மணப்பெண்ணாய் ஜொலித்த மதுரை மீனாட்சி அம்மனுக்கு என்னென்ன நகைகள் இருக்கு தெரியுமா?
மதுரை மீனாட்சி அம்மன் மணமகள் கோலத்தில் அணிந்திருந்த நகைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டது.
மதுரை: மீனாட்சி அம்மன் திருவிழாக்காலங்களில் அணியும் நகைகள் பக்தர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும். மாலை சூடி மணப்பெண்ணாய் காட்சி அளித்த மதுரை மீனாட்சியின் மாணிக்க மூக்குத்தியும் அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் பக்தர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டது. அம்மன் என்னென்ன நகைகளை அணிந்திருந்தார் என்று பார்க்கலாம்.
மதுரையை ஆண்ட மாமன்னர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தங்கம், வைரம், வைடூரியம், நவ ரத்தின ஆபரணங்கள் செய்து காணிக்கையாக அளித்தனர். மதுரை மீனாட்சி அம்மன் மீது கொண்ட பக்தியின் காரணமாக பாண்டிய மன்னர்கள், வெளிநாட்டினர், பக்தர்கள் அள்ளிக் கொடுத்த முத்துக்கள் பதித்த தங்க, வைர, வைடூரிய நகை குவியல்கள் ஏராளமாக உள்ளன.
இந்த நகைகள் திருவிழாக்களின் போது முக்கியமாக 12 நாள் சித்திரை திருவிழா உற்சவங்களில் அம்மன், சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. இந்த அலங்காரத்தை காண கோடி கண்கள் வேண்டும்.

மீனாட்சி அம்மனின் நகைகள்
மீனாட்சி அம்மன் அணிந்திருக்கும் ஆபரணங்கள் அனைத்திலும் முத்து, மரகதகற்கள், வைரம், வைடூரியம், கோமேதகம், கெம்பு, பவளம், மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரிய முத்து மேற்கட்டி இதில் இருதலையாளி, கிளி, புலி, பறவைகள், தாமரைப்பூ, சூரிய காந்தியின் உருவங்கள் 71,755 முத்துக்கள் பதிந்துள்ளன. முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்தங்கிகள், முத்து மாலைகள். முத்துக் கடிவாளம் ஆகிய முத்தாரங்கள்.

மீனாட்சியின் பட்டாபிஷேக கிரீடம்
மீனாட்சி அம்மன் கையில் பிடித்திருக்கும் ஒற்றைக்கிளி பெரிய முத்துக்களால் ஆனது. பட்டாபிஷேக கிரீடம், இதன் எடை 134 தோலா. 920 மாணிக்கம், 78 பலச்ச வைரம், 11 மரகதம், 7 நீலம், 8 கோமேதகம் பகிக்கப்பெற்றது.

வைர கிரீடம்
வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம். அதன் அடிப்பகுதி சுற்றளவு 20 அங்குலம். சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்தது.

ரத்தின செங்கோல்
பட்டாபிஷேகத்தின் போது அம்மன் கையில் வைத்திருந்த ரத்தின செங்கோல், இதன் எடை 67 தோலா. இதில் 761 சிவப்பு கற்கள், 21 பலச்ச வைரங்கள், 269 மரகதம், 44 முத்துக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாசுமாரை கிரீடம், தலைப்பாகை கிரீடம். அம்மன் தங்க கவசம் 7 ஆயிரம் கிராம் எடையுள்ளது.

நீல நாயக பதக்கம்
நீலநாயக பதக்கம் மன்னர் திருமலை நாயக்கமன்னர் அளித்தது. ஆபரணங்களில் இதுவே மிக அற்புதமானது. எந்த பக்கம் பார்த்தாலும் பளபளப்பும், ஒளியும் ஊடுறுவி பளிச்சிடும். இதன் எடை 21 தோலா. இதில் 10 பெரிய நீல கற்கள், 2 கெம்பு, 1 கோமேதம் பதிந்துள்ளது.

தங்க காசுமாலை
பெரிய அளவில் 2 வாகன பதக்கங்கள். ரோமானிய காசுமாலை. இதில் தங்க ரோமன் 48 காசுகள் 50 தங்க மணிகளுடன் கோர்க்கப்பட்டுள்ளன. இதேபோல் வெளிநாட்டினர் கொடுத்த காசுமாலை. கிழக்கத்திய கம்பெனி வழங்கிய 73 தங்ககாசுகளுடன் கூடிய காசுமாலை உள்ளது. இடுப்பில் கட்டும் நாகர் ஒட்டியாணம். இதில் 113 மாணிக்க கற்கள், 28 பலச்ச வைரம், 8 மரகத கற்கள், 66 முத்துக்கள் பதித்தது. இதன் எடை 33 தோலா.

தங்க மிதியடிகள்
அம்மனின் திருவருடிகள் தாங்கும் தங்க மிதியடிகள். தங்க மிதியடிகள் ஒன்றின் எைட 27 தோலா. 211 சிவப்பு கற்கள், 36 மரகத கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொன்றின் எடை 28 தோலா. 211 சிவப்பு கற்கள், 40 பலச்ச வைரம், 36 மரகத கற்கள், 2 நீலம், 2 முத்து, 2 வைடூரியம் பதிக்கப்பெற்றது. இந்த விவரங்கள் அனைத்தும் 1974ல் நடைபெற்ற குடகுழுக்கு விழா மலரில் இடம் பெற்றுள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications