Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2020-23: ஏழரை சனி காலத்தில் சனிபகவான் சோதனை தருவது ஏன் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    13-09-2019 | இன்றைய ராசிபலன்-வீடியோ

    சென்னை: சனிபகவான் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சனிப்பெயர்ச்சியினால் அதிகம் நிம்மதி அடைவது விருச்சிகம், ரிஷபம் ராசிக்காரர்கள். காரணம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிகிறது. தைரிய ஸ்தான சனி ஆரம்பிக்கிறது. ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி ஆரம்பிக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும், மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் தொடர்வதால் இந்த மூன்று ராசிக்காரர்களும் சனிபகவானால் சோதனைகளைகளை சந்திக்கப் போகிறார்கள்.

    ஏழரை சனி மொத்தம் ஒரு ராசிக்காரர்களுக்கு ஏழரை ஆண்டுகாலம் நடக்கிறது. இதில் விரைய சனி இரண்டரை ஆண்டுகள், ஜென்ம சனி இரண்டரை ஆண்டுகள், பாத சனி இரண்டரை ஆண்டுகள் என மொத்தம் ஏழரை ஆண்டுகாலம் நடைபெறுகிறது. அப்போது தசாபுத்தியும் சரியில்லாத நிலையில் இருந்தால் சங்கடங்களை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும்.

    சனியின் பிடியில் இருந்து அந்த ஈசனே தப்பிக்க முடியாது என்று சொல்லும் வகையில் புராண கதையே உள்ளது. சனிபகவான் நீதிமான் என்பதால் தவறு செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை தருவார். நல்லவர்களை தண்டிக்க மாட்டார் சோதனை கொடுப்பதோடு படிப்பினைகளை தருவார். தவறு செய்தவர்களை கண்டிப்பாக சனிபகவான் தண்டிப்பார்.

    சோம்பேறித்தனம்

    சோம்பேறித்தனம்

    பிறக்கும் போதே சிலர் ஏழரை சனியின் பிடியில் இருப்பார்கள். அவர்களுக்கு நோய் தாக்கும். மாணவர்களாக இருந்தால் படித்தது மறந்து போகும். சிலர் தேர்வில் கூட தோல்வியடைவார்கள். சிலர் சோம்பேறிகளாக இருப்பார்கள். பள்ளி, கல்லூரி காலத்தில் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. காரணம் ஏழரை சனி கொடுத்த படிப்பினையால் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரெடுப்பார்கள்.

    சனியின் பார்வையால் பலன்

    சனியின் பார்வையால் பலன்

    சனி தரும் சங்கடங்கள் ஏழரை ஆண்டுகாலம் நடக்கும். அந்த ஏழரை ஆண்டுகால படிப்பினையை வைத்து 30 ஆண்டு காலம் சந்தோசமாக இருக்கலாம். சனிபகவான் ஏழரை தொடங்கும் காலத்தில் விரைய சனியாக ஆரம்பிக்கிறது. கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி விரைய சனியாக ஆரம்பிக்கிறது. இதுநாள் வரை லாப சனியாக இருந்த போது சம்பாதித்த பணத்தை சொத்துக்களாக நகைகளாக சுப விரையங்களாக மாற்றலாம்.

    கும்பத்திற்கு விரையம்

    கும்பத்திற்கு விரையம்

    மகரம் ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனிபகவான் தனது மூன்றாம் பார்வையால் மீனம் ராசியை பார்க்கிறார். இது கும்பம் ராசிக்கு இரண்டாம் வீடு. அதே போல கடகம் ராசியை பார்க்கிறார் இது ஆறாம் வீடு. துலாம் ராசியை சனி தனது பத்தாம் பார்வையாக பார்க்கிறார். இது கும்பம் ராசிக்கு ஒன்பதாம் வீடு.
    கும்ப ராசிக்காரர்களுக்கு தனம், ருணம், பாக்ய ஸ்தானங்களை சனிபகவான் பார்க்கிறார். இந்த கால கட்டத்தில் பணப்பிரச்சினைகள், குடும்பத்தில் சிக்கல்கள், கடன் தொல்லைகள் ஏற்படும். பண விரையத்தின் போதுதான் பணத்தின் அருமை தெரியும். சனிபகவான் கும்பம் ராசிக்கு அதிபதி என்பதால் அதிகம் சங்கடங்கள் தராமல் சில படிப்பினைகளை தருவார்.

    மகரத்திற்கு ஜென்மம்

    மகரத்திற்கு ஜென்மம்

    அதேபோல மகரம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் ஜென்மசனியாக அமர்கிறார். தூக்கம் தொலையும் கஷ்டங்கள் என்றால் என்னவென்று புரியவைப்பார். உடல்நிலை பாதிப்பு, தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, மன அழுத்தம் ஆகியவற்றை ஜென்மசனி காலத்தில் ஏற்படுத்துவார். மகரம் ராசிக்கு அதிபதி சனிபகவான் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தரமாட்டார். சனியின் பார்வை மகரம் ராசிக்கு தொழில் ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

    திருமண வாழ்க்கை

    திருமண வாழ்க்கை

    திருமண வாழ்க்கை துணை, காதலின் துணையைப் பற்றிய உண்மையை உணரவைப்பார். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு தொழில் முடக்கம் தொழில் நஷ்டம் ஏற்படும். எல்லாம் ஆணவத்தில் ஆடுபவர்களுக்குத்தான். அதே நேரத்தில் அமைதியாக கடந்து செல்பகவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது.

    பாத சனி யாருக்கு பாதிப்பு

    பாத சனி யாருக்கு பாதிப்பு

    சனிபகவான் பாத சனியாக தனுசு ராசியை பிடிக்கிறார். ஐந்தரை ஆண்டுகாலம் சனியின் பிடியில் சிக்கியிருந்தவர்கள் இனி இரண்டரை ஆண்டுகாலம் கடந்து விடுவார்கள். சனியின் பார்வை நான்காம் வீடு, எட்டாம் வீடு, பதினொன்றாம் வீடுகளை பார்க்கிறார். இதுநாள்வரை நஷ்டப்பட்டு, அவமானப்பட்டு இருந்தவர்களுக்கு நல்ல நிலையை தருவார். சங்கடங்களை துடைப்பார். ஏழரை ஆண்டுகால முடிவில் நல்ல படிப்பினைகளை தந்து விட்டு செல்வார். அந்த படிப்பினை போதும் ஏழரை சனி சோதனைகளை தருவதே நன்மைக்காகத்தான் என்று கடந்து செல்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+