Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2020 - இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடி கல்யாணத்தில் முடியும்

பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் தனுசு முதல் மீனம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தால் தனுசு முதல் மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் குரு, கேது, செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு. சூரியன் இரண்டாம் வீட்டில் சனி, புதனோடு இணைந்திருக்கிறார். சுக்கிரன் நான்காம் வீட்டில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஏழாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். ஜென்ம சனி விலகி இப்போது பாத சனியாக சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் நீங்கி வாழ்க்கையில் நல்ல நிலைகள் உருவாகும். இரண்டாம் வீட்டில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பிறர் மனதை காயப்படுத்துவது போல பேச வேண்டாம். 13ஆம் தேதிக்கு மேல் சூரியன் மூன்றாம் வீட்டிற்கு மாறுவது சிறப்பு. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களை விட்டுத்தள்ளுங்கள். பாசிட்டிவ் எண்ணங்களை அதிகமாக வளர்த்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு வண்டி வாகன யோகம், வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். நகைகளை வாங்குவீர்கள். படிப்பில் கவனம் செலுத்துங்கள். ராசியில் கேது சில தடைகளை ஏற்படுத்துவார். ராகு ஏழாம் வீட்டில் இருந்து வேகத்தை தருவார். நாகர்கள் மூலவர்களாக உள்ள கோவிலுக்கு சென்று வணங்குங்கள். கணவன் மனைவி உறவில் சில பிரச்சினைகள் பிரிவுகள் வரலாம். நரம்பு, எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் வரலாம். புதன்கிழமைகளில் நரசிம்மரை வணங்குங்கள் உயர்கல்வி யோகம் கூடி வருகிறது. அதிர்ஷ்டங்கள் அதிகரிக்க இஷ்ட தெய்வத்தை மறக்காமல் வழிபடுங்கள். குல தெய்வ வழிபாடு நிறைய முன்னேற்றங்களை தரும். இந்த மாத மகாசிவராத்திரி நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

மகரம்

மகரம்

மகரம் ராசியில் சூரியன், சனி இணைந்திருக்கிறார். கூடவே புதன் சஞ்சரிக்கிறார். 13ஆம் தேதி சூரியன் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். சுக்கிரன் மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உச்சமடைந்திருக்கிறார். ஆறாம் வீட்டில் ராகு 12ஆம் வீட்டில் கேது சுக்கிரன், செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த மாதம் உங்களுக்கு முதலீடுகள் அதிகமாகும். பொன் நகைகளை வாங்குவீர்கள். ஜென்ம சனி என்று கவலைப்பட வேண்டாம் சனி பகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். சனி சூரியனோடு இணைந்திருப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தை பாருங்க. வீணான வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். அரசு அதிகாரிகள், அரசை பகைத்துக்கொள்ள வேண்டாம். உயரதிகாரிகளைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். அரசியல்வாதிகள் கவனமாக இருங்க. நிதானத்தை கடைபிடிக்க. 13ஆம் தேதிக்கு மேல் நல்ல தன லாபம் வரும். நல்ல வேலை வாய்ப்பு வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு நல்ல காலகட்டம். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு யோகங்களை அள்ளித்தரும் கால கட்டம். செவ்வாய் பகவான் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்க வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாகவும் விழிப்புணர்வுடனும் இருங்க. உறக்கத்தை கெடுத்துக்காங்க விடிய விடிய செல்போன் பார்ப்பதை விடுங்க. வெளிநாடு யோகம் வரும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்க பேச்சு வார்த்தையில் உற்சாகம் பிறக்கும். நினைத்த இடத்திற்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ராசிக்கு 12ஆம் வீட்டில் சூரியன், புதன், சனி சஞ்சரிக்கின்றனர். இரண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார். நிறைய வருமானம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். நல்ல வருமானம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே அன்பு மழை பொழியும் நேரம் இது. மாணவர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாகும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பொன்னான கால கட்டம். லாபங்கள் அதிகமாக இருக்கும் காரணம் லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் மீது கவனமாக இருங்க. மாத இறுதியில் 21ஆம் தேதிக்கு மேல்படிப்பில் கவனம் குறைய வாய்ப்பிருப்பதால் கண்காணிப்பு அவசியம். நகைகள், வண்டி வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். 13ஆம் தேதிக்கு மேல் சூரியன் உங்க ராசிக்கு வருவதால் உங்களின் திறமை பலிச்சிடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் புரமோசன் கிடைக்கும். கண்களில் சில பிரச்சினைகள் வந்தாலும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்க நல்லதே நடக்கும். கண் திருஷ்டி அதிகமாக தாக்கும் கவனமாக இருங்க. எல்லாம் வல்ல முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடக்கும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் சூரியன், சனி, புதன் லாப வீட்டில் சஞ்சரிக்கின்றனர். சுக்கிரன் உங்க ராசியில் உச்சமடைந்துள்ளார். மாளவியா யோகம் கூடி வந்திருக்கிறது. வசதிகள் பெருகும். மூன்று மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி ராசியில் உச்சமடைந்திருக்கும் கால கட்டத்தில் மறைமுக தொடர்புகளை ஏற்படுத்தும் எச்சரிக்கையாக இருங்கள். சில தொல்லைகள் ஏற்படும். பயணங்களினால் உற்சாகமடைவீர்கள். வீடு வண்டி வாகனம் யோகம் வரும். செவ்வாய் உங்க ராசிக்கு நான்காம் வீட்டினை பார்க்கிறார். நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி கிடைக்கும். பெண்களுக்கு ஏற்றமான மாதம். பேச்சிலும் தகவல் தொடர்பிலும் கவனமாக இருங்க. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். தான தர்மங்கள், அன்னதானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும். வயதானவர்களுக்கு உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மாணவர்களுக்கு மிகச்சிறந்த மாதம். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பிசினஸ் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பத்தில் குரு பதவியில் இடமாற்றம் வேலையில் மாற்றம் கிடைக்கும். வெளிநாடு யோகம் சிலருக்கு ஊர் மாற்றமும் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். நிறைய சுபங்கள் நடக்கும். காதல் கைகூடி சிலருக்கு திருமணம் நடக்கும். குருவினால் ஹம்ச யோகமும் சுக்கிரனால் மாளவியா யோகமும் தேடி வரும். நிறைய விருந்து விழாக்கள் என போவீர்கள். சூரியனும், புதனும் 13ஆம் தேதிக்கு மேல் வெளிநாடு யோகத்தை தருகின்றனர். நிறைய பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாகும் மாதமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+