரிந்து போகக் கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும் சிலருக்கு குடும்பச் சிக்கல்கள் உண்டாகும். சில தவிர்க்க முடியாத இடையூறுகள் வந்து சேரும் எப்படியிருப்பினும் உங்கள் அமைதி பொறுமை நிதானம் கைவிடாது உங்களை காக்கும். இயன்றவரை எல்லாவற்றையும் சரி செய்து வழி நடத்த தயாராவீர்கள் விட்டுக் கொடுத்தாலும் சகிப்புத் தன்மையும் உங்கள் மேம்பட்ட குணமாகவிருப்பதால் எப்படியும் சாதனை நிகழ்த்துவீர்கள்.

மன்மத வருடம் வரை மனதை குடைந்த சம்பவங்கள் துர்முகி ஆண்டில் துடைக்கப்பட வேண்டுமென்று நினைத்து விட்டீர்கள் என்ன ஆனாலும் சரி இந்த புத்தாண்டில் மாற்றம் வந்தே ஆக வேண்டுமென்று ஒரு முடிவு உங்களிடம் உள்ளது அதற்கான வேலைகளை படிப்படியாக செய்யத் தொடங்குவீர்கள் வெற்றி நிச்சயம்.

புதன்கிழமை தோறும் ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயாருக்கும் ஸ்ரீவேங்கடேசப்பெருமாளுக்கும் மலர்களால் அர்சித்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+