வாழ்க்கை தடம் மாற காரணமாகும் கிரகங்கள் - கள்ளக்காதலை ஜாதகம் பார்த்து தெரிஞ்சுக்கலாம்

செல்போனில் இரண்டு சிம் கார்டு போட்டு பேசும் காலம் இது. சில டூயல் சிம் கார்டு போனில் பல சிம்களை போட்டு மாற்றி மாற்றி போட்டு பேசுவார்கள். வாழ்க்கையில் தறி கெட்டு தடம் மாறி போக காரணம் கிரகங்களின் சேர்க்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போதே, பெண்ணின் ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கையை வைத்து குடும்பத்திற்கு சரிப்பட்டு வருமா என்று கேட்கின்றனர். பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கூடவே ராகு இருந்தால் அந்த பெண்ணையே வேண்டாம் என்று ஒதுக்கும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற நிலை யாருக்கு அமையும், செகண்ட் சேனல், கள்ளத் தொடர்பு யாருக்கு ஏற்படும் என்பதை ஜாதகத்தில் கிரகங்களின் நிலையை வைத்து அறிந்து கொள்ளலாம். பெண்ணின் கற்பை ஜாதகத்தில் பார்க்கும் ஜோதிடர்கள், ஆணின் கற்பு நிலை பற்றி கண்டு கொள்வதில்லை.

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பத்ய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். எனவேதான் தோஷம் உள்ள ஜாதகமாக பார்த்து சேர்த்தார்கள். அப்படி பார்க்காமல் சேர்ப்பதால்தான் நிர்மலா தேவி போலவோ, கல்யாண மன்னன் போலவோ கணவன், மனைவி அமைந்து வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகிறது.

பாவிகளுடன் இணைந்த சுக்கிரன்

பாவிகளுடன் இணைந்த சுக்கிரன்

லக்னம், ராசி, மூன்றாமிடமாகிய போகஸ்தானம், ஏழாமிடமாகிய களத்திரஸ்தானம், பன்னிரெண்டாம் இடமாகிய அயனசயன ஸ்தானம் ஆகிய ஒன்றில் சுக்கிரன் இருந்து பாவிகளாகிய சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுடன் இணைவதோ அல்லது பார்வை பெறுவதோ ஒருவரின் காம உணர்வை அதிகமாக்கி விடும்.

தடம் மாறும் உறவுகள்

தடம் மாறும் உறவுகள்

ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனோடு சனி இணைந்து இருந்தால் மாறுபட்ட நிலையில் உறவு முறை கொள்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணி இருந்தாலும் ஒரு கிரகத்தின் தசா புத்தி நடக்கும் போது இது போன்ற கள்ளத் தொடர்புகள் எற்படுகின்றன. கள்ளக்காதலின் வேகத்தில் கணவனை மனைவியோ, மனைவியை கணவனோ கொலை செய்யும் நிலை கூட சிலருக்கு ஏற்படுகிறது.

மரணத்திற்கு காரணம்

மரணத்திற்கு காரணம்

ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியை குறிக்கக் கூடிய லக்னத்திற்கு ஏழாம் இடத்து அதிபதியும், மனைவிக்கு காரகம் வகிக்கும் சுக்கிரனும் ஆயுள் ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்தில் இருந்தாலோ, இந்த வீட்டுக்கு அதிபதியான கிரகங்களுடன் தொடர்பு பெற்று இருந்தாலோ அந்த ஜாதகனின் ஆயுள் முடிவதற்கு மனைவியே காரணம் ஆவாள்.

பெண்ணின் ஜாதகம்

பெண்ணின் ஜாதகம்

பெண்ணின் ஜாதகத்தில் நான்காம் இடம் என்பது கற்பு நிலையை குறிக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.

கிரகங்களின் சேர்க்கை

கிரகங்களின் சேர்க்கை

ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், ராகுகேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், ஒழுக்க குறைபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உருவாகும். ஏழாம் வீட்டில் சூரியன் புதன் சேர்க்கை, ஏழாம் அதிபதி சுக்கிரன் ஆறாம் வீட்டில் சனி, குரு உடன் சேர்ந்து இருப்பது. 4 ஆம் வீட்டில் ராகு இருப்பது அந்தந்த தசா புத்தி காலத்தில் தடுமாற்றத்தை தரும்.

எல்லை மீறும் காமம்

எல்லை மீறும் காமம்

ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் அந்த தசாபுத்தி காலத்தில் தடுமாற்றம் ஏற்படும். ஒருவருக்கு சுக்கிரதிசை நடக்கும் போது காம உணர்ச்சி அதிகமா இருக்கும். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். அதே ராசியில் சுக்கிரன் இருந்தால், காமம் எல்லை மீறும். விருச்சிகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். எந்த எல்லைக்கும் போக தயங்கமாட்டார்கள். இப்படி கிரக சேர்க்கை அமைந்தவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளையும், செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+