Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்டோபர் மாத ராசி பலன்கள் 2019: தனுசு, மகரம் ராசிக்கு கஷ்டங்கள் தீரும் காலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதன் மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகின்றார். கூடவே சுக்கிரனும் விருச்சிகத்தில் உள்ள குரு உடன் இணைகிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் மாதத்தில் 18ஆம் தேதிக்கு மேல் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை சூரியன் இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். சூரியன் தவிர மிதுனம் ராசியில் ராகு, தனுசு ராசியில் கேது, சனி, விருச்சிகத்தில் குரு என ஆண்டு கோள்கள் இந்த மாதம் சஞ்சரிக்கின்றன.

மாத கோள்களின் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் அக்டோபர் மாத முற்பகுதியில் கன்னி ராசியில் இருந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் இணைகின்றன. துலாமில் இருந்து புதன் விருச்சிகத்திற்கு நகர சுக்கிரன் 28ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். புதன் சுக்கிரன் குருவோடு கூட்டணி சேர்ந்து ராசிகளை பார்வையிடுவதால் அதிக நன்மைகள் நடக்கும். அக்டோபர் மாதம் கவலைகள் தீரும் காலம் என்றாலும் தனுசு மகரம் ராசிக்காரர்கள் இந்த மாதம் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம்.

கிரகங்கள் சஞ்சாரம் நன்மை

கிரகங்கள் சஞ்சாரம் நன்மை

சூரியன் செவ்வாய் சுக்கிரன் பத்தாம் வீட்டில் இருக்கின்றனர். நான்கு முக்கிய கிரகங்கள் பாசிட்டிவ் ஆக இருக்கின்றன. தனுசு ராசிக்கு ஜென்ம ராசியில் சனி கேது. லாப ஸ்தானத்தில் புதன் சுக்கிரன் இணைகின்றனர். ராசி நாதன் குரு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். ஜென்ம சனி கேது தடை செய்கின்றனர். குரு உங்க ராசியை நெருங்கிறார். இந்த மாத இறுதியில் உங்க ராசிக்குள் வருகிறார். மாத இறுதியில் சுக்கிரன், புதன் துலாம் ராசியில் இருந்து உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு நகர்கிறார். நீண்ட நாள் போராட்டங்களுக்குப் பிறகு கோள்களின் சஞ்சாரத்தினால் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும்.

குருவினால் நன்மை

குருவினால் நன்மை

குரு 12ஆம் வீட்டில் இருந்தாலும் மாத இறுதியில் உங்க ராசிக்குள் இடப்பெயர்ச்சி ஆகப்போவதால் நன்மைகள் நடைபெறும் காலம் நெருங்கி வருகிறது.
இந்த மாதம் நல்ல திட்டங்கள் செயல்படுத்தத் தொடங்குவீர்கள். உடல்நல பிரச்சினைகள் தீரும். செவ்வாய் உங்க ராசிக்கு பத்தாம் வீடான கன்னி ராசியில் இருந்து நகர்ந்து உங்க ராசியை பார்க்கிறார். தனுசு ராசி நீண்ட நாள் கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் பற்றுக்கொள்ளுங்கள்.

கஷ்டங்கள் தீரும்

கஷ்டங்கள் தீரும்

நேர்மறையாக நினைத்தாலே போதும் நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். பத்தாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை இருக்கிறது. சனி இந்த கூட்டணியை பார்க்கிறார். பாதுகாப்பாக எச்சரிக்கையாக இருங்க. வேலைக்கு போறவங்க அலுவலகத்தில் ஜாக்கிரதையாக இருங்க. செவ்வாய் பகவான் கன்னி ராசியில் நீசம் பெற்ற சுக்கிரனுடன் இருப்பதால் சில கவலைகள் இருக்கும். பாதுகாப்பு முக்கியம். அக்டோபர் 5ஆம் தேதி சுக்கிரன் இடம்மாறி இரண்டாம் வீட்டில் அமர்கிறார்.

நல்லது நடக்கும்

நல்லது நடக்கும்

இந்த மாதம் பிற்பகுதியில் உங்க ராசிக்கு நல்லது நடக்கப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் அப்படி இருக்கிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி குருபகவான் உங்க ராசிக்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார். லாபத்தில் புதன் இருக்கிறார். சுக்கிரன் உங்க லாபத்திற்கு வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார். சூரியன் 18ஆம் தேதிக்கு மேல் லாப ஸ்தானத்திற்கு வருகிறார்.

கவலைகள் மறையும்

கவலைகள் மறையும்

உங்க ராசியில் உள்ள சனி கேதுவினால் வேலையில் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இனி சோதனைகள் முடியப்போகிற நேரம் வந்து விட்டது. நிவாரணம் கிடைக்கப் போகிறது. உங்களுக்கு தொழிலில் ஆதரவு கிடைக்கும். பொற்காலம் வரப்போகிறது. தொழிலில் லாபமும் வெற்றி மீது வெற்றி வந்து கிடைக்கப்போகிறது. தொழிலில் வீட்டில் கவலைகள் இருக்கும் மாத இறுதியில் நிவர்த்தி கிடைக்கும். புதன் சுக்கிரன் உங்க லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கும் காலத்தில் நன்மைகள் அதிகம் நடைபெறும். களத்திர ஸ்தானத்தில் இருந்து ராகு பார்ப்பதால் குடும்பத்தில் சில குறைகள் இருக்கும். மாத இறுதியில் குரு பெயர்ச்சிக்குப் பிறகு நன்மைகள் நடக்கும்.

உடம்பில் கவனம்

உடம்பில் கவனம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கிறது. ராசி நாதன் சனி கேது உடன் இருப்பதால் மனக்குழப்பமாக இருக்கும். குரு 11ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். சூரியன், செவ்வாய் ஒன்பதாம் வீட்டிலும், சுக்கிரன், புதன் பத்தாம் வீட்டிற்கு நகர்வது நன்மையான அம்சம். உடம்புல கவனம் வையுங்கள். துன்பங்களில் இருந்து விடுதலை பெறக்கூடிய மாதம் . மகர ராசிக்காரர்களுக்கு திடீர் பதவி கிடைக்கும். ஏழரை சனியின் பிடியில் இருக்கிறீர்கள். இந்த மாதம் பொற்காலமாக அமையப்போகிறது. சனிபகவான் உங்களை சோதனை செய்து வருகிறார்.

சனி கேது பாதிப்பு

சனி கேது பாதிப்பு

வருமானம் இருந்தாலும் வேலை வசதிகள் இருந்தாலும் மன உளைச்சலோடு இருப்பீங்க. தேவையான வசதி வீடு வண்டி வாகனம் இருந்தாலும் கடன் அதிகம் இருக்கும். காரணம் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சனி கேது சஞ்சாரம் செய்வது நிம்மதியை தடுக்கிறது. வேலையிழப்பு, துன்பங்கள் நிம்மதியிழப்பை தந்து கொண்டிருக்கிறார். குரு பகவான் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். பொற்காலமாக அமையப்போகிறது.

உடம்பில் பிரச்சினை

உடம்பில் பிரச்சினை

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திருமணம் கைகூடும், வேலை கிடைக்கும், காதல் விவகாரங்கள் கை கூடும் என்றாலும் எல்லாமே தடை தாமதங்களுடன் நடைபெறும். செழிப்போடு இருந்தாலும் கேதுவினால் உடம்பில் இடைஞ்சல் ஏற்படும். 12ஆம் வீட்டில் சனி இருப்பதால். கவனமாக இருக்கவும். சனியால் எற்படும் பாதிப்பை தடுக்க தியானம் பண்ணுங்க.

மனக்குழப்பங்கள் நீங்கும்

மனக்குழப்பங்கள் நீங்கும்

குருபகவான் 29ஆம் தேதியன்று பெயர்ச்சியடைகிறார். இதுநாள் வரை இடைஞ்சலை கொடுத்து கொண்டிருந்தார் சனிபகவான். இனி குருபகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று சனி கேது உடன் இணையப்போகிறார். மாத இறுதியில் வேலைக்கு செல்பவர்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீரப்போகிறது. தந்தையால் நன்மைகள் நடக்கும். சகோதரிகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த மனக்குழப்பங்கள் இருந்தது நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+