மீனம் ராசியில் ஆட்சி பெற்ற குருவுடன் கூட்டணி சேரும் உச்சம் பெற்ற சுக்கிரன் - யாருக்கெல்லாம் யோகம்?
மீன ராசியில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருக்க சுக்கிரன் உச்சம் பெற்று அமரப்போகிறார். இருவரும் ஒன்றாக ஒரே ராசியில் இணைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: குருவும் சுக்கிரனும் எதிர் எதிர் துருவங்கள் இருவரும் ஒரே ராசியில் இணைந்திருந்தால் அவர்களுக்கு நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் ஏற்படும் காரணம் குரு கொடுப்பதை சுக்கிரன் தடுப்பார். சுக்கிரன் கொடுக்க நினைப்பதை குரு தடுப்பார். மீன ராசியில் குரு ஆட்சி பெற்று அமர்ந்திருக்க சுக்கிரன் உச்சம் பெற்று அமரப்போகிறார். வரும் 27ஆம் தேதி முதல் குருவும் சுக்கிரனும் ஒன்றாக ஒரே ராசியில் இணைவதால் எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் குருபகவான் இயற்கை சுபர் தேவர்களுக்கு குருபிரகஸ்பதி. அதே போல மற்றொரு சுப கிரகமான சுக்கிரன் அசுரர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர். குரு வேத மந்திரங்களுக்கு எல்லாம் உரியவர். சுக்கிரன் மாய மந்திரங்களுக்கும் தந்திர வித்தைகளுக்கும் மாந்திரீக தாந்த்ரீக, வசிய மந்திரங்களுக்கு உரியவர். குருபகவான் மனித வாழ்க்கையில் திருமணம், புத்திர பாக்கியம், ஆஸ்தி, சொத்து சுகம், முன்னோர்கள் நிலையான புகழ், அரசியல் வெற்றி, பொதுமக்கள் சேவை அனைவரும் விரும்பும் மனிதராக இருப்பது ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கிறார்.
சுக்கிர பகவான் அசுரர்களுக்கு குருவாக இருப்பவர். இவருடைய பெயர் சுக்கிரசாரியார் என்றும், பார்க்கவன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமானை நினைத்து தவம் செய்து, அமிர்த சஞ்சீவி என்ற மந்திரத்தை கற்றார். இந்த மந்திரத்திற்கு ஒரு முக்கிய ஆற்றல் இருக்கிறது. அது என்னவென்றால், இறந்தவர்களுக்கு மீண்டும் உயிர் தரும் ஆற்றல் வாய்ந்த மந்திரம் அது. சுக்கிரபகவானின் நல்ல குணத்தை கண்டுதான் சிவபெருமான் இந்த மந்திரத்தை சொல்லிகொடுத்தார். இவருடைய வாகனம் கருடன். பெருமாளுக்கு உகந்த கருடவாகனம் பெற்றவர். பார்ப்பதற்கு வெள்ளை உருவமாக இருப்பதால் இவர் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறார். எதிரியின் வீடான குருவின் வீட்டில் மீனம் ராசியில் உச்சம் அடையும் ஒரே கிரகம் சுக்கிரன்தான். இப்போது கும்ப ராசியில் உள்ள சுக்கிரன் இன்னும் சில நாட்களில் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு சுக்கிரன் கூட்டணி 12 ராசிக்காரர்களுக்கு சில மாற்றங்களை ஏற்படுத்தும்.

மேஷம், ரிஷபம்
மேஷ ராசிக்காரர்களே விரைய ஸ்தானமான 12வது வீட்டில் குரு, சுக்கிரன் இணைவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. ரிஷபம் ராசிக்காரர்கள லாப ஸ்தானத்தில் குருவும், சுக்கிரனும் இணைவதால் தம்பதியரிடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.

மிதுனம், கடகம்
மிதுன ராசிக்காரர்களே சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும் காலம் இது. இசை, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களே 9வது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் குருவோடு சுக்கிரன் இணைந்திருப்பது குதூகலமான அமைப்பாகும். வெளிநாட்டு பயணம் நன்மையை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்களே சமூகத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும் காலம் இது. இசை, படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களே 9வது வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் குருவோடு சுக்கிரன் இணைந்திருப்பது குதூகலமான அமைப்பாகும். வெளிநாட்டு பயணம் நன்மையை தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்மம், கன்னி
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம குருவோடு எட்டாவது வீட்டில் சுக்கிரனும் மறைவதால் உங்களைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினாலும் கண்டு கொள்ள வேண்டாம். முக்கிய முடிவுகளை ஒத்திப்போடுவது நல்லது. கன்னி ராசிக்கு 7வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைவதால் குடும்பத்தில் தேவையில்லாத பேச்சுக்களில் நேரத்தை செலவிட வேண்டாம். பணம் விசயமாக யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

துலாம், விருச்சிகம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 6வது வீட்டில் குருவுடன் சுக்கிரன் இணைவதால் வேலைப்பளு அதிகரிக்கும். தனிமையாக உணர்வீர்கள். விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மனது முழுக்க காதல் உணர்வுகள் நிரம்பி வழியும். 5வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணைந்து இருப்பதால் காதலர்கள் இணைந்து இருக்கக் கூடிய காலம் இதுவாகும்.

தனுசு, மகரம்
தனுசு ராசிக்காரர்களுக்கு 4வது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணையப்போவதால் பயணங்களினால் பலன் கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. காதலர்கள் பொறுமை அவசியம். மகரம் ராசிக்காரர்களே முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் குருவும், சுக்கிரனும் இணையப்போகின்றனர். சிறு பயணங்களால் பலன்கள் கிடைக்கும். உங்களைப் பற்றி புறம் பேசுபவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள்.

கும்பம், மீனம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டாவது வீடான லாப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் இணையப்போவதால் குடும்பம், பணம் விசயங்களில் சாதகமான செயல்களால் நன்மைகள் நடக்கும். மீன ராசிக்காரர்களே உங்க ஜென்ம ராசியில் குரு உடன் சுக்கிரன் இணையப்போவதால் பிரிந்து சென்ற உறவுகள் இணையும் காலம் இது. சந்தோஷ தருணங்கள் அதிகம் நடைபெறும் காலம்
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications