Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2020 - எந்த ராசிக்காரர்களுக்கு லாபம் யாருக்கு வருமானம் வரும் தெரியுமா

பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார்.மதுரை: சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மா

Subscribe to Oneindia Tamil

மதுரை: சூரியன் சஞ்சாரம் பிப்ரவரி மாதத்தில் தை மாதத்திலும் மாசி மாதத்திலும் உள்ளது. பிப்ரவரி மாதம் தை மாதம் 12 நாட்களும் மாசி மாதம் 17 நாட்களும் என மொத்தம் 29 நாட்களும் இணைந்துள்ளது. இது லீப் ஆண்டு. சூரியன் மகரத்திலும் கும்பத்திலும் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் மேஷம் முதல் கடகம் வரை நான்கு ராசிக்காரர்களும் வருமானம் எப்படி இருக்கும், புதிய வேலை கிடைக்குமா? வீட்டில் குடும்ப சூழ்நிலை எப்படி இருக்கும் என ராசி பலன்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரங்களைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு ராசியில் குரு கேது, மகரத்தில் சூரியன் சனி, கும்பம் ராசியில் சுக்கிரன் புதன், என மாத துவக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகப் பெயர்ச்சியை பார்த்தால் பிப்ரவரி 3ஆம் தேதி மீனம் ராசியில் சுக்கிரன் உச்சமடைகிறார். மாத இறுதியில் மேஷ ராசிக்கு நகர்கிறார் சுக்கிரன். 7ஆம் தேதி விருச்சிகத்தில் உள்ள செவ்வாய் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி கேது, குரு உடன் இணைகிறார். 13ஆம் தேதி சூரியன் மகரத்தில் இருந்து கும்பம் ராசிக்கு நகர்கிறார்.

மாற்றங்கள் நிறைந்த மாதம்

மாற்றங்கள் நிறைந்த மாதம்

பிப்ரவரி மாதம் சூரியன் 10,11ஆம் வீடுகளில் சஞ்சரிப்பார். சனி பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பார். ராகு மூன்றாம் வீட்டிலும் கேது, குரு ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் எட்டாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். பாக்ய ஸ்தானம் குரு மங்கல யோகம் பெறுவது சிறப்பம்சம். சுக்கிரன் 12ஆம் வீட்டில் உச்சமடைகிறார். சந்திரன் உங்க ராசியில் தனது பயணத்தை தொடங்கி மாத இறுதியில் உங்க ராசிக்கு வருகிறார். இந்த மாதம்
நிர்வாகத்திறமை அதிகரிக்கும். சுப செலவுகள் கூடும். நிறைய மாற்றங்கள் ஏற்படும். பத்தாம் வீட்டில் சூரியன் சனி, செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்கு நகர்கிறார். பிப்ரவரி 8ஆம் தேதி செவ்வாய் பெயர்ச்சியாக ஒன்பதாம், புதனுடன் சூரியன் 13ஆம் தேதி இணைந்து சஞ்சரிப்பது சிறப்பம்சம். லாபம் அதிகரிக்கும்.

லாபமான மாதம்

லாபமான மாதம்

சனி 10ஆம் வீட்டில் இருப்பதால் புதிய வேலை கிடைக்கும். தசாபுத்தியும் நன்றாக இருந்தால் ஜாதகத்திலும் கிரகங்கள் நன்றாக இருந்தால் நல்ல பலன்களே கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் குரு, கேது இணைந்திருப்பது நன்மை கோடீஸ்வர யோகம். புதிய தொழில் தொடங்கலாம். வெளிநாடு யோகம் கை கூடி வரும், உயர்கல்வி யோகம் தேடி வரும், திருமண தடைகள் நீங்கும். சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் தூர தேச பயணங்கள் நன்மையில் முடியும். சுப பயணங்கள் நன்மையில் முடியும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து புதனோடு இணையும் காலத்தில் பதவியில் புரமோசன் கிடைக்கும். செவ்வாயின் நகர்வும் லாபத்தை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நோய்கள் நிவர்த்தியாகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்களின் மனநிலை உற்சாகமாக இருக்கும். மன குழப்பத்தில் இருந்து விடுதலை கிடைத்து நிம்மதி ஏற்படும். பண வருமானம் அதிகமாகும் நகைகள் வாங்குவீர்கள், இடமாற்றம் மன நிம்மதியை தரும். கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இருக்கிறது. சாதகங்கள் நிறைந்த நன்மைகள் தரக்கூடிய மாற்றங்களாக அமைந்துள்ளது.

சுக்கிரனால் லாபம்

சுக்கிரனால் லாபம்

இந்த மாதம் உங்க ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் சனியோடு சூரியன் சஞ்சரிக்கிறார். மாத பிற்பகுதியில் 10ஆம் வீட்டிற்கு நகர்வது சிறப்பு. சனிப்பெயர்ச்சி ரிஷபத்திற்கு பாக்ய சனியாக உள்ளது. நிறைய அதிர்ஷ்டங்கள் நடைபெறும். பண வரவு அதிகமாக இருக்கும். அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதம். இந்த மாதம் சனி சூரியனுடன் இணைந்து ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வேலை மாற்றம் தொடர்பான யோசனை ஏற்படும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும். செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனமாகவும் விழிப்புணர்வுடன் செல்வது அவசியம். லாப ஸ்தானத்தில் உங்க ராசி நாதன் உச்சம் பெற்ற சுக்கிரன் உற்சாகத்தை தருவார். சுக்கிரதிசை நடப்பவர்களுக்கு ரொம்ப நல்ல காலம்.

குரு சுக்கிரனால் நன்மை

குரு சுக்கிரனால் நன்மை

உங்களுக்கு இனி ஈசியாக உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் வாசலை தேடி வரும். இது நாள் வரை உங்களுக்கு சங்கடங்களை மட்டுமே கொடுத்து வந்த சனிபகவான் இனி சந்தோஷங்களைத் தரப்போகிறார். நீங்க நினைத்தது நடக்கும் காலம் வந்து விட்டது. வேலையில் மாற்றம் வீடு மாற்றம் நல்லதாக நடக்கும். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்க உடல் நிலையும் மன நிலையும் உற்சாகத்தை கொடுக்கும். திருமணம் கை கூடி வரும். கல்வியில் உயர்வு நிலை ஏற்படும். சொத்துக்கள் வாங்க முயற்சி செய்யலாம். குரு ஆட்சி பெற்றிருக்கிறார். உங்க ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. உங்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகமாகும் மாதமாகும்.

சுகமான பதவி தேடி வரும்

சுகமான பதவி தேடி வரும்

சூரியன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சனியோடு சஞ்சரிக்கிறார். கவனமாக இருக்க வேண்டிய காலம். அஷ்டம சனி வந்திருப்பதால் அச்சம் வேண்டாம். விபரீத ராஜயோக காலம். அஷ்டமாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. குரு களத்திர ஸ்தானத்தில் ஆட்சி பெற்றிருக்கிறார்.
புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். உங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது நிதானமாக போங்க உங்க தசாபுத்தி சாதகமாக இருந்தால் எந்த சங்கடங்களும் வராது. ஒன்பதாம் வீட்டில் புதன், சுக்கிரன் இணைந்திருப்பது சாதகம். மாத ஆரம்பத்திலேயே சுக்கிரன் பத்தில் உச்சம் பெற்றிருக்கும் காலத்தில் உங்களுக்கு சுகமான பதவி கிடைக்கும்.

அவசரம் வேண்டாம்

அவசரம் வேண்டாம்

சனி எட்டில் இருந்தாலும் சனியின் பார்வை சுக்கிரன் மீது விழுவது சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. தை மாதத்தில் நிச்சயமாகி மாசியில் கெட்டி மேளம் கொட்டப்போவது நிச்சயம். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். காதல் மலர்ந்து கல்யாணத்தை நோக்கி நகர்த்தும். புதிய பிசினஸ் செய்வதற்கு பதிலாக வெளிநாட்டிற்கு செல்வது நன்மையை தரும். புதிய முதலீடுகள் வேண்டாம். இடமாற்றம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் ஆனால் அவசரப்பட வேண்டாம். பிரச்சினைகள் எதுவும் வராமல் இருக்க நீங்கதான் ஜாக்கிரதையாக இருங்க. புதிய வண்டி வாகனங்கள் எதுவும் வாங்க வேண்டாம். வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம். புது வேலைக்கு போகும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பண்ணுங்க. திருமணம் முடிந்து குழந்தைக்காக ஏங்கி தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.

கவனம் தேவை

கவனம் தேவை

கடக ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் குரு, செவ்வாய் குதூகலத்தை தருவார்கள். சூரியன் ஏழாம் வீட்டில் சனியோடு சஞ்சரிக்கிறார். கண்டச்சனி என்பதால் கவலை வேண்டாம். சுக்கிரன் புதனோடு எட்டாம் வீட்டில் இருக்கின்றனர். 13ஆம் தேதிக்கு மேல் சூரியன் நகர்ந்து எட்டாம் வீட்டிற்கு போகிறார். இந்த மாதத்தில் புதிய வேலை கிடைத்தாலும் எந்த முடிவும் எடுக்காதீங்க. இருக்கிற வேலையை விட்டு விடாதீங்க. உங்களுக்கு கண்டங்கள் வருமா என்று நினைக்காதீர்கள் உங்க ஜாதகத்தில் கிரகங்கள் கூட்டணி எப்படி என்பதைப்பொறுத்து கண்டங்கள் ஏற்படுமா என்று பார்க்கலாம். கிரகங்கள் கூட்டணி நகர்வு இந்த மாதம் உங்களுக்கு சுமார்தான். இந்த மாதம் யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்காதீங்க.

பொறுமை தேவை

பொறுமை தேவை

முதலீடுகள் எதையும் பெரிதாக செய்யாதீர்கள். கூட்டணி தொழில் வேண்டாம். இருக்கிற வேலை எதையும் விடாதீங்க. வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ ரொம்ப வாக்குவாதங்கள் வேண்டாம். வேலைப்பளுவினால் மன அழுத்தம் ஏற்படும். புத்திசாலித்தனமாக அதை எதிர்கொள்வீர்கள். உங்க சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு நீங்க சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிங்க. உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் நிறைய பணவரவு அதிகமாகும். உங்க வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். பிப்ரவரி மாதம் நிதானமாக அடி எடுத்து வைப்பது அவசியம். இந்த மாதம் பொறுமையோடு இருங்க பாதிப்பு எதுவும் ஏற்படாமல் கடந்து விடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+